Published:Updated:

ஜஸ்ட் ரிலாக்ஸ்

கார் பயணமும் கடற்கரைக் காற்றும்! நீரை.மகேந்திரன்

##~##

டென்ஷனிலிருந்து விடுபடத் தீர்வு தேடுவதைவிட, டென்ஷன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம்.

''என் பிசினஸில் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட எனது தலையீடுத் தேவை என்பதால் எப்போதும் ஏதாவது  டென்ஷன் இருந்து கொண்டுதான் இருக்கும். கொஞ்சம் அந்தச் சூழலுக்கு நம்மைப் பழக்கிக்கொண்டால் எந்த டென்ஷன் இருந்தாலும் அதைச் சமாளித்துவிட முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேநேரத்தில் தனிப்பட்ட ரிலாக்ஸ்களும் அவசியமாகத்தான் இருக்கிறது. இதற்காக வேலைகளுக்கு இடையிலேயாவது நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ் ஆகிவிடுவேன். கார் பயணங்கள் எனக்குப் பிடித்தமானது. கார் பயணத்தின்போது இசைக் கேட்பதோ அல்லது வெளியில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்லும் போதோ டென்ஷன்களை யோசிக்கத் தோணாது.

ஜஸ்ட் ரிலாக்ஸ்

குறிப்பாக, வெளியூர்ப் பயணங்களை உண்மையில் வரமாகக் கருதுகிறேன். அப்போது அவசியம் என்றால் மட்டும்தான் நான் யாரையாவது தொடர்புகொண்டு பேசுவேன். தொலைபேசி நாட் ரீச்சபிள் என்கிறபோது வெளியிலிருந்து எவரும் நம்மைத் தொடர்புகொள்ள முடியாது. இதுபோன்ற நேரங்கள் டென்ஷன் இல்லாத நேரங்களாக இருக்கும்.

புதுச்சேரிக்குப் பயணிக்கிறேன் என்றால் கிழக்குக் கடற்கரைச் சாலையில்

கொஞ்சநேரம் காரை நிறுத்தி, கடற்காற்றை வாங்குவதும், கடலை ரசித்துக்கொண்டே செல்வதும் பிடித்தமானது. உண்மையில் டென்ஷனிலிருந்து விடுபடத் தீர்வு தேடுவதைவிட, டென்ஷன் இல்லாமல் இருப்பதுதான் இன்னும் ஆனந்தம். அதாவது, தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும் நேரங்கள் நான் டென்ஷனுக்கு வெளியில் இருக்கும் நேரங்கள்! அந்த நேரத்தை நான் முழுமையாக அனுபவிப்பேன்!''

                 படம்: வீ.நாகமணி.