இன்றைக்கு வேலைக்குப் போகும் அனைவரும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஓய்வுப் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போது, பென்ஷனாகக் கிடைக்கும் பணத்தைவைத்துத் தங்களுக்கு ஏற்படும் செலவுகளைச் செய்வார்கள்.

ஆனால், இன்றைய தேதியில் பென்ஷன் வசதி இல்லாதவர்களே அதிகம். இவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System).

தனியார் நிறுவனத்தில் மற்றும் அமைப்புச் சாராத துறைகளில் வேலை பார்ப்பவர்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைக்கவே இந்தத் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது, இதன் சிறப்பு என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''மத்திய, மாநில அரசுகளின் பென்ஷன் சுமையைக் குறைக்கும் வகையில், 2008-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டாயம் பிடித்தம் செய்து, அதைத் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தது.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இது கட்டாயம் கிடையாது என்றாலும், விருப்பம் இருப்பவர்கள் இதில் சேரலாம். இந்தத் திட்டத்தின் நோக்கமே தனியார் மற்றும் அமைப்புச் சாரா நிறுவன ஊழியர்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான்.

பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, தபால் நிலையம் என அனைத்து இடங்களிலும் இந்த பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இவை பணப் பரிமாற்றம் மட்டுமே செய்துதருகிறது. என்.பி.எஸ் கணக்குத் துவங்குபவர்களின் விவரத்தையும் தனியார் நிறுவனமான என்.எஸ்.டி.எல் (NSDL) நிர்வகித்து வருகிறது.

வயது வரம்பு:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யக் கட்டாயம் வேலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. இல்லத்தரசிகளும் இதில் கணக்குத் துவங்க முடியும். ஒருவர் ஒரே கணக்கை மட்டுமே துவங்க முடியும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாதவர்களும் இந்தத் திட்டத்தில் சேர முடியாது.

என்.பி.எஸ் கணக்கில் பணம், காசோலை அல்லது இ.சி.எஸ் முறைகளில் பணத்தைச் செலுத்தலாம். 50 ஆயிரத்துக்குமேல் நேரடியாகப் பணம் செலுத்தும்போது பான் கார்டு நம்பர் கட்டாயம் தரவேண்டும்.

இரண்டு பிரிவுகளில் முதலீடு!

பிரிவு 1-ல் குறைந்தபட்சம் வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். கணக்கு ஆரம்பித்தப் பிறகு இடையில் பணத்தை எடுக்க முடியாது. 60 வயதில்தான் பணத்தை எடுக்க முடியும். அப்போதும் 40 சதவிகிதத் தொகை என்.பி.எஸ் அமைப்பு கூறும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதத் தொகை பணமாகக் கையில் பெற முடியும். பிரிவு 1-ன் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிவிலக்குப் பெறலாம்.

பிரிவு 2-ன் கீழ் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது பணம் தேவைப்பட்டாலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான வரிவிலக்கும் பெற முடியாது. ஆனால், பிரிவு 1-ன் கீழ் கணக்கை ஆரம்பித்து அதில் ஒரு வருடம் முதலீடு செய்தபிறகுதான் பிரிவு 2-ன் கீழ் முதலீடு செய்ய முடியும்.

பிரிவு 1-ல் இருந்து பிரிவு 2-க்குக் கணக்கை மாற்றும்போது, ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யவேண்டும். அதன்பிறகு குறைந்தபட்சம் 250 ரூபாய் செய்யலாம். ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் கட்டாயம் ரூ.2,000 அந்தக் கணக்கில் இருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.

என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தை நிர்வகிக்க மியூச்சுவல் ஃபண்டு மேனேஜர்களைப் பென்ஷன் ஃபண்டு அத்தாரிட்டி நியமித்துள்ளது. இவர்கள் இந்தப் பணத்தைப் பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்குத் தருவார்கள். பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும்.

ஆக்டிவ் சாய்ஸும், ஆட்டோ சாய்ஸும்!

பங்குச் சந்தை முதலீடு என்பது ரிஸ்க் நிறைந்ததாகவே முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், என்.பி.எஸ் என்பது அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டமாகவே இருக்கும்.

மேலும், ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வசதிகள் உள்ளன. ஆக்டிவ் சாய்ஸ் என்பது எவ்வளவு சதவிகிதம் ஈக்விட்டி, பாண்டு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம்.

இதுமாதிரி முதலீட்டை நிர்ணயம் செய்யாதவர்களுக்கு அவர்களின் வயது அடிப்படையில் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து முதலீட்டுச் சதவிகிதத்தை ஃபண்டு மேனேஜர் நிர்ணயித்துக்கொள்வார். வயது அடிப்படையில் முதலீட்டுத் திட்டத்துக்கான வரைமுறையை அரசே வரையறுத்துள்ளது.

முதலீட்டைத் திரும்ப எடுத்தல்!

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை 60 வயதில்தான் எடுக்க முடியும். திரும்ப எடுக்கும்போது 40 சதவிகிதத் தொகையை ஓய்வூதியத் திட்டங்களில் கட்டாயம் முதலீடு செய்யவேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதத் தொகை உங்களுக்குக் கிடைக்கும்.

60 சதவிகிதத் தொகையை 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானா லும் எடுக்கலாம். 60 வயதுக்குக் கீழ் பணத்தை எடுத்தால் 80 சதவிகிதத் தொகை ஓய்வூதிய முதலீட்டுக்குச் சென்றுவிடும். 20 சதவிகிதத் தொகைதான் முதலீட்டாளருக்கு கிடைக்கும். முதலீட்டாளர் இடையில் இறந்துவிட்டால் நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுக்கு முழுத் தொகையும் கிடைக்கும்.

எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்பதையும் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு முதலீடு செய்வது கட்டாயம். அதாவது எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டத்தில் மட்டுமே பென்ஷனுக்காக முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டுக் காலம்!

பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலமாக எத்தனை வருடங்களுக்கு பென்ஷன் தேவை என்பதையும் முதலீட்டாளரே முதலீடு செய்யலாம். அதாவது, 5, 10, 15 மற்றும் 20 வருட திட்டங்கள் உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கும் காலத்துக்கு மட்டும்தான் பென்ஷன் கிடைக்கும்.

இதேபோலக் கால அளவைப் பொறுத்துதான் பென்ஷன் தொகையும் நிர்ணயிக்கப்படும். அதாவது, 60 வயதில் ஓய்வூதியம் பெறுபவர், 70 வயது வரை மட்டும்தான் எனக்கு பென்ஷன் தேவை என விண்ணப்பத்தில் கொடுத்தால் அதுவரை மட்டும்தான் பென்ஷன் கிடைக்கும்.

முதலீட்டாளர் பத்து ஆண்டுத் தேர்ந்தெடுத்து இடையில் இறந்துவிட்டால் மீதமுள்ள ஆண்டுகளுக்கு நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுக்குக் கிடைக்கும். அதாவது, மனைவி அல்லது கணவனுக்கு பென்ஷன் கிடைக்கும். அதிகபட்சம் 20 வருடங் களுக்குப் பென்ஷன் கிடைக்கும் வகையில் மட்டும்தான் உள்ளது.

ஒருவேளை 20 வருடத்துக்குமேல் பென்ஷன் பெறும் நபர் உயிருடன் இருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்காது. அரசு வழங்கும் பென்ஷன் என்பது வேலை பார்ப்பவர் உயிருடன் இருக்கும்வரையும், அதன் பிறகு அவருடைய மனைவிக்குக் கிடைக்கும்.

நிர்வகிக்கும் நிறுவனங்கள்!

எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்டு, எல்.ஐ.சி பென்ஷன் ஃபண்டு, யூ.டி.ஐ பென்ஷன் ஃபண்டு, கோட்டக் மஹேந்திரா பென்ஷன் ஃபண்டு, ரிலையன்ஸ் பென்ஷன் ஃபண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பென்ஷன் ஃபண்டு மேனேஜர், ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் மேனேஜர், டி.எஸ்.பி பிளாக்ராக் பென்ஷன் ஃபண்டு மேனேஜர் ஆகிய நிறுவனங்களை பென்ஷன் ஃபண்டு அத்தாரிட்டி நியமித்துள்ளது.

கட்டண விவரம்!

என்.பி.எஸ்-ல் முதலீடு செய்வதற்குக் கட்டணம் உண்டு. மத்திய அரசின் நேரடித் திட்டமான இதை

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் சேவையாகத்தான் வழங்குகின்றன. மேலும், பணத்தை வசூலிப்பது, ஆவணங்களைப் பாதுகாப்பது என அனைத்தும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் செய்யப்படும் பரிமாற்றங்கள் அனைத்துக்கும் கட்டணம் உண்டு. கணக்குத் துவங்குவதற்கு 50 ரூபாய் கட்டணம் உண்டு.

தவிர, ஆண்டு நிர்வாகக் கட்டணம் 190 ரூபாய், ஒருமுறை பணப் பரிமாற்றம் செய்ய 4 ரூபாய், பென்ஷன் ஃபண்டு மேனேஜர் கட்டணம் 0.25 சதவிகிதம், முதலீட்டுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்துக்கு 100 ரூபாய், முதலீடு செய்யும் தொகையை வரவு வைப்பதற்கு 0.25 சதவிகிதம் (குறைந்தபட்சம் 20 ரூபாய், அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய்), இதரப் பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் கட்டணம் இருக்கும்.

இந்தத் திட்டத்தில் உள்ள முதலீட்டை நிர்வகிக்கும் நிறுவனம் 0.0075 -லிருந்து 0.05% வரை கட்டணமாக எடுத்துக்கொள்ளும்.

சேவை கிடைக்கும் இடங்கள்:

இந்தச் சேவை பெரும்பாலான முன்னணி வங்கிகளில் கிடைக்கிறது. அதாவது, தபால் நிலையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்.பி.ஐ, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, கார்வி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களில் கிடைக்கிறது'' என்று முடித்தார் நிதி ஆலோசகர் சங்கர்.

வருமானம் நிச்சயமில்லை!

தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விசாரித்தபோது, பெயரளவில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருவதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. எவ்வளவு தொகை பென்ஷன் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மத்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததோடு சரி, இதன் அனைத்துச் சேவைகளையும் தனியார் நிதி நிறுவனங்களிடமே தந்துவிட்டது. முக்கிய நகரங்களைத் தவிர்த்து, பிற ஊர்களில் உள்ள வங்கிகள், தபால் நிலையங்களில் இந்தத் திட்டம் பற்றிக் கேட்டால், தங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இத்தனை சதவிகிதத்தில் இருக்கும் என்பதற்கு அரசு எந்தவிதமான உத்தரவாதமும் தரவில்லை. 60 வயதுக்குமேல் வருமானத்துக்கு எந்தவிதமான உத்தரவாதம் இல்லை என்று மத்திய அரசு சொல்லியே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இன்னும் அதிக வருமானம் கிடைக்க மத்திய அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் செய்வதோடு, இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி, அதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்வது மத்திய அரசாங்கத்தின் கடமை.

படங்கள்: கேசவ சுதன், ர.சதானந்த்.

என்.பி.எஸ்: வருமானம் எவ்வளவு?

''செப்டம்பர் 27, 2013 அன்று மார்னிங்ஸ்டார் செய்த ஆய்வின்படி, என்.பி.எஸ்-ல் உள்ள மத்திய அரசாங்கத் திட்டம் (திட்டம் சிஜி) சராசரியாக ஓராண்டில் 3.79 சதவிகித வருமானத்தையும், மூன்று ஆண்டுகளில் வருடத்துக்கு 6.12% வருமானத்தையும், ஐந்து ஆண்டுகளில் வருடத்துக்கு 8.96 சதவிகித வருமானத்தையும் தந்துள்ளது. மாநில அரசாங்கத் திட்டம் (திட்டம் எஸ்ஜி) சராசரியாக ஒரு

வருடத்தில் 3.86% வருமானத்தையும், மூன்று வருடத்தில் 6.67% வருமானத்தையும் தந்துள்ளது.

என்.பி.எஸ்-ல் உள்ள பங்குச் சார்ந்த திட்டங்கள் (திட்டம் இ) ஆவரேஜாக ஒரு வருடத்தில் 5.39% வருமானத்தையும், மூன்று வருடத்தில் ஆண்டுக்கு 0.10% வருமானத்தையும் தந்துள்ளது. அதேபோல் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் (திட்டம் சி) ஒரு வருடத்தில் 6.05% வருமானத்தையும் மூன்று வருடத்தில் ஆண்டுக்கு 9.14% வருமானத்தையும் தந்துள்ளது.

அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் (திட்டம் ஜி) சராசரியாக ஒரு வருடத்தில் 1.9% வருமானத்தையும், மூன்று வருடத்தில் ஆண்டுக்கு 6.10% வருமானத்தையும் கொடுத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை ஆகிய இரண்டிலும் ஏற்றஇறக்கங்கள் இருந்ததால், என்.பி.எஸ் திட்டங்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றஇறக்கங்கள் இருந்தாலும் நீண்டகாலத்தில் இந்தத் திட்டங்கள் நல்ல பலன் தரும். வேலை பார்ப்பவர்களுக்கு, தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யும்போது, எக்ஸ்ட்ரா வரிச் சலுகை என்.பி.எஸ் முதலீட்டாளர்களுக்குக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறிய முதலீட்டாளர்களுக்கு என்.பி.எஸ்.-ஐவிடப் பி.பி.எஃப் மற்றும் இ.பி.எஃப் சிறந்த முதலீடாக அமையும். ஏனென்றால், அவை இரண்டிலும் கேரன்டியான வருமானம் கிடைக்கும்.

சமமான ரிஸ்க் எடுக்க முடியும் என நினைப்பவர்கள், தங்களுடைய ஓய்வூதியச் சேமிப்பில் பாதியை பி.பி.எஃப் மற்றும் இ.பி.எஃப்-லும், மீதியை பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும் முதலீடு செய்துகொள்ளலாம்.

நீண்டகாலச் சேமிப்பில் அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் அதிகபட்சமாகப் பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

வேலையில் இருந்துகொண்டு (உங்கள் நிறுவனம் என்.பி.எஸ் வழங்கும்பட்சத்தில்) அதிக வருமான வரிச் சலுகை பெற விருப்பமுள்ளவர்கள் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்யலாம். மீதியைப் பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

ஆக, இளவயதில் கட்டாயமாகச் சேமிக்கும் பழக்கம் வேண்டும் என்கிறவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இப்படிச் சேமிப்பது இன்ஷூரன்ஸ் அல்லது வங்கி எஃப்.டி மூலம் வருமானத்தைவிட அதிக வருமானம் தரும். கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக அளவு சம்பளம் பெறுகிறவர்கள் வரிச் சலுகைக்காக இதில் முதலீடு செய்யலாம்.

ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதாவது கூடிய விரைவில் பதவி ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேரவேண்டாம். வங்கி எஃப்டி-தான் அவர்களுக்கு ஏற்ற திட்டமாக இருக்கும்!''