Published:Updated:

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

மோ.கிஷோர்குமார், லோ.இந்து, படங்கள்: ர.சதானந்த்.

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

மோ.கிஷோர்குமார், லோ.இந்து, படங்கள்: ர.சதானந்த்.

Published:Updated:
##~##

வியாபார நிர்வாகத்தில் சாதாரண மாணவனையும் சூரப்புலியாக்கும் எம்பிஏ படிப்புக்கு எப்போதுமே தனி மவுசுதான்! இந்தப் படிப்பில் சொல்லித் தரப்படும் விஷயங்களை எளிதாகப் புரிந்துகொண்டு செயல்படுத்த ஒரு டெக்னிக்கைப் பின்பற்றுகின்றனர் எம்பிஏ கல்லூரிப் பேராசிரியர்கள். அதுதான், மேனேஜ்மென்ட் கேம்ஸ்.

இன்றைய தேதியில் எம்பிஏ கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் இந்த விளையாட்டுகளைப் பற்றி நமக்கு சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்  கோவை குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி துணைப் பேராசிரியர் செந்தில்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சாதிக்க உதவும் சாணக்யா!

''ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், ஹியூமன் ரிசோர்ஸ், சிஸ்டம்ஸ்... இது நான்கும்தான் ஒரு தொழில் மேலாண்மைக்கான அடித்தளம்! இதன் ஒவ்வொரு பகுதியின் அத்தியாவசியத்தையும் உணர்த்தும் வகையில், மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதே 'சாணக்யா’ என்கிற மேனேஜ்மென்ட் விளையாட்டு.

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம், புதிதாக ஒரு விளம்பர கம்பெனி தொடங்கப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கான தேவைகள், ஊழியர்கள்,

ஹெச்.ஆர், கணினிகள், சாஃப்ட்வேர், மார்க்கெட்டிங், கஸ்டமர் சர்வீஸ் முதலிய பல்வேறு கூறுகளை மாணவர்கள் அணி சமர்ப்பிக்க வேண்டும். யாருடைய புராஜெக்ட் சாத்தியமானதாகவும், விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்த விளையாட்டு ஒரு மணி நேரத்தில் ஆரம்பித்து முடிவதில்லை. இப்படி ஒரு கம்பெனியைத் தொடங்கினால் என்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் செய்யவேண்டும் என உண்மையிலேயே களப்பணி செய்து, முடிவு செய்யவேண்டும் என்பதால் இந்த விளையாட்டு ஒரு வருடம் வரை நீடிக்கும்!

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

 பங்கு வர்த்தக விளையாட்டு!

ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் பற்றிய சுவாரஸ்யமான விளையாட்டு இது. கல்லூரியில் சேரும்போதே ஒவ்வொரு மாணவனும் ரூபாய் 5,000 இந்த விளையாட்டுக்கு முன்பணமாகக் கட்டவேண்டும். இந்தப்

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

பணம் வங்கிகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டை லாபகரமாக மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் அந்தப் பணத்தை இழக்காமலாவது இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தன் சொந்தப் பணத்தை இதற்கு பயன்படுத்துவதால் நம் பணத்தின் மீதான அக்கறை அதிகமாக இருந்து, அதைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் அந்தக் கணத்தில் மாணவனின் அவ்வளவு செயல்திறனும் வெளிவரும். இந்த விளையாட்டில் வெற்றி, தோல்வி என்றெல்லாம் இல்லை. சரியான முடிவு, தவறான முடிவு எது என்பதே பார்க்கப்படும்.

 ஸ்வாட் அனாலிசிஸ்!

சுவாரஸ்யம் பட்டறிவு: மேலாண்மை விளையாட்டுகள்!

இண்டஸ்ட்ரி ஃபோகஸ் குரூப் (IFG - Industry Focus Groups)என்று ஒரு விளையாட்டு. இதில்   மாணவர்கள் அணி அணியாகப் பிரிந்துக்கொண்டு, ஒவ்வொரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைத் தேர்வு செய்து, அதன் வளர்ச்சி, வீழ்ச்சி, விற்பனை, லாபம் உள்ளிட்ட அனைத்தையும் அணியாகத் தகவல் திரட்டி வாராவாரம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்தத் துறைகளுக்கான ஸ்வாட் அனாலிசிஸ் (SWOT)  செய்ய வேண்டும். இதில் எந்த அணி ஒரு துறைபற்றி துல்லியமாக ஆராய்ந்து சொல்கிறதோ, அதற்கு  வெற்றி கிடைக்கும்.

இந்த விளையாட்டுகள் மாணவர்களுக்குப் புத்தகத்தைத் தாண்டி, ஒரு மேலாண்மை உலகம் இருக்கிறது என்பதைப் புரியவைக்கும்'' என்று முடித்தார் செந்தில்குமார்.

விளையாட்டை சீரியஸாக விளையாடினால் வெற்றிதான்!

மோ.கிஷோர்குமார், லோ.இந்து, படங்கள்:  ர.சதானந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism