Published:Updated:

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

தொடர்ச்சியான முதலீடே வளர்ச்சிக்கு வழி!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

தொடர்ச்சியான முதலீடே வளர்ச்சிக்கு வழி!

Published:Updated:
##~##

இதுவரை நிதி ஆலோசனைக் கேட்டு வந்தவர்களிலேயே ஏ.எம்.பிரபுசேகர் கொஞ்சம் வித்தியாசமானவர். செலவுகள்போக மீதி இருக்கும் பணத்தைக்கொண்டு எதிர்காலத் தேவைக்கான முதலீட்டின் மீது கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற முனைப்புடன், குடும்பத்தின் நிதி விவரங்களைத் தெளிவாக மெயில் அனுப்பி இருந்தார்.

சேலம் மாவட்டத்தில் பிரபல தனியார் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணியாற்றி வருகிறார் ஏ.எம்.பிரபுசேகர். பிடித்தம்போக மாதம் 26,500 ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார். இவரது மனைவி எஸ்.இந்துராணி, தற்போது வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். எம்சிஏ பட்டதாரி என்பதால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேலைக்குச் செல்வார் என்றும் பிரபுசேகர் சொன்னார்.  இவர்களின் நான்கு வயது மகன்  சச்சின்பிரனவ், எல்கேஜி படித்து வருகிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவு தென்படுகிறது!

அவர் அனுப்பியிருந்த இ-மெயிலில், அவர் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார், அந்த ஃபண்டுகளில் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடர்கிறார், எதனால் மற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுத்தப்பட்டன என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். நிதி விவரங்களைத் தெரிவித்திருந்தவிதம் குடும்பப் பொருளாதாரத்தில் இவரின் தெளிவைப் புரியவைத்தது.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

இன்றுவரை எந்தவொரு கடனும் இல்லாமல் இருப்பது  இவரது சிறப்பு. இருப்பினும் குடும்பத்தின் நிதி மேலாண்மையில் இன்னும் சில மாற்றங்களை மேற்கொண்டு, எதிர்காலத்துக்குத் தேவையான முதலீடுகளைப் புதிதாகச் செய்யவேண்டி உள்ளது.

தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் செலவுகள் போக மீதி இருக்கும் 11,500 ரூபாயை (இதில் ஏற்கெனவே செய்துவரும் சில முதலீடுகளும் அடக்கம்) எதிர்காலத்துக்காக உடனே முதலீட்டை

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

ஆரம்பிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறார். இவருக்கு இருக்கும் தேவைகள் மகனின் கல்வி, திருமணம், வீடு வாங்குதல் மற்றும் ஓய்வுக்கால முதலீடு போன்றவை. இந்தத் தேவைகளுக்காக ஏற்கெனவே ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அதில் இப்போது நடைமுறையில் இருப்பது மூன்று ஃபண்டுகள்தான். மற்ற ஃபண்டுகளில் போடும் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் பணத்தைச் சொந்த செலவுக்காக எடுத்துக்கொண்டார்.

இடையில் எடுக்கக்கூடாது!

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, முதலீட்டை நீண்டகால நோக்கில் ஆரம்பித்து இடையில் ஏற்படும் செலவுகளுக்காக அதை நிறுத்தி அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வதுதான். இதனால் முதலீடுகள் வளராமல் போவதுடன், நமது தேவைகளுக்கான முதலீட்டுக் காலமும் குறைந்துகொண்டே போகும். இறுதியில் ஒட்டுமொத்தமாக ரிஸ்க் எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.

பிரபுசேகரும் இதே தவறைத்தான் செய்திருக்கிறார். அவசரகால நிதியைச் சேர்க்காமல் விட்டதுதான் இவரின் முதலீட்டை உடைக்கக் காரணமானது. இந்தத் தவறை இன்னொருமுறை செய்யாமல் இருப்பது நல்லது. அதற்கு முதலில் மூன்று மாதத்துக்குத் தேவையான அவசரகால நிதியைச் சேமிக்க வேண்டும். தற்போது 25,000 ரூபாயை லிக்விட் அசெட்டாக வைத்திருக்கிறார். அதனுடன் மீதிப் பணத்தைச் சேர்த்து வங்கி டெபாசிட்டில் வைத்துக்கொள்வது நலம்.

லைஃப் மற்றும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ்!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

நம்மில் பெரும்பாலானவர்கள் கோட்டைவிடுவது இந்த இன்ஷூரன்ஸ் விஷயத்தில்தான். ஆனால், இதை பிரபுசேகர் பாதி அளவு சிறப்பாகக் கையாண்டிருந்தார். மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மீது அதிகமாக அக்கறை காட்டாமல் தனக்கு எது தேவையோ அதை எடுத்திருந்தார். தன் பெயரில் 50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் 20 ஆண்டு முதிர்வுகொண்ட ஒரு லட்சம் மதிப்புள்ள பாலிசி ஒன்றையும் எடுத்திருந்தார். தன் மகன் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் முதிர்வுத் தொகை மதிப்பீட்டில் இரண்டு பாலிசிகளையும் எடுத்து வைத்திருக்கிறார். குடும்பத்தில் உள்ள மூவருக்கும் சேர்த்து மெடிக்கல் இன்ஷூரன்ஸாக (ஃப்ளோட்டர் பாலிசி) 3.7 லட்சம் ரூபாய்க்கு எடுத்துவைத்திருக்கிறார். இந்த விஷயத்தில் இவர் இன்னும் செய்யவேண்டியதெல்லாம், வருமானம் மற்றும் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவர் தன் பெயரில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்னுமொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். 3.7 லட்சமாக இருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸை 5 லட்சமாக அதிகரித்துக்கொள்வதும் அவசியம்.

மகனின் கல்வி மற்றும் திருமணம்!

மகனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் மிகுதியாக இருக்கிறதாம். அதனால் அவனை கிரிக்கெட் வீரனாக்க வேண்டும் என பிரபுசேகர் நினைக்கிறார். அதனால் அவனது படிப்பு குறித்த முடிவை அவன் பெரியவனானதும் அவனிடமே ஒப்படைத்துவிடுவதாகவும் தெரிவித்திருந்தார். எதுவாக இருப்பினும் 13 வருடங்களுக்குப் பிறகு அவனுக்கான கல்விச் செலவுக்கு 50 லட்சம் ரூபாயும், 19 வருடங்களுக்குப் பிறகு திருமணச் செலவுக்கும் 50 லட்சம் ரூபாயும் தேவைப்படும் என்று உறுதியாகச் சொன்னார்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

கல்விக்கு என்று எடுத்துக்கொண்டால், இப்போது நடைமுறையில் இருக்கும் முதலீடுகளான பிபிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், மகனின் பெயரில் எடுத்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் முதிர்வு என மொத்தம் 15 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதித் தேவைப்படும் 35 லட்சம் ரூபாய்க்காக மாதம் 5,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். இந்த முதலீட்டை வருடா வருடம் 10% அதிகரித்து வருவது நலம்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:

திருமணத்துக்கு இன்னும் 19 வருடங்கள் இருக்கிறது என்பதால் முதலீடு செய்யும் தொகையில் அளவு குறையும். 50 லட்சம் ரூபாய் தேவையை அடைய இன்றிலிருந்து மாதம் 2,400 ரூபாயை எஸ்ஐபி முறையில் இப்போது முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளில் தொடர்வது நல்லது.

ஓய்வுக்காலத்துக்கு!

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யும்போது தங்களது எதிர்காலப் பாதுகாப்புக்காகவும் முதலீட்டைத் தனியாக  ஒதுக்குவதுதான் அவசியம்.  அந்தவகையில் பிரபுசேகர் தனது ஓய்வுக்காலத்துக்காக மாதம் 2,800 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யவேண்டும். இந்தப் பணம் அவருக்கு நல்ல வருமானம் கொடுத்து 2.2 கோடி ரூபாயை ஓய்வுக்காலத்தில் ஈட்டிக் கொடுக்கும். அந்தப் பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டில் சேமித்து வைப்பதன்மூலம் ஓய்வுக்காலம் நிம்மதியாக அமையும்.

வீடு வாங்குவது என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்றாலும், மனைவி வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு அந்தத் தேவையையும் பூர்த்திச் செய்துகொள்ளலாம். இப்போது பிரபு சேகருக்கு 31 வயது; மகனுக்கு நான்கு வயதுதான் என்பதால் முதலீட்டுத் தேவைக்கான காலஅளவும், பிரபுசேகர் ஓய்வுபெறுவதற்கான கால அளவும் அதிகமாக இருக்கிறது. அதனால் இனி செய்யும் முதலீடுகளை இடையில் நிறுத்தாமல், தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்.

 ஹெல்த் செக்-அப் ரேட்டிங்!

கட்டுப்பாடான செலவுகள், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி, பரவலான முதலீடு, அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டுக் குணங்கள், அதன் செயல்பாடு, ரெகுலராக முதலீடு செய்யும் பண்பு முதலியவற்றை வைத்து இவருக்கு 75% மார்க் தரலாம்.''

தொகுப்பு: செ.கார்த்திகேயன்,
படங்கள்: க.தனசேகரன்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்:
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism