தென்னையின் பயன்பாடு நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல்வேறு வகைகளிலும் அதன் பொருட்கள் பயன்பட்டு வருகிறது. தென்னைச் சார்ந்த தொழிலான கயிறு உற்பத்தியைத்தான் இந்த வாரம் பணம் கொட்டும் தொழிலில் நாம் பார்க்கப்போகிறோம்.

இது ஒருவகையான மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் என்பதால் புதிய தொழில்முனைவோர்கள் இதில் துணிந்து இறங்கலாம். தவிர, கிராமப்புறங்களில் தொடங்குவதற்கு ஏற்றத் தொழில்.

அடிப்படை மூலப்பொருளானத் தென்னை மட்டைகளைப் பண்ணை களிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். சீஸனுக்கேற்ப தென்னை மட்டைகள் கிடைக்குமென்றாலும், தொழில் எந்த வகையிலும் பாதிப்படையாமல் இயங்கவேண்டுமெனில், தென்னை விவசாயிகளிடத்தில் நேரடியாகத் தொடர்புவைத்துக்கொண்டு வாங்கலாம்.

தென்னை மட்டைகளை வாங்கிவந்து, டிகாடியேட்டர் என்கிற இயந்திரத்தின் மூலம் நாராகப் பிரித்து எடுக்கவேண்டும். இந்த நாரைச் சல்லடை இயந்திரத்தில் கொட்டிச் சலித்து எடுக்கவேண்டும்.

இந்த நாரைத் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, பிறகு அதிலிருந்து சேகரித்து மீண்டும் இயந்திரத்தின் மூலம் சுத்தமான நாராகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாரைக்கொண்டு கயிறு, மெத்தைகள், மிதியடிகள் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனைச் செய்யலாம்.

கயிறுப் பொருட்களை விற்பனைச் செய்ய, தென்னை வாரிய உதவிகளும் கிடைக்கும். தவிர, வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளது.

தென்னை நாரிலிருந்து கிடைக்கும் கழிவையும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற முடியும். அனைத்துச் செலவுகளும்போக, முதலீட்டிலிருந்து 20-30% லாபம் கிடைக்கும்.

திட்ட அறிக்கை! (ரூ)

இடம் : சொந்தமாக (அல்லது வாடகை)
கட்டடம் : 7 லட்சம்
இயந்திரம் : 12 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
நடைமுறை மூலதனம் : 5 லட்சம்
மொத்தம் : 25 லட்சம்
நமது பங்கு 5% : 1.25 லட்சம்
மானியம் ( PMEGP) : 35% : ரூ 8.75 லட்சம் (கிராமத்தில்)
வங்கிக் கடன் : 15 லட்சம்

மூலப்பொருள்:

தேங்காய் மட்டை இதன் முக்கியமான மூலப்பொருள். ஒரு மட்டை 60 காசு முதல் 1 ரூபாய் ஆகும். இது ஒவ்வொரு பருவநிலைக்கும் மாறலாம். 10,000 மட்டைகொண்ட ஒரு லோடு கொள்முதல் செய்ய ரூ.10 ஆயிரம் வரை ஆகும். போக்குவரத்து மற்றும் ஏற்றிஇறக்கும் செலவுகளைச் சேர்த்தால், ஒரு லோடு தேங்காய் மட்டை கொள்முதல் செய்ய 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை செலவாகும். நாம் ஒரு லோடு 17 ஆயிரம் என்று கணக்கெடுத்துக்கொள்வோம்.

ஒரு லோடு மட்டைக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை நார் எடுக்கலாம். நாம் 750 கிலோ என்று கணக்கில் வைத்துக்கொள்வோம். 750 கிலோ நார் கொண்டு 600 முதல் 650 கிலோ வரை கயிறு உற்பத்தி செய்ய முடியும். நாம் 625 கிலோ என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இவை அனைத்தும் மட்டையின் தன்மையைப் பொறுத்தது.

நார் உற்பத்தியை ஒருநாளைக்கு ஒரு ஷிப்டிலும், கயிறு இரண்டு ஷிப்டிலும் செய்யலாம். ஒருநாள் உற்பத்தியில் 400 கிலோ கயிறுத் தயாரிக்க முடியும். ஒரு மாத உற்பத்தியில் 10 ஆயிரம் கிலோ உற்பத்திச் செய்யலாம். (25ஜ்400=10,000 கிலோ, அதாவது 10 டன்)

1 லோடு தேங்காய்மட்டை 625 கிலோ கயிறுத் தரும். 10 டன் கயிறுத் தயாரிக்க 16 லோடு தேவை. மூலப்பொருள் 16 லோடு மட்டை ரூ.2,72,000 (16X17,000=2,72,000)

ஒரு லோடு மட்டையில் நார்ப் போகக் கிடைக்கும் கழிவைவைத்து ரூ.7,000-த்துக்கு விற்பனைச் செய்யலாம். 16 லோடு மட்டையிலிருந்து கழிவு மூலம் கிடைக்கும். வருமானம் ரூ.1,12,000.

வேலை ஆட்கள்! (ரூ)

மேலாளர் 1 : 8,000
நார் உற்பத்தி 8X5,000 = 40,000
கயிறு உற்பத்தி 6X4,000= 24,000
விற்பனையாளர் 1 : 8,000

மொத்தம்: 80,000

மின்சாரத் தேவை 90 ஹெச்.பி ரூ.35,000

வருமானம் (ரூ)

ஒரு மாத உற்பத்தி 10,000 கிலோ என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிலோவுக்கு இன்றைய விலை ரூ.42-ஆக விலை போகிறது. மட்டை விலை குறையும்போது கயிறு விலை குறைய வாய்ப்புள்ளது.

மாத வருமானம் கயிறு : 4,20,000
கழிவு விற்பனை : 1,12,000

மொத்தம் : 5,32,000

செலவுகள் (ரூ)
மூலப்பொருட்கள் : 2,72,000
மின்சாரம் : 35,000
வேலையாட்கள் : 80,000
கடன் வட்டி (12.5%) : 15,625
கடன் தவணை (60 மாதம்) : 25,000
இயந்திரப் பராமரிப்பு : 10,000
மேலாண்மைச் செலவு : 10,000
விற்பனைச் செலவு : 10,000
தேய்மானம் : 19,000
மொத்தம் : 4,76,625
மொத்த வருமானம் : 5,32,000
மொத்தச் செலவு : 4,76,625

லாபம் (ரூ) : 55,375

படங்கள்: ர.சதானந்த்

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய்,திட்ட மேலாளர்,தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)