ஜெய்ஹோ, ஜெய்ஹோ என்று முழங்கியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''என்னாச்சு, உங்களுக்கு?'' என்றோம். ''ஜெய்ஹோ இந்திப் படம் பார்த்தேன். ஊழலுக்கு, அட்டூழியம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஹீரோ சல்மானின் போராட்டத்தை சூப்பராக எடுத்திருக்கிறார்கள். அந்தமாதிரி ஒரு மனிதர் இனி நம் அரசாங்கத்தின் தலைமைப் பதவிக்கு வரவேண்டும்'' என்றார். ''அப்படி இப்படியென அரசியல் பேச ஆரம்பிக்கிறீர்கள். பேசுங்கள்'' என்றோம்.

''அமெரிக்காவின் என்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பு YouGoV என்கிற இணையதள அமைப்புடன் இணைந்து ஏறக்குறைய 594 பிசினஸ்மேன்களிடம் ஒரு சர்வே நடத்தி இருக்கிறது. உங்கள் பிசினஸை நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை எந்த மாநிலத்தில் இருக்கிறது என்கிற கேள்வியை இந்த பிசினஸ்மேன்களிடம் கேட்க, குஜராத்தில் தொழில் நடத்துவதில் எங்களுக்குப் பரமதிருப்தி என்று சொல்லியிருக் கிறார்கள். குஜராத்துக்கடுத்து கேரளா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா என அடுக்கி இருக் கிறார்கள். ஆக, பிசினஸ்மேன்களின் முழு ஆதரவும் மோடிக்கு அமோகமாக இருக்கிறது'' என்றபடி கண் சிமிட்டினார் ஷேர்லக். அவருக்குச் சுடச்சுட சுக்குமல்லி காபி தந்தபடி, சந்தைத் தொடர்பான செய்திகளின் பக்கம் இழுத்தோம்.

''நம்ம ஊர் சிட்டி யூனியன் பேங்க்-ன் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் வெறும் 5% மட்டுமே அதிகரித்துள்ளதே?'' என்றோம்.

''இதன் மொத்த வாராக் கடன் 1.7 சதவிகிதமாக, அதாவது ரூ.269 கோடியாக உள்ளது. முடிந்த காலாண்டில் இந்த வங்கி ரூ.55 கோடி வாராக் கடனை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், வாராக் கடனைக் கணிசமாகக் குறைத்து, நிகர லாபத்தைக் கூட்ட இந்த வங்கி இதன் நிகர வாராக் கடனில் ஒரு பகுதியைச் சொத்து மறுசீரமைப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய இருக்கிறது. அந்தவகையில் அடுத்த காலாண்டில் இதன் நிகர லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார் சுக்குமல்லி காபியைக் குடித்தபடி.

''ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி அதிகரித்துள்ளதே?'' என்று ஆச்சர்யம் காட்டினோம்.

''காரணம், அதன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள்தான். அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் அதன் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவை மூன்றாம் காலாண்டில் 11 சதவிகிதத்துக்கு மேல் குறைத்துள்ளது. ரிலையன்ஸ் பவர் போலவே ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர் (ஆர்- இன்ஃப்ரா) நிகர லாபமும் அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவிகிதமாக அதிகரித்து ரூ.450 கோடியாக உள்ளது'' என்று விளக்கம் தந்தார்.

''பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 27% குறைந்துள்ளதே?'' என்றோம் கவலையோடு.

''மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.803 கோடியிலிருந்து ரூ.586 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தக் காலாண்டில் வாராக் கடன் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் 48% அதிகரித்து ரூ.1,558 கோடியாக உயர்ந்ததே காரணம்'' என்றார்.

''மிட் கேப் பங்குகளின் மவுசு குறைந்து வருகிறமாதிரி தெரிகிறதே?'' என்றோம்.

''எமெர்ஜிங் மார்க்கெட்டில் கரன்சி பிரச்னை காரணமாக முதலீட்டாளர்கள், மிட் கேப் பங்குகளில் முதலீட்டை குறைத்து வருகிறார்கள். முடிந்த டிசம்பர் காலாண்டில் சென்செக்ஸ் 9% அதிகரித்தநிலையில், பிஎஸ்இ மிட் கேப் இண்டெக்ஸ் 20% அதிகரித்தது. அதேநேரத்தில், நடப்பு ஆண்டில் இதுவரையில் பிஎஸ்இ மிட் கேப் இண்டெக்ஸ் 6% வீழ்ச்சி கண்டுள்ளது. காரணம், பல முதலீட்டாளர்கள் கரன்சி பிரச்னை காரணமாக மிட் கேப் பங்குகளின் விலை இன்னும் இறங்கும் என்கிற பீதியில் விற்றுத் தள்ளுகிறார்கள். அந்தவகையில் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்'' என்று எச்சரித்தார் அவர்.

''ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் நிறுவனங்களின் விற்பனைக் குறைந்த நிலையிலும் நிகர லாபம் அதிகரித் துள்ளதே?'' என்று வினவினோம்.

''சிமென்டுக்கான தேவைக் குறைந்து போனதால் விற்பனைக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், ஹோல்சிம் குழுமத்தைச் சேர்ந்த ஏசிசி-ன் நிகர லாபம் 16%, அம்புஜா சிமென்ட்ஸ் நிகர லாபம் 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வரிக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளதால் நிகர லாபம் கூடி இருக்கிறது'' என்றார்.

''செபியின் சேர்மன் யூ.கே சின்ஹாவின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டிருக்கிறதே?'' என்றோம்.

''ஐபிஓ தொடர்பான புதிய விதிமுறைகள் எனப் பலவற்றைக் கொண்டு வந்ததுக்குதான் இந்தப் பதவி நீட்டிப்பு. தவிர, ஓர் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார். டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் இடம்பெறாத தனிப்பட்ட பங்குகளின் விலை, ஒருநாளில் 20 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தால் அதன் மீதான வர்த்தகம் நிறுத்தப்படும். இந்தப் பங்கு இண்டெக்ஸ் டெரிவேட்டிவில் இடம் பெற்றிருந்தாலும் இனி இதுதான் விதிமுறை. இது பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வருகிறது. பங்குகளின் விலை கண்டபடி அதிகரிப்பதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்கிறார்கள். சபாஷ் சின்ஹா'' என்று பாராட்டினார்.

''இந்தியாவின் ஜிடிபி மீண்டும் வேகமெடுத்திருக்கிறதே?'' என்றோம்.

''இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு 2013-14-ல் 4.9 சதவிகிதமாக இருக்கும் என மத்திய புள்ளியல் துறை மதிப்பீடு செய்துள்ளது. 2012-13-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருந்தது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே'' என்றவரிடம், ''உங்களிடம் ஒரு மாருதி 800 கார் இருந்ததே?'' என்று இழுத்தோம்.

''அதை எப்போதோ விற்றுவிட்டேன். மாருதி நிறுவனம் மாருதி 800 காரைத் தயாரிப்பதைக் கடந்த மாதம் 18-ம் தேதியுடன் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாம். இதுவரை மொத்தம் 27 லட்சம் மாருதி 800 கார்களை விற்றிருக்கிறதாம். மாசு கட்டுப்பாடு பிரச்னை, ஆல்டோ, வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு மக்கள் மாறியது எனப் பல காரணங்கள் இதற்கு. கண்ணீர் மல்க அந்த காருக்கு விடை தந்திருக்கிறது மாருதி நிறுவனம். நான் வாங்கிய முதல் காரும் அதுதான். அதை விற்றபோது என் மனமும் துடித்தது'' என்று ஒரு சின்ன சோகத்தோடு விடை பெற்றார் ஷேர்லக்.