ஜஸ்ட் ரிலாக்ஸ்
##~## |
''பிசினஸ் என்றாலே டென்ஷன் என்பது இன்-பில்ட்டாகவே இருக்கும். டென்ஷன் இல்லாத பிசினஸ் என்று உலகில் எதுவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு டென்ஷனும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரும். இந்த டென்ஷன்களுக்கு உடனடியாகத் தீர்வுக் காணமுடியவில்லை எனில், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு, அடுத்த வேலையைச் செய்ய ஆரம்பிப்பேன். அப்போது, டென்ஷனுக்கு நல்ல தீர்வுக் கிடைப்பதோடு, அடுத்த டென்ஷனை எதிர்கொள்ளத் தேவையான பலமும் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனக்குப் புத்துணர்ச்சித் தரும் ரிலாக்ஸேஷன்கள் அதிகம் செலவு பிடிக்காதவை. புத்தகங்களை வாசிப்பது எனக்குப் பிடித்த முக்கியமான ரிலாக்ஸேஷன். ஒரு புத்தகத்தை எடுத்தால் அதைப் படித்துவிட்டே கீழே வைப்பேன். எட்டு மணி நேரம்கூடத் தொடர்ந்து படிப்பேன்.
என் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கி, குதூகலமாக இருப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். தினசரி அவர்களோடு விளையாடுவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மனைவி, குழந்தைகளோடு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவேன்.

இதுதவிர, புகைப்படங்கள் எடுப்பதிலும் எனக்கு நாட்டம் அதிகம். ஆனால், தற்போது இதற்குத் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும், குடும்பத்துடன் சுற்றுலாச் செல்லும்போது நான் புகைப்படக் கலைஞராக மாறிவிடுவேன்.
நாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் முக்கிய நோக்கமே, வாடிக்கையாளர்கள் எந்த டென்ஷனும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். என் வாடிக்கையாளர்கள் ரிலாக்ஸாக உணரும் போது, நான் ரிலாக்ஸ் ஆகிறேன்!''