Published:Updated:

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்

Published:Updated:
##~##

டிவிடெண்ட் மூலம் அதிக வருமானம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாம் டிவிடெண்ட் யீல்டு மற்றும் டிவிடெண்ட் கவர் போன்ற விஷயங்களைக் கவனித்து, பங்குகளைத் தேர்வு செய்வதைப்பற்றிச் சென்ற இதழில் பார்த்தோம். சற்று ஆராய்ந்துப் பார்த்தால், அந்த டிவிடெண்டுகள் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன; பல பாடங்களைச் சொல்கின்றன.

ஒரு நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கிவருகிறது என்றால்,  அந்த நிறுவனத்தின் நிதி மேலாண்மை (Financial Management) மற்றும் பணவரத்து (Cash Flow) நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் தரத்தைக் காட்டுவதாகவே அது உள்ளது.

அந்த நிறுவனம் முதலீட்டாளர் களின் நண்பர்களாக இருக்க விரும்புகிறது (Shareholder Friendly).

அந்த நிறுவனம் மூலதனத்தை எவ்வாறு லாபகரமாக உபயோகப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறது.  

அந்த நிறுவனம், லாபத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் (Retaining profit) விருப்பம் இல்லாததாக இருக்கும். லாபத்தின் கணிசமான பகுதியை 'டிவிடெண்டாக’ வழங்கிவிடும். இதை 'டிவிடெண்ட் கொள்கை’ என்கிறோம்.  

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!

இந்தவகையான நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் போது அல்லது வேறு நிறுவனத்தைக் கையகப்படுத்த முடிவு செய்தாலோ, அதற்குத் தேவையான பணத்தை மூலதனச் சந்தை (Capital Market) அல்லது வங்கிகளிடமிருந்து பெறும். அந்தவகையில், ஒன்றுக்கு இரண்டு முறை தீர்க்கமாக ஆலோசித்து மற்றும் யோசித்தபிறகே தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முனைவார்கள்.

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!

இந்தவகையான மேலாண்மைக் குழுவின் கீழ் எத்தனையோ நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் பங்குகளை டிவிடெண்ட் யீல்டுக்காக வாங்கினால், எதிர்காலத்தில் அந்தப் பங்குகளில் விலை கணிசமாக உயர்ந்து, நமது மூலதனத்தின் மதிப்பைப் பெருமளவு உயர்த்தும்.  

எடுத்துக்காட்டாக, ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் மற்றும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளைக் குறிப்பிடலாம். இந்தப் பங்குகளின் விலை கடந்த 10 / 12 ஆண்டுகளில் மிகக் கணிசமாக உயர்ந்து, மல்டி பேக்கர்களாக மாறியிருக்கின்றன.

சில நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பங்கின் மீது வழக்கும் டிவிடெண்ட் தொகையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் Handsome Dividend என்று குறிப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பங்குகளின் 'டிவிடெண்ட் யீல்டு’ மிகக் குறைவாக இருக்கும். ஆனால், பங்கின் விலையேற்றம் நியாயமாக இருக்கும்.

நம்முடைய குறுகியகாலப் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு அதிக டிவிடெண்ட் யீல்டு உள்ள பங்குகளைத் தேர்வு செய்யலாம். நம்முடைய நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய குறைந்த டிவிடெண்ட் யீல்டு கொண்ட பங்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தவகை பங்கின் விலையில் நியாயமான ஏற்றம் இருக்கும்.

இந்தவகைப் பங்குகளை எப்படி இனம் கண்டுகொள்வது? இதற்கு நாம் பார்க்கவேண்டிய விகிதம் 'டிவிடெண்ட் பேஅவுட்’ (Dividend Payout ) என்கிற விகிதத்தைத்தான். டிவிடெண்ட் பேஅவுட் = ஒரு பங்கு டிவிடெண்ட் / ஒரு பங்கு வருமானம்.

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!

இது 'டிவிடெண்ட் கவர்’ விகிதத்துக்கு நேர்மாறானது. இந்த விகிதம், ஒரு நிறுவனம் தான் ஈட்டும் லாபத்தில் எவ்வளவு டிவிடெண்டாக வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் தொகைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, பேஅவுட் விகிதம் குறைந்துவந்தால், அந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சொல்வதையும், நிதிச் செயல்பாடு நன்றாக இருப்பதையும் காட்டுகிறது. இதன் பிரதிபலனை அந்த நிறுவனப் பங்குகளின் விலையேற்றத்தில் காணலாம். ஒரு பங்கு வருவாய், ஒரு பங்கு டிவிடெண்ட், பேஅவுட் விகிதம், பங்கின் விலை ஆகியவற்றுக்குத் தொடர்பு உள்ளன.  

வாசகர்களுக்காக இத்தகைய ஐந்து பங்குகளைத் தேர்வு செய்து கீழே தந்துள்ளோம். பொதுவாக, சந்தையில் இருக்கக்கூடிய தற்போதையச் சூழலை மனதில்கொண்டு சிறிது சிறிதாக நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது நன்மை செய்வதாக இருக்கும்.

டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!
டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism