Published:Updated:

ஜஸ்ட் ரிலாக்ஸ் : புத்துணர்வுக்குப் புத்தக வாசிப்பு!

நீரை.மகேந்திரன்

ஜஸ்ட் ரிலாக்ஸ் : புத்துணர்வுக்குப் புத்தக வாசிப்பு!

நீரை.மகேந்திரன்

Published:Updated:
##~##

''டென்ஷன் இல்லாத பிசினஸ் எது? பிசினஸில் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். அதை எப்படி எதிர்கொண்டு தீர்வு காண்கிறோம் என்பதில்தான் இருக்கிறது உண்மையான ரிலாக்ஸேஷன். டென்ஷனை மறந்துவிட்டு, எப்படி இதர வேலைகளைப் பார்க்கமுடியும்? நான் அதற்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

அதேநேரத்தில், ஒரு டென்ஷன் என்றால் அதை நாம் மட்டுமே தீர்க்கவேண்டும் என்பதில்லை. பலரது யோசனைகள், முயற்சிகள் எனப் பிறரும் நம் டென்ஷனில் பங்குகொள்வதால், அது தரும் அழுத்தம் பாதியாகக் குறைந்துவிடுகிறது. தவிர, நான் என்னை ஒரு கன்சல்டன்டாகவே நினைக்கிறேன். அதுவே டென்ஷனிலிருந்து என்னை விடுபட வைத்துவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குப் பிடித்த ரிலாக்ஸேஷன், புத்தகங்கள் வாசிப்பது. தினசரி ஒரு மணிநேரம் புத்தகம் வாசிப்பேன். நல்ல பொருளாதாரக் கட்டுரைகள், நவீன தமிழ் இலக்கியங்கள் என வாசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மக்களைச் சென்றடைவதுதான் நமது தொழிலின் நோக்கம் எனில், அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஜஸ்ட் ரிலாக்ஸ் : புத்துணர்வுக்குப் புத்தக வாசிப்பு!

தவிர, ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு வடஇந்தியச் சுற்றுலா செல்வோம். அதிலும், குறிப்பாக மலை சார்ந்த இடங்கள், வன உயிரினக் காப்பகங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மார்கழி மாதம் சென்னையில் நடக்கும் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்குச் செல்வேன். இசையை ரசிப்பது என்பதையும் தாண்டி, இசையின் இப்போதையப் போக்கு எப்படி உள்ளது என்பதை ஆராய்வது எனக்குப் பிடிக்கும். தற்போது சமூகத்தின் பின்தங்கிய குழந்தைகளின் கல்வி தொடர்பான ஆய்வுகளுக்கு நேரம் ஒதுக்குகிறேன். மேலைநாடுகளில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை இங்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன்.

டென்ஷன் என்பது தவறான விஷயமல்ல. அது தொழிலின் ஒரு பாகம்தான் என்பதை உணர்ந்தால், டென்ஷனிலிருந்து விடுபட்டு  ரிலாக்ஸேஷனைத் தேடி ஓடவேண்டியதே இல்லை!''

         படம்: ச.இரா.ஸ்ரீதர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism