Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

Published:Updated:

கொத்துமல்லி! (Coriander)

##~##

''கொத்துமல்லி விளைச்சல் 2013-14 ராபிப் பருவத்தில் குறையும் என்பதால் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. நடப்பு பிப்ரவரி கான்ட்ராக்ட் விலை குவிண்டாலுக்கு ரூ.8,400 லெவலில் வர்த்தகமாகி வருகிறது. நீண்டகால கான்ட்ராக்ட்கள் ரூ.9,500 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 75% விலை அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2013-14-ல் மொத்த உற்பத்தி சராசரி உற்பத்தியைவிட 30-40% குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (சராசரி உற்பத்தி 4 லட்சம் டன்கள்).

அக்ரி கமாடிட்டி!

ராஜஸ்தானில் முக்கிய சந்தைகளான கோட்டா மற்றும் ராம்கான்ஜி மண்டிகளுக்கு வரத்து மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கும். நடப்புப் பருவத்தில் உற்பத்திக் குறைவு காரணமாக விலை குறைய வாய்ப்பில்லை. நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பினும், ஏற்றுமதிக் குறைவால் அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம். 2014-ல் விலை குவிண்டாலுக்கு ரூ.11,000 - 12,000 வரை எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் உற்பத்திக் குறைவு மற்றும் தேவைக் காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆமணக்கு விதை! (Castor seed)

கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் ரூ.3,000 - 3,850 என்ற நிலையில் இருந்த ஆமணக்கு விலை, டிசம்பரில் ரூ.5,050 வரை சென்றது. குஜராத் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புதிய வரத்து ஆரம்பித்துள்ள நிலையில், ஸ்பாட் சந்தைகளில் விலை ரூ.4,000 - 4,200 வரை வர்த்தகமாகி வருகிறது. 2013-14-ல் ஆமணக்கு உற்பத்தியானது இந்திய அளவில் 5.4% உயர்ந்தாலும் சில மாநிலங்களில் சிறிது முன்னேற்றம் சில மாநிலங்களிலும் மிகப் பெரிய அளவிலும் உற்பத்திக் குறைவும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திராவில் 56 சத விகிதமும், மஹாராஷ்ட்ராவில் 9.1 சதவிகிதமும் உற்பத்திக் குறைந்திருக்கிறது.  

அக்ரி கமாடிட்டி!

ஆமணக்கு சக்கை மற்றும் ஆயில் ஏற்றுமதி அதிகரித்ததால் குறைவான கையிருப்பு காணப்படுகிறது. தற்போது ஸ்பாட் மற்றும் ஃப்யூச்சர் சந்தைகளில் விலை குவிண்டாலுக்கு ரூ.4,000 - 4,200 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச அளவில் மொத்த ஆமணக்கு உற்பத்தியில் இந்தியா 55 - 60% பங்கு வகிக்கிறது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் கேக் சப்ளை செய்வதில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. வரும் வாரத்தில் குறைவான கையிருப்பு மற்றும் தேவைக் காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.''

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம்! (Jeera)

கடந்த வாரம் தேவைக் குறைவு மற்றும் ஜீரகம் உற்பத்திச் செய்யும் முக்கிய மாநிலங்களில் அதிகளவு உற்பத்திக் காரணமாக விலை குறைந்தே வர்த்தகமானது. அண்மையில் குஜராத் வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீரகம் உற்பத்திச் செய்யப்படும் பரப்பளவு, கடந்தாண்டைவிட 40%  அதிகரித்து 4,54,300 ஹெக்டேர் பரப்பளவில் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் ஜீரகம் கையிருப்பு 40,000 - 50,000 டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜீரகம் அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளான சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட அரசியல் பிரச்னை காரணமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், சீனாவில் இந்த ஆண்டு உற்பத்தி 4,000 - 5,000 டன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் வெளிநாட்டுத் தேவை உயர்ந்தால் விலை அதிகரிக்கலாம்.

மஞ்சள்! (Turmeric)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் மஞ்சள் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. காரணம், உற்பத்திக் குறைவு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவை அதிகரித்ததேயாகும். தற்போது ஆந்திரப்பிரதேசத்தில் தெளிவற்ற வானிலை காணப்படுவதால், அறுவடை பாதிக்கப்படலாம் என்று விவசாயிகள் மத்தியில் எண்ணம் நிலவிவருகிறது. எனினும், இந்தத் தரம் குறித்த அறிக்கைகளால் சந்தை விலையில் மாற்றம் இருக்கலாம்.

அதேசமயம், தரமான மஞ்சள் வரத்துக் குறைந்தும், தேவை அதிகரித்தும் உள்ளது. மேலும், புதிய வரத்தில்  அதிகளவு ஈரப்பதம் நிலவுவதும், போதிய அளவு கையிருப்பும்

மஞ்சள் விலையில் எதிரொலிக்கலாம். சந்தை அறிக்கையின்படி, நடப்பாண்டில் மஞ்சள் உற்பத்தி 52 லட்சம் பைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் 70 லட்சம் பைகளாக (1 பை - 70 கிலோ) இருந்தது. வரும் வாரத்தில் மஞ்சள் தேவைக் காரணமாக விலை அதிகரிக்கலாம்.

ஏலக்காய்! (Cardamom)

கடந்த வாரஇறுதியில் சர்வதேச நாடுகளில் இருந்து ஏலக்காய் தேவை அதிகரித்ததன் காரணமாக ஏலக்காய் விலை அதிகரித்தே வர்த்தகமானது. மேலும், அடுத்த சிலநாட்களுக்கு விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக்காய் விலை குறைந்திருப்பதால், உள்நாட்டுத் தேவை மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்பாட் சந்தைக்கு வரும் தின வரத்தும் சற்று குறைய ஆரம்பித் துள்ளது விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம். சில மாநிலங்களில் நிலவிவரும் குளிர் ஓரளவு குறைந்த பின்னர் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தின வரத்து குறைந்துவரும்பட்சத்தில் விலையிறக்கம் தடுக்கப்படலாம். வரும் வாரத்தில் தேவைக் காரணமாக விலை அதிகரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism