Published:Updated:

ஹெச்.ஆர். செமினார்: கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது!

ஹெச்.ஆர். செமினார்: கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது!

ஹெச்.ஆர். செமினார்: கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது!

ஹெச்.ஆர். செமினார்: கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது!

Published:Updated:
##~##

மனிதவள மேம்பாட்டு நிறுவனமான ரைப் குளோபல், ரைப்னாமிக்ஸ்

(RIPENOMICS) என்கிற பெயரில் சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிக் கருத்தரங்கைச் சென்னையில் நடத்துகிறது. வருகிற பிப்.28 - மார்ச் 4 வரை இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. ரைப் குளோபலின் இணை இயக்குநர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், இந்தக் கருத்தரங்கின் முக்கிய நிகழ்ச்சிகள் பற்றி நம்மிடம் விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தக் கருத்தரங்கில் முதல்நாளன்று 'தி பாசிட்டிவ் கனெக்‌ஷன்’ என்கிற தலைப்பில் கூட்டம் நடக்கிறது. இரண்டாம் நாளன்று ஆஸ்ட்ரா விருது விழா நடக்கிறது. இதில் சர்வதேச அளவில் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்குச் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டுகிறோம். மூன்றாம் நாளன்று, 'தி ஹியூமன் ஹார்ட் ஆஃப் பிசினஸ்’ என்கிற தலைப்பில் பணியாளர்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவது எப்படி என்பதுபற்றிப் பேசுகிறோம்.'

ஹெச்.ஆர். செமினார்: கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது!

நான்காம் நாளன்று 'தி கனெக்‌ஷன்’ என்னும் நிகழ்ச்சியில், நிறுவனங்களின் சிஇஓ, எம்.டி போன்றவர்களுக்கான தலைமைப் பயிற்சி அளிக்கிறோம். கடைசிநாள் நிகழ்ச்சியில், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, அலுவலக வாழ்க்கையில் சமநிலையைக் கடைப்பிடித்து வெற்றி பெறுவது பற்றிப் பேசப் போகிறோம்.  

இந்தக் கருத்தரங்கில் மனிதவள நிபுணர் வேட் ஃப்ரான்ஸன் முக்கிய உரை நிகழ்த்துவார். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய இதிகாசங்களிலிருந்துச் சொல்லப்பட்டுள்ள மேலாண்மை உத்திகளை நவீன மேலாண்மையில் எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்போகிறோம்' என்றார்.

இந்த நிகழ்வுக்கு மீடியா பார்ட்டனராக நாணயம் விகடன் இருக்கிறது. இந்தக் கருத்தரங்கம் குறித்து மேலதிக விவரங்களை www.ripeacademy.org - ல் தெரிந்து கொள்ளலாம்.

- சி.சரவணன்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism