Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சே.புகழரசி

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சே.புகழரசி

Published:Updated:

தங்கம்!

##~##

''அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாமாதம் வழங்கும் கடன் பத்திர அளவு 75 பில்லியன் டாலரிலிருந்து 65 பில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வர்த்தகமானது. அமெரிக்காவின் ஜிடிபி நான்காவது காலாண்டில் 3.2 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து, தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். மேலும், சீனாவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 15 வரை புத்தாண்டு விடுமுறை இருப்பதால் சீனாவில் தேவைக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சர்வதேச தங்கத்தின் விலை 20 நாள் மூவிங் ஆவரேஜைவிடக் குறைவாக வர்த்தகமாகி வருவதால் டெக்னிக்கலாக தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலை ஒரு அவுன்ஸ் 1,180 டாலர். வெள்ளிக்கிழமையன்று முடிவடையும் வர்த்தகம் இந்த விலைக்குக் கீழும் சென்றால் 1,120/1,085 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் குறுகிய கால சப்போர்ட் 28,300 ஆகும். இதற்கு கீழே சென்றால் 27,950 - 27,680 வரை செல்லலாம். ரெசிஸ்டன்ஸ் லெவல் -

ரூ.29,000-ஐ தாண்டும்பட்சத்தில் இலக்கு விலை ரூ.29,250 - 29,520.

பரிந்துரை: ஏப்ரல் கான்ட்ராக்ட் விற்கலாம் - ரூ.28,800 லெவலில். ஸ்டாப்லாஸ்- ரூ. 29,030. இலக்கு விலை - ரூ. 28,250 -28,000.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

வெள்ளி!

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து வெள்ளியின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். டெக்னிக்கல்படி, ரூ.44,300-ஐ தாண்டும்பட்சத்தில் ரூ.45,200 - 45,600 வரை செல்லலாம். சப்போர்ட் லெவல் ரூ.43,000-ஐ தாண்டி கீழே செல்லும்பட்சத்தில் ரூ.42,200 - 41,700 வரை செல்லலாம்.

பரிந்துரை: ரூ.44,450 - 44,500ல் விற்கலாம். இலக்கு விலை- ரூ.43,000- 42,200. ஸ்டாப்லாஸ் - ரூ.45,100.'

இயற்கை எரிவாயு!

''அமெரிக்காவில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாகக் கடந்த வாரம் இயற்கை எரிவாயு விலை 18 சதவிகிதம் அதிகரித்தது. சர்வதேச வர்த்தகத்தில் இயற்கை எரிவாயு விலை 5.48 டாலர் என்ற நிலையிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இயற்கை எரிவாயு விலை ரூ.343 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 2008-ல் 13.69 டாலர் என்ற நிலையில் இருந்த விலை 2012 ஏப்ரலில் 1.90 டாலர் என்ற நிலைக்குச் சரிந்தது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

ஆனால், வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள், விலை அதிகமான கச்சா எண்ணெய்க்கு பதிலாகத் தற்போது இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒபாமா பேசுகையில் மின் நிலையம் மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறைகளில் கச்சா எண்ணெய்க்குப் பதிலாக இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தப் போவதாகக் கூறியதையடுத்து, சர்வதேச சந்தையில் விலை 5.48 டாலரைத் தொட்டது. மேலும், கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது இயற்கை எரிவாயு இருப்பும் குறைந்துள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கடந்த 15 வர்த்தக நாட்களில் இயற்கை எரிவாயு விலை சுமார் ரூ.100 அதிகரித்துள்ளது. அடுத்தச் சப்போர்ட் விலை ரூ.303. ரெசிஸ்டன்ஸ் விலை ரூ.323/344. டெக்னிக்கல் மற்றும் அமெரிக்காவின் தேவைகளை வைத்துபார்க்கும்போது வரும் நாட்களில் விலை சர்வதேச சந்தையில் 4.50 டாலர் என்ற நிலையிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூ. 295 - 283 லெவலிலும் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

பரிந்துரை: 295 லெவலில் வாங்கலாம், கட்டாய ஸ்டாப்லாஸ்- ரூ.278. இலக்குவிலை- ரூ.322.'

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: தொடர்ந்து காப்பர் இருப்பு கடந்த நான்கைந்து மாதங்களாகக் குறைந்தே உள்ளது. எனினும் கடந்த வாரம் வெளியான சீனாவின் உற்பத்தி குறியீடு குறைந்தது மற்றும் சிலி நாட்டின் உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றால், வரும் வாரத்தில் காப்பரின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

ஜிங்க்: கடந்த இரண்டு மாதங்களாகவே ஜிங்க் இருப்பு குறைவாக உள்ளபோதிலும், ஜிங்கின் உத்தரவாத விகிதம் 5,46,600 மெட்ரிக் டன்னிலிருந்து 2,74,300 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது, தேவை குறைவதைக் காட்டுகிறது. வரும் வாரத்தில் விலை அதிகரிக்கும்போது விற்கலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவிவரும் குளிர் காரணமாகக் கச்சாஎண்ணெய் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. அமெரிக்காவின் நான்காவது காலாண்டு ஜிடிபி 3.2 சதவிகிதம் வளர்ந்துள்ளது. இது பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதைக் காட்டுகிறது.

அமெரிக்க எரிசக்தி துறை குறியீட்டின்படி, கச்சா எண்ணெய் இருப்புக் குறைந்துள்ளது.  மேலும், கடந்த டிசம்பர் 31-ல் முடிந்த மூன்றுமாத காலத்தில் தனிநபர் கச்சா எண்ணெய் நுகர்வு கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு 3.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும்பட்சத்தில் மேலும் அதிகரிக்கலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism