Published:Updated:

பணம் கொட்டும் தொழில்கள்: டிசைனர் டைல்ஸ்!

நீரை.மகேந்திரன்

##~##

வீட்டு வாசலில் சிமென்ட் தரைக்குப் பதிலாகப் பதிக்கப்படும் தரைக்கற்கள்தான் இந்த டிசைனர் டைல்ஸ். ஆனால், வழக்கமான சிமென்ட் தரைக்கற்களாக இல்லாமல், நல்ல வண்ணங்களில், பார்ப்பதற்குப் பிரமாண்டமான தோற்றத்தைத் தரும் தரைக்கல் இது.

இவை, சாதாரணத் தரைக் கற்களைவிட உறுதியானதாகவும், நேர்த்தியானதாகவும், ஒன்றோ டொன்று பொருத்துவதற்கு எளிதான தாகவும் இருக்கும். தவிர, இதன் பளபளப்புத் தன்மையும் தரைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வண்ணத் தரைக்கற்களைப் பல பருமன்களில் தயார் செய்யலாம். மெல்லியப் பருமன்கொண்ட தரைகற்களை அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், பருமன் அதிகம்கொண்ட தரைக்கற்களை வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்கள்!

சிமென்ட், மணல், கிரஷர் மணல், ரசாயன இறுகுக் கலவை, இதனோடு சேர்த்து வாடிக்கையாளர் விரும்பும் வண்ணங்கள். மேற்கண்ட மூலப்பொருட்களைக் கலந்துகொண்டு, இந்தக் கலவையை அச்சில்வைத்துப் பதித்து எடுக்க வேண்டியதுதான். ரசாயன இறுகுக் கலவையைக் கலந்தால்தான் ஒரேநாளில் கற்கள் உறுதியடையும்.

பணம் கொட்டும் தொழில்கள்:  டிசைனர் டைல்ஸ்!

ஒருநாள் காய்ந்தபிறகு கற்களை எடுத்து மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பது இந்தத் தொழிலின் இருக்கும் சிறப்பான விஷயம். ஒருநாளில் 5,000 டைல்ஸ் வரை உற்பத்திச் செய்ய முடியும் என்றாலும், தேவைக்கேற்ப உற்பத்திச் செய்துகொள்வது நல்லது.

திட்ட அறிக்கை! (ரூ)

இடம் :  சொந்தம் அல்லது வாடகை இடம்
மொத்த முதலீடு :    15 லட்சம்
கட்டடம்           :     4 லட்சம்
தண்ணீர் பம்பு
உட்பட இயந்திரங்கள்   :       3 லட்சம்
ரப்பர் அச்சு   :     2 லட்சம்
நடைமுறை மூலதனம்        :     6 லட்சம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி) மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் கடன் உதவிப் பெற முடியும். பொதுத் திட்டத்திலும் இயந்திரங்கள் மற்றும் அச்சுக்குக் கடன் பெறலாம்.

நமது பங்கு 5%   : ரூ.75 ஆயிரம்
மானியம் 25%         :    ரூ.3.75 லட்சம்
வங்கிக் கடன்        :  ரூ.10.50 லட்சம்

பணம் கொட்டும் தொழில்கள்:  டிசைனர் டைல்ஸ்!

திட்ட அனுமானங்கள்:

ஒருநாளில் 4,000 - 5,000 கற்கள்வரை உற்பத்திச் செய்யலாம் என்றாலும், நமது தேவைக்கேற்ப தினசரி 800 டைல்ஸ்கள் என்று கணக்கெடுத்துக்கொள்வோம்.

இதன்படி மாதம் 25 வேலை நாட்கள் எனக் கொண்டால் 20,000 தரைக்கற்கள் தயார் செய்ய முடியும்.

இதற்குத் தேவையான மூலப்பொருள் சிமென்ட், மணல், ஜல்லி, கிரஷர் டஸ்ட், பொடி ஜல்லி, பிக்மென்ட், ரசாயன இறுகுக் கலவை. ஒரு தரைக்கல் சாதாரணமாக 250 கிராம் வரை இருக்கும்.

ஒரு கல் தயாரிக்க மூலப்பொருள் செலவு ரூபாய் 28 முதல் 30 வரை ஆகும். நாம் 30 ரூபாய் எனக் கணக்கு எடுத்துக்கொள்வோம்.

ஒரு கல் விற்பனை மூலம் ரூ.38 முதல் 40 கிடைக்கும். சராசரியாக ஒரு கல் ரூ.38 என விற்பனை செய்யலாம்.

மாதம் 20 ஆயிரம் கற்கள் தயாரிக்க ஆகும் மூலப்பொருள் செலவு: ரூ.6,00,000 (30ஜ்20,000= 6,00,000)

மின்சாரம் 12 ஹெச்.பி தேவை. இதற்கு ஆகும் செலவு: ரூ.4,000

வேலையாட்கள்: (ரூ.)

மேற்பார்வையாளர்   :  1X8,000 = 8,000
தொழிலாளர்கள்      :  8X4000 = 32,000
விற்பனையாளர்      :   1X8000 = 8,000
_________
மொத்தம்               :               48,000
_________

உற்பத்தி

மாதம் 20,000 டைல்ஸ்கள் உற்பத்திச் செய்கிறோம் என்றால், விற்பனை வரவு: ரூ.7,60,000 (20,000ஜ்38 = 7,60,000)

மொத்தச் செலவு: (ரூ)

மூலப்பொருட்கள்   :        6,00,000
மின்சாரம்     :           4,000
சம்பளம்           :          48,000
கடன் வட்டி :          11,000
கடன் தவணை (60 மாதம்) :           17,500
இயந்திரப் பராமரிப்பு   :            5,000
விற்பனைச் செலவு     :          10,000
மேலாண்மைச் செலவு     :        10,000
தேய்மானம் 15%     :      6,250
அச்சு மாற்றம்       :      2,000
மொத்தம்         :    7,13,750
மொத்த வருமானம்   :   7,60,000
மொத்தச் செலவு :   7,13,750
_________
லாபம்                   :    46,250
_________

படங்கள்: தே.தீட்ஷித்

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)