Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

##~##

இந்த வாரம் கொண்டைக்கடலையின் விலைப்போக்குக் குறித்து விரிவாகச் சொல்கிறார் இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் கமாடிட்டி மற்றும் ஃபாரக்ஸ் பிரிவின் தலைவர் மனோஜ்குமார் ஜெயின்.

 கொண்டைக்கடலை! (chana)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ராபிப் பருவத்தில் இந்தியாவின் பருப்பு வகைகளின் உற்பத்தி சுமார் 70% -ஆக இருக்கும். அரசு முன்னரே மதிப்பிட்டபடி, ராபிப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி 138 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு அதிகமாகும். அதிகப்படியான விதைப்புக் காரணமாக உற்பத்தி அதிகரிக்கும் என்றும், இதன்காரணமாக மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்படியான குளிர் காரணமாக அதிகளவு உற்பத்தி செய்யும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பயிர் சேதமடைந்துள்ளது. இதனால் உற்பத்திக் குறைந்து விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், கொண்டைக்கடலை இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்குகளில் அதிகளவு இருப்பு மற்றும் அதிகளவு உற்பத்தி, ஏதுவான காலநிலைக் காரணமாக, வரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

அக்ரி கமாடிட்டி!

டெக்னிக்கல்படி, கொண்டைக் கடலை (பிப்ரவரி கான்ட்ராக்ட்) சப்போர்ட் லெவல்- ரூ.2,920. ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.3,090. அடுத்த 15-20 டிரேடிங் சீஸன்களில் விலை ஏற்றஇறக்கத்துடனே காணப்படும். பரிந்துரை: ரூ.2,950 லெவலில் வாங்கலாம். கட்டாய ஸ்டாப்லாஸ்: ரூ.2,900. இலக்குவிலை: ரூ.3,070.''

மிளகு! (Pepper )

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் உள்நாட்டுத் தேவையின் காரணமாக மிளகின் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. கொச்சியில் ஸ்பாட் சந்தைகளில் 100 கிலோ மிளகின் விலை ரூ.49,000-ஆக வர்த்தகமானது. உள்நாட்டுத் தேவை, அடுத்த வருடம் 48,300 டன்கள் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் மிளகு உற்பத்தி 6,500 டன்கள் குறைந்து 3,33,500 டன்களாக இருக்கும். அதாவது, 2 சதவிகிதம் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலை அதிகரிக்கலாம்.

ஏலக்காய்! (Cardamom)

ஸ்பாட் சந்தைகளில் தினவரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் விலை குறைந்தே வர்த்தகமானது. எனினும், உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாக அதிகப்படியான விலை வீழ்ச்சி தடுக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று ஏலக்காய் ஏலமிடும் சந்தைக்கு மொத்த வரத்து 85 டன்னாக இருந்தது.

ஸ்பாட் சந்தைகளில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.572-ஆகவும், அதிகப்படியான விலை ரூ.785-ஆகவும் இருந்தது. மேலும், ஜனவரி 6 வரையிலான மொத்த வரத்து 12,416 டன்னாக எதிர்பார்க்கப்பட்டது. இதுவே, கடந்த வருடம், இதே காலத்தில் 6,306 டன்னாக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!

வரும் வாரத்தில் ஏலக்காய் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். தேவை அதிகரித்தால் விலையில் மாற்றம் இருக்கலாம்.

மிளகாய்! (Chilli)

கடந்த வாரம் தேவைக் குறைவு மற்றும் அதிகப்படியான உறபத்திக்காரணமாக விலை குறைந்திருந்தது. வரும் நாட்களில் புதிய பயிர் வரத்து அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மிளகாய் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுச் சந்தைகளில் போதுமான மிளகாய் இருப்பதால் விலை மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம். அதிகப்படியான ஈரப்பதம் நிலவிவரும் இந்த நிலையில் போதுமான சூரியஒளி இல்லாத காரணத்தால் மிளகாய் தரம் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அக்ரி கமாடிட்டி!

வரும் வாரத்தில் அதிகப்படியான வரத்துகாரணமாக விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.