Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சே.புகழரசி

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சே.புகழரசி

Published:Updated:

கச்சா எண்ணெய்!

##~##

கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தென்கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் வீசிய அதிகமான பனிப் புயல்தான். மேலும்,  பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு, இந்த ஆண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் ஜனவரியில் ஆரம்பித்துள்ள குளிர் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். லிபியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய்க் கிணறிலிருந்து குழாய் வழியாக அனுப்பப்படும் எண்ணெய், கலவரத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்துத் தற்போது ஒரு நாளைக்கு 2,00,000 பேரல்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது. இது முன்னர் சராசரியாக 3,50,000 பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூன்று சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சீனா இதுவரை இல்லாத அளவு 28.16 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.

வரும் வாரத்தில் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான குளிர்,  லிபியா, அங்கோலாவில் சப்ளை குறைந்துள்ளது போன்ற காரணத்தால் விலை அதிகரிக்கலாம். டெக்னிக்கல்படி, குறுகியகால சப்போர்ட் லெவல் ரூ.6,120. இதற்குக் கீழே சென்றால் 6,040 - 6,000 வரை செல்லலாம். முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.6,300-ஐ தாண்டிச் செல்லும்பட்சத்தில் ரூ.6,420 - 6,500 வரை செல்லலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

பரிந்துரை: பிப்ரவரி கான்ட்ராக்ட், ரூ.6,120 - 6,130 லெவலில் வாங்கலாம். இலக்கு விலை- ரூ.6,275 - 6,380. ஸ்டாப் லாஸ் - ரூ.6,040.

தங்கம்!

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏற்றத்திலேயே இருந்தது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கடந்த வாரத் தொடக்கத்தில் சுமார் 1,265 டாலராக இருந்த தங்கத்தின் விலை, வார இறுதியில் 1,310 டாலர் வரை சென்றது. இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை வார தொடக்கத்தில் சுமார் ரூ. 28,825-லிருந்து வார இறுதியில் ரூ.29,218-ஆகச் சென்றது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் சில்லறை விற்பனைக் குறைந்தது. மேலும், அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து அமெரிக்க ஃபெடரலின் ஊக்குவிப்புத் தொகை குறைப்பில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், சீனாவின் தங்கத்தின் தேவையும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆக, வரும்வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

வெள்ளி!

வெள்ளியின் விலை கடந்த மூன்று வாரத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையேற்றத்தையடுத்து வெள்ளியின் விலையிலும் ஏற்றம் இருந்தது. மேலும், சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதையடுத்துத் தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு சற்றுக் குறைந்துள்ளதும், சில்வர் ஃபண்டுகளில் முதலீடு அதிகரிப்பதாலும் வரும் வாரத்தில் வெள்ளியின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பரின் இரண்டாவது நுகர்வோரான அமெரிக்காவில் சில்லறை விற்பனை குறைந்ததையடுத்து, காப்பரின் விலை கடந்த வார இறுதியில் சற்றுக் குறைந்தது. எனினும், வரும் வாரத்தில் சீனாவின் தேவைக் காரணமாக விலையிறக்கம் தடுக்கப்படலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அதேசமயம், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் காப்பரின் விலை குறையலாம். வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் காப்பர் மட்டுமல்லாமல், மற்ற அடிப்படை உலோகங்களின் விலையேற்றம் தடுக்கப்படும்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் நிலவிவரும் குளிர் காரணமாக, கடந்த வாரம் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தே வர்த்தகமானது. அதேசமயம், இயற்கை எரிவாயு இருப்பும் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாகத் தேவையும் அதிகரித்துள்ளது. மேலும், கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் வரும் வாரத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் வெப்பநிலையைச் சமன்படுத்த இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism