Published:Updated:

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

Published:Updated:
##~##

''உள்ளதைச் சொல்வேன், நல்லதைச் சொல்வேன்’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''சொல்லுங்கள்'' என அவர் பேச்சை நாம் குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்.

''இந்த வாரம் சந்தை இறங்கியதற்கான காரணங்கள் பல. முதல் காரணம், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், கடன் பத்திரங்களை வாங்குவதற்கான தொகையை 75 பில்லியன் டாலரிலிருந்து 65 பில்லியன் டாலராகக் குறைத்திருப்பது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உடனே வலுவடைய, அந்த ஊர் பங்குச் சந்தை ஆட்டம் கண்டது. அண்ணனுக்குத் தொடை நடுங்கினால், தம்பிக்குக் கை நடுங்காதா என்ன? உடனே உலகம் முழுக்க உள்ள சந்தைகளும் சரிந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே நெருப்பு எரிகிறபோது பலமான காற்று அடித்தால், தீ கொழுந்துவிட்டு எரியத்தானே செய்யும்? ஃபெடரல் ரிசர்வ் பிரச்னையால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியச் சந்தையை எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரியும் இறக்கிவிட்டுவிட்டது. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு சந்தை கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது. இனி, அடுத்த வாரம் மேல்நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். நீண்டகால முதலீட்டாளர்கள் மட்டும் நல்ல பங்குகளை வாங்கவும். மற்றபடி டிரேடர்கள் நாணயம் விகடனில் டிரேடர் பக்கங்களையும் ஸ்ரீராம் தரும் டெக்னிக்கல் பரிந்துரையையும் ஃபாலோ செய்யவும்'' என்றார்.

''அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பாண்டு பத்திரங்களை வாங்குவதைக் குறைப்பதால் நமக்கு ஏதாவது பாதிப்பு வருமா?'' என்று கேட்டோம்.

''அமெரிக்கா கடன் பத்திரம் வாங்குவதைக் குறைப்பதால் உடனடியாக இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு  வராது. மேலும், அந்நிய நேரடி முதலீடுகள் மீண்டும் வலுவடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது. தவிர, அமெரிக்கா இனி ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பில்லியன் டாலர் அளவுக்கு பாண்டு வாங்குவதைக் குறைக்கவிருப்பதால், இன்னும் சில மாதங்களில் அது ஒரு வழக்கமான செய்தியாக மாறிவிடும்.

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

அதேசமயம், இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே நிதிப் பற்றாக்குறை முழு வருடத்துக்கான பட்ஜெட்டில் 95 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. சிதம்பரம் இதை எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ'' என்றவருக்கு, ஒரு தட்டில் இரண்டு முறுக்கை வைத்துத் தந்தோம். அதைச் சாப்பிடத் தொடங்கியவரிடம், ''டிசம்பர் காலாண்டில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 28% வீழ்ச்சிக் கண்டுள்ளதே?'' என நாம் அடுத்தக் கேள்வியைக் கேட்டோம்.

''எல்லாம் ஆர்பிஐ-ன் நடவடிக்கைதான் காரணம். அதாவது, கடன் வழங்கும் அளவைக் குறைத்தது, கடன் வாங்கும்போது பான் கார்டு உள்ளிட்டத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆர்பிஐ சொன்னதால் பலரும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது குறைந்துள்ளது. இது முத்தூட் நிறுவனத்தையும் பாதித்துள்ளது. அதேநேரத்தில், அண்மையில் கடன் வழங்கும் அளவை 60-லிருந்து 75 சதவிகிதமாக ஆர்பிஐ அதிகரித்துள்ளதால் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்'' என்றார்.

''கிராமப்புறங்களில் வருமானம் அதிகரித்துள்ளதுதான்  ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிகர லாபம் அதிகரிக்கக் காரணமா?'' என்று வினவினோம்.

''டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 21.91% அதிகரித்து, ரூ.1062.3 கோடியாக உள்ளது. நிகர லாப அதிகரிப்புக்கு இந்த நிறுவனம் செலவுகளைக் கணிசமாகக் குறைத்ததே காரணமாகச் சொல்கிறார்கள்'' என்றார்.

''பார்தி ஏர்டெல்லின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதே?'' என்று கேட்டோம்.

''இந்த அதிகரிப்பு முதலீட்டாளர் களைக் குஷிப்படுத்தி இருக்கிறது. செல்போன் சேவையில் முக்கிய நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் நிகர லாபம் தொடர்ந்து 15 காலாண்டுகளாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 115.1% அதிகரித்து ரூ.610 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதேகாலத்தில் ரூ.284 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் இலவச அழைப்புகளைக் குறைத்தது மூலம் இந்த அபரிமிதமான லாப அதிகரிப்பு நடந்துள்ளது'' என்றார்.

''ஐசிஐசிஐ பேங்க்-ன் நிகர லாபம் 13% அதிகரித்துள்ளதே?'' என்றோம்.

''ஐசிஐசிஐ பேங்கின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் ரூ.2,532 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த லாபத்துக்குக் காரணம் அதிக வட்டி வருவாய், லாப வரம்பு உயர்வு, வட்டிசாரா வருவாய் அதிகரித்தது போன்றவைகளாக உள்ளன. ஐசிஐசிஐ. பேங்க், வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அப்படிச் செய்யவில்லை என்றால் நிகர லாபம் இன்னும் அதிகரித்திருக்கும்'' என்று சொன்னார்.

''நம் ஊர் டிவிஎஸ் மோட்டாரின் லாபம் 31% கூடி இருப்பதைக் கவனித்தீர்களா?'' என்று கேட்டோம்.

''புதிய வாகன அறிமுகம் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பால் விற்பனை அதிகரித்து லாபம் உயர்ந்துள்ளது. இதன் இருசக்கர வாகன ஏற்றுமதி 22% அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 52% அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது'' என்று சொன்னார்.

''சங்க்வி குழுமத்துக்கு செபி ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளதே?'' என்று விசாரித்தோம்.

''எல்லாம் மோசடியாகப் பங்கு வர்த்தகம் மேற்கொண்டதற்குதான் இந்த அபராதம். சங்க்வி குழுமம், அதன்கீழ் செயல்பட்ட நகோடா டெக்ஸ்டைல்ஸ், காயத்ரி புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்குள்ளேயே பங்கு வர்த்தகம் செய்து பங்கு விலையைக் கணிசமாக உயர்த்தின. இதன்மூலம் சங்க்வி குழுமம் பெற்ற லாபம் ரூ.2.34 கோடி. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று விளக்கம் தந்தார்.

ஏறக்குறையப் புறப்படத் தயாரானவரிடம், ''நிறுவனங்களில் வாரிசுகளை நிமியப்பது பற்றி செபி அமைப்பு தீவிரமாக இருக்கிறதே?'' என்றோம்.

ஷேர்லக் - வட்டி இன்னும் உயரும்!

''டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கார்ல் ஸ்லைமின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து செபியின் இந்த முயற்சிக்கு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கு முதலீட்டாளர்களும் அமோக ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மாறும்போது அந்தப் பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்கவில்லை என்றால் முடிவு எடுப்பது தாமதமாகி அந்த நிறுவனத்தின் லாபம் குறைவதோடு செயல்பாடும் சீர்கெட்டுவிடும்.

உதாரணத்துக்கு, செபியின்  தலைவர் பதவியை யூ.கே. சின்ஹா ஏற்றுக்கொள்வதற்குமுன் யூடிஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவர் அந்தப் பதவியைவிட்டு வந்தபிறகு இன்னும் அந்த இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படவில்லை.

இதுபோன்ற பிரச்னை இனி எந்தவொரு நிறுவனத்துக்கும் வரக்கூடாது என்பதில் செபி உறுதியாக இருக்கிறது'' என்றவர், நம்மிடம் விடைபெறும் முன் சொன்ன செய்தி.

''மார்க்கெட் எதிர்பார்ப்புக்கு மாறாக 0.25% ரெப்போ ரேட் விகிதத்தை அதிகரித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம். பணவீக்கம் அடுத்தச் சில மாதங்களில் கணிசமாகக் குறையவில்லை எனில், இன்னும்கூட 0.25% உயர்த்தினாலும் ஆச்சர்யமில்லை. தான் வட்டியைக் குறைத்தாலும் வங்கிகள் குறைப்பதில்லை, வளர்ச்சிக்கு மூலதனம்தான் முக்கியம் என்றும் சொல்லியுள்ளார்.

அடுத்த ரவுண்டு வட்டி உயர்த்த இன்னும் சில மாதம் ஆகும் என்றாலும் இப்போதே ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே'' என்று சொல்லிவிட்டு,  தனது புல்லட்டில் ஏறிப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism