இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

##~##

என் பள்ளி ஆசிரியர் ஒருநாள் ஒரு வித்தியாசமான விளையாட்டுப் போட்டிக்கு அழைத்தார். ''என் கையில 86,400 ரூபாய் இருக்கு. இந்தப் பணத்தை உயரமான இடத்துல தூக்கிப் போடுவேன். உங்கள்ல யாருக்கு திறமை இருக்கோ, அவங்க இந்த மொத்த பணத்தையும் (86,400 ரூபாய்) கேட்ச் பண்ணி எடுத்துக்கலாம்'' என்று சொன்னவுடன் எங்களுக்கெல்லாம் ஏக குஷி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆனால், சில கண்டிஷன்களும் இருக்கு'' என்றவுடன், ''சொல்லுங்க மிஸ், வாட்ஸ் யுவர் கண்டிஷன்?'' என்று அவசர அவசரமாக கேட்டோம்.

''இந்தப் பணத்தை அந்தந்த நாள்லயே செலவு பண்ணிடணும். அடுத்தநாள் மிச்சம் வைச்சி எடுத்துப் போகக் கூடாது. வேஸ்ட்டான செலவுகள் பண்ணக்கூடாது. செலவு பண்ண பணம் வேற ரூபத்துல வரக்கூடாது. யாரு வர்றீங்க?'' என்று அவர் கேட்டபோது, எங்களுக்கு சின்னதாக ஒரு சந்தேகம் வந்தது.  

''மேடம், நீங்க தூக்கிப்போடற அவ்வளவு பணத்தையும் மொத்தமா எப்படி கேட்ச் பிடிக்கமுடியும்? தவிர, அன்னிக்கே செலவு பண்ணனும்னு வேற சொல்றீங்களே! நாங்க பண்ண மாட்டோம்னு தெரிஞ்சுகிட்டுதானே நீங்க இதையெல்லாம் சொல்றீங்க'' என்று கேட்டோம்.

அடுத்து ஆசிரியர் வரிசையாக சில கேள்விகளை கேட்டார்.

''ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்?''

''24 மணி நேரம்''

''ஒரு மணி நேரத்துக்கு எத்தனை நிமிஷம்?''

''60 நிமிடங்கள்''

உனக்கும் மேலே நீ

''ஒரு நிமிஷத்துக்கு எத்தனை விநாடி?''

''60 விநாடி''

''அப்ப, ஒரு நாளைக்கு எத்தனை விநாடி?''

ஒருவழியாக கூட்டி பெருக்கிப் பார்த்து 86,400 விநாடி என்று சொன்னோம்.

''இப்ப புரியுதா, நான் சொன்ன பணமும், இந்த 86,400 விநாடிகளும் ஒண்ணுதான். இந்த விநாடிகள் எல்லாம் ஒவ்வொரு ரூபாய்க்குச் சமம். இத்தனை நேரத்தையும் ஒண்ணா செலவு பண்ணவும் முடியாது. அடுத்த நாளைக்கு எடுத்துட்டும் போக முடியாது. அந்த விநாடியை செலவு பண்ணிட்டா, திரும்பக் கிடைக்கவும் கிடைக்காது. நேரமும் பணமும் ஒண்ணுதான். அந்த நேரத்தை  வீணடிக்காம புத்திசாலித்தனமா பிரயோஜனமாகச் செலவு செய்தால் நம்முடைய நேரம் நல்லாருக்கும்'' என்று அவர் சொன்னபோதுதான் நேரத்தின் அருமை எங்களுக்கு புரிந்தது.

நேரம் என்பதைத் திரும்பப் பெறமுடியாது. பாதுகாக்கவும் முடியாது. அதுக்கு 'ரீப்ளேஸ்மென்ட்’ கிடையாது. மாற்றி வைக்கவும் முடியாது. போனால் போனதுதான். சுருக்கமா சொல்லவேண்டுமெனில், காலம் என்பது நம் அனைவரின் மூலதனம். இந்த மூலதனத்தைச் சரியாக செலவழித்தால், லாபம் என்கிற வெற்றி நம்மைத் தேடிவரும்.

உனக்கும் மேலே நீ

அந்தந்த நேரத்தில் அந்தந்த காரியங்களைச் செய்துமுடித்துவிட்டால், 'என் நேரம் சரியில்லை, என்ன பண்றது? எல்லாம் என் கெட்ட நேரம்... விதி விளையாடுது’ என்ற புலம்பல்களைத் தவிர்க்கலாம். நேரத்தை நாம் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றால் மனஅழுத்தமே ஏற்படும். சரியான நேரத்தில் செய்து முடிக்கப்படுகிற காரியங்களிலிருந்துதான் வெற்றி என்பது தொடங்குகிறது என்பது பலருக்கும் தெரியாத பரம ரகசியம்.

நேரத்தைச் சரியாகச் செலவிடவேண்டுமெனில், நம்முடைய குறிக்கோள்களும் எண்ணங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கவேண்டும். இலக்கு எது என்று சரியாகத் தெரிந்துவிட்டால் அதை அடைவதில் எந்தப் பிணக்கும் இருக்காது. தவிர, இந்த நேரத்தில் இதனை முடிக்கவேண்டும் எனில், அந்த நேரத்தில் அதை முடித்தாகவேண்டும்.

நமக்கு வருகிற எண்ணங்கள்தான் செயலாக மாறுகிறது. அந்த நல்ல எண்ணங்களை நேர்முகப்படுத்தினால் நம் நேரத்தை அழகாகப் பயன்படுத்தலாம். 80 வயது சராசரியாக வாழ்கிற மனிதர்கள் வெற்றியின் உச்சத்தை அடைவதற்கு அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய காலம் 13 வருடங்கள்தான். இந்த 13 வருடங்களில்தான் நம் நாட்டுக்கு பெரிய தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் உருவாகி இருக்கிறார்கள்.  

நன்றாக யோசித்துப் பாருங்கள். நம்முடைய 24 மணி நேரம் எப்படிக் கழிகிறது?

தூக்கம்: 8 மணி நேரம். (சிலருக்கு அதையும் தாண்டி)

கல்லூரியோ, அலுவலகமோ:

8 மணி நேரம்

சாப்பிடுவது: 2 மணி நேரம்

அரட்டை அடிப்பது, பயணம் செய்வது: 2 மணி நேரம்

உடல் சுத்தம், குளிப்பது, மற்றக் கடன்கள்: 1 மணி நேரம் கிடைத்ததற்கரிய மூணு மணி நேரத்தை நாம் எப்படிச் செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது.

நம் நேரத்தை எப்படி திட்டமிட்டுச் செலவழிக்கலாம்?

உனக்கும் மேலே நீ

இன்று எந்த வேலைகளைச் செய்யப்போகிறோம் என்பதை முதலில் பட்டியலிடுங்கள். இதற்கு நீங்கள் ஒதுக்கப்போகிற 15 நிமிடம்தான் உங்களுடைய அன்றைய தினத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை நான்கு பிரிவாக பிரித்துக்கொள்ளலாம்.

 முக்கியம் மற்றும் சீக்கிரமும்கூட,
 சீக்கிரமில்லை; ஆனால் முக்கியம்
சீக்கிரம்; ஆனால் முக்கியமில்லை,
 சீக்கிரமுமில்லை, முக்கியமில்லை.

இப்படி பிரித்துக்கொண்டால், முன்னுரிமை அடிப்படையில் உங்கள் வேலைகளைச் செய்ய முடியும்

நீங்கள் செய்யவேண்டிய வேலையை நீங்களே செய்யுங்கள். அடுத்தவர்களின் தலையில் கட்டாதீர்கள்.

இன்றே செய்யுங்கள். அதை நன்றே செய்யுங்கள். செய்வன திருந்தச் செய்யுங்கள்.

எந்தவொரு வேலையையும் கடைசி நேரத்துக்கு தள்ளிப் போடாதீர்கள்.

கஷ்டமான வேலைகளை முதலில் செய்யத் துவங்காதீர்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் அன்றைக்கு நீங்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் செய்துவிட்டீர்களா, எந்த வேலையை என்ன காரணத்தால் செய்ய முடியாமல் போயிருக்கிறது, மீண்டும் அந்த வேலையை எப்போது, எப்படி செய்து முடிக்கப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிடுங்கள்.

முடிவாக, எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு செய்யுங்கள்; நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism