ஏலக்காய்! (Cardamom)

கடந்த வாரம் ஏலக்காய் விலை சுமார் 15% அதிகரித்தது. கடந்த சில மாதங்களாகச் சரிவிலேயே இருந்த விலை உடனடியான ஏற்றம் கண்டதற்குக் காரணம் ஏற்றுமதி தேவை அதிகரித்ததே. கடந்த வாரம் சுமார் 65 டன் ஏற்றுமதித் தேவை இருந்ததாக வர்த்தகர்கள் மத்தியில் கருத்து நிலவிவந்தது. இதன்காரணமாக விலை அதிகபட்சமாக சுமார் ரூ.843-க்கு வர்த்தகமாகியது.

நடப்பு நிதியாண்டில் ஜனவரி 31-வுடன் முடிவடைந்த காலத்தில் ஏலக்காய் ஏலமிடும் சந்தைக்கு மொத்த வரத்து 19,276 டன்னாக இருந்தது. இதுவே, கடந்த ஆண்டு இதேகாலத்தில் 12,449 டன்கள் மட்டுமே இருந்தது.

வரும் வாரத்தில் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சப்போர்ட் லெவல் - ரூ.780 - 762. ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.825 - 860. பரிந்துரை: ரூ 775 - 780. ஸ்டாப் லாஸ் - ரூ.760; இலக்கு விலை - ரூ.810 - 835.

மிளகு! (Pepper)

மிளகின் உள்நாட்டுத் தேவைக் கடந்த வாரம் அதிகரித்ததன் காரணமாக விலை அதிகரித்தே வர்த்தகமானது. கொச்சி ஸ்பாட் சந்தை களில் 100 கிலோ மிளகின் விலை ரூ.52,400-ஆக வர்த்தகமானது. சர்வதேச மிளகுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2014-ல் மிளகு உற்பத்தி 2013-ம் ஆண்டு உற்பத்தி போன்றே இருக்கும்.

சர்வதேசத் தேவையைச் சமாளிக்க வியட்நாம், கம்போடியாவின் உற்பத்தியை நம்பியுள்ளது. இந்தோனேஷியாவில் மிளகு உற்பத்தி இந்த வருடம் அதிகரிக்கும் என்றும், அதேசமயம் சர்வதேச அளவில் சப்ளை இறுக்கமான நிலையிலே காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் மிளகு உற்பத்தி அடுத்த வருடத்தில் 22% குறைந்து 45,000 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டு உள்நாட்டுத் தேவை 48,300 டன்னாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.

மிளகாய்! (Chilli)

ஏற்றுமதித் தேவை அதிகரித்ததால் கடந்த வாரம் மிளகாய் விலை, வரத்து அதிகமாக இருந்தும் நிலையான விலையில் வர்த்தகமானது. மேலும், உள்நாட்டுச் சந்தைகளில் போதியக் கையிருப்பு உள்ளது என்ற அறிக்கையால் விலை குறையும் என்கிற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எப்படி இருப்பினும் தேவை அதிகமாகவே இருந்து வருகிறது.

புதிய விளைச்சல் முடிவடைந்த காரணத்தால் சந்தைக்குப் புதிய மிளகாய் வரத்து அதிகரிக்கும் என்றும், அதேசமயம் அதிகளவு உற்பத்திக் காரணமாக விலை குறைய வாய்ப்புள்ளது. அதிக அளவு பனிக் காரணமாகப் போதிய அளவு சூரிய வெப்பம் இல்லாததால் மிளகாய்களின் தரம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஜனவரி 29-வுடன் முடிவ டைந்த காலத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் மிளகாய்ப் பயிரிடப்படும் பரப்பளவு 39,077 ஹெக்டேர்களாக இருந்தது. கடந்தாண்டு இதேகாலத்தில் 40,821 ஹெக்டேர்களாக இருந்தது என்றும் ஆந்திர மாநிலத்தின் வேளாண் துறை வெளியிட்டுள்ளது. வரும் வாரத்தில் வரத்து அதிகரிப்பால் விலை குறையலாம். எனினும், தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.

மஞ்சள்! (Turmeric )

நடப்பாண்டில் மஞ்சள் உற்பத்திக் குறையும் என்றும், அதேசமயம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்

தேவை அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரண மாகக் கடந்த வாரம் மஞ்சள் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது.

ஆந்திராவில் நிலவிவரும் பனிமூட்டம் காரணமாக

மஞ்சள் பயிர் பற்றிய கவலையோடு இருக்கின்றனர் விவசாயிகள். தற்போது நிலவிவரும் விலையில் தரம் காரணமாக விலை குறையலாம் என்றும் தெரிகிறது.

மேற்குறிப்பிட்டக் காரணங்களால் தரம்மிக்க மஞ்சள் வரத்து குறையும் என்பதால், அதற்கான தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஸ்பாட் சந்தைகளில் போதுமானப் புதிய வரத்தும், அதேசமயம் அதிக ஈரப்பதம் உள்ள மஞ்சள் வருவதும் விலையில் பிரதிபலிக்கும். வரும் வாரத்தில் தேவைக் காரணமாக மஞ்சள் விலை அதிகரிக்கலாம்.