Published:Updated:

இளைஞர்களின் சேமிப்பு, செலவு!

செ.கார்த்திகேயன்

இளைஞர்களின் சேமிப்பு, செலவு!

செ.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

நம் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே. ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து பைக்குகள் வரை இன்றைக்கு இளைஞர்களின் விருப்பத்துக்குரிய பொருட்கள்தான் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. இந்த நிலையில், இன்றைய இளைஞர்களின் சேமிக்கும் திறன், செலவு செய்யும் மனப்பான்மை, பொருளாதாரம் குறித்த விழிப்பு உணர்வு, இந்திய நாடு குறித்த அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,100 இளைஞர்களிடம் ஓர் அதிரடி சர்வே நடத்தினோம்.

20-30 வயது வரை, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனியார், அரசு மற்றும் சுயதொழில் செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், கிராமங்களில் 24% பேர், நகரங்களில் 34% பேர் மற்றும் பெருநகரங்களில் 42% எனப் பலதரப்பினரையும் தொடர்பு கொண்டு சர்வே செய்தோம். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 75 சதவிகித ஆண்களும், 25 சதவிகித

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!

பெண்களும் பதில் அளித்தார்கள். அந்த சர்வே மூலம் நமக்குத் தெரியவரும் உண்மைகள் இனி...

உங்கள் தேவை பூர்த்தியாகிறதா?

இந்த சர்வேயில் கேட்ட பல கேள்விகளில் முக்கியமானது, 'இன்றைய பொருளாதாரச் சூழல் உங்களின் தேவையைப் பூர்த்திச் செய்கிறதா?’ என்பது. இந்தக் கேள்விக்கு 46 சதவிகிதத்தினர் 'இல்லை’ என்றும், 45 சதவிகிதத்தினர்  'ஓரளவுக்கு’ என்றும் பதிலைத் தந்திருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர் மட்டுமே 'ஆம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்து கிராமம், நகரம், பெருநகரம் என அனைத்து இடங்களிலும் அவரவர்களின் பொருளாதாரத் தேவையானது சரிவரப் பூர்த்தியாகாமலே  இருக்கிறது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

 செலவு குறித்த மனப்பான்மை!

இளைஞர்களின் செலவு குறித்த மனநிலையைத் தெரிந்துகொள்ள, 'நீங்கள் ஒரு மாதத்துக்கு எத்தனை  முறை ஷாப்பிங் போவீர்கள்? ஒருமுறை ஷாப்பிங் போனால் எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்று கேட்டிருந்தோம். பெரும்பாலானவர்கள் 'அதிகபட்சம் மூன்றுமுறை’ என்றும், 'அதிகபட்சம் ரூ.2,000-க்குக் கீழ்’ என்கிற பதிலையே தந்திருந்தனர். (எனினும் தேவையைப் பொறுத்து இந்தத் தொகை மாறலாம்!)

'வரவு, செலவுக் கணக்குகளைப் பராமரிக்கும் பழக்கம் உண்டா?’ என்று நாம் கேட்ட கேள்விக்கு ஆம் என்கிற பதிலைவிட இல்லை, எண்ணம் உள்ளது என்று சொன்னவர்களின் எண்ணிக்கையே அதிகம். கணக்கு எழுதும் பழக்கம் இல்லாததால், செலவு செய்யும் மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. நாம் சர்வே செய்த பலரும் நேரடியாகவே சென்று ஷாப்பிங் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் இளைய தலைமுறையினருக்கானது என்றாலும், இ-காமர்ஸ் இன்னும் பெரிதாக வளரவில்லை என்பதே இந்த சர்வே மூலம் தெரியவருகிறது.

 சேமிக்கும் மனப்பான்மை!

இந்த சர்வேயில் வெளிப்படும் இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மை, இன்றைய இளையதலைமுறையினரிடம் சேமிக்கும் பழக்கமானது வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் தனிமனிதனின் சராசரி சேமிப்பு 30 சத விகிதத்துக்கும்மேல். அது இப்போது 25

இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!

சதவிகிதமாகக்  குறைந்திருப்பது கவனிக்கத்தக்க விஷயம். அதேபோல, பாதுகாப்பான முதலீடு எது என்று கேட்டதற்கு, வங்கி வைப்பு நிதி, தங்கம் ஆகியவற்றை 84 சதவிகிதத்தினர் சொல்லியிருக்கிறார்கள். பங்கு வர்த்தகம், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றை 8 சதவிகிதத்தினரே குறிப்பிட்டிருக்கிறார்கள். பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் கவனம் செலுத்தாமல் இருப்பது, வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கை வெளிச்சங்களாகத் தெரியவில்லை.

அதேபோல, ஆயுள் காப்பீடு குறித்த விழிப்பு உணர்வும் குறைவாக உள்ளது. 'யார் சொல்லி நீங்கள்  இன்ஷூரன்ஸ் எடுத்தீர்கள்’ என்று கேட்டதற்கு, 'தானாக முன்வந்து எடுத்தோம்’ என்கிற பதிலைவிட 'ஏஜென்ட், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வற்புறுத்தலினால் எடுத்தோம்’ என்கிற பதிலையே 59 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்குத்தான் என்பதை இளைய தலைமுறையினர் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

 இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றம்!

இன்றைய சூழலில் எல்லோரும் எதிர்பார்ப்பது அரசியல் மாற்றத்தைத்தான். அப்படியான மாற்றம் நிகழ்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும், இந்திய மக்களின் வாழ்வும் வளம்பெறும் என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்கள். விவசாயத்திலும் தொழில்நுட்பத்திலும் கலாசாரத்திலும் மாற்றம்வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற கேள்விகளுக்கான பதில் வரைபடங்களாக...

இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!
இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!
இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!
இளைஞர்களின்  சேமிப்பு, செலவு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism