''பி.காம் முடித்தபிறகு, வெளிநாட்டில் என்னை எம்.பி.ஏ படிக்கச் சொன்னார் என் அப்பா. நானோ, 'அதற்கான பணத்தை மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். நான் பிசினஸ் செய்கிறேன். அதில் வருமானம் வந்தபின் எம்.பி.ஏ படிக்கிறேன்’ என்று சொன்னேன். ஏற்கெனவே நான் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தியதைப் பார்த்த என் அப்பா, எனக்கு தைரியமாக 10 லட்சம் ரூபாய் தந்தார். நான் விரும்பியபடி காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஃபுட்வேர் கடையை அமைத்தேன்'' என உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் என்.முகமது தௌபிக் ஹாசன். மேற்கொண்டு அவர் பேச ஆரம்பித்தார்.

முதலாளியாக வேண்டும்!

''நான் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் ஈஸி முறையில் ரீசார்ஜ் செய்ய சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தேன். சாஃப்ட்வேர் வல்லுநர்கள் துணையுடன் ஒரே போனில் அனைத்து கம்பெனிகளுக்கும் ரீசார்ஜ் செய்யும் முறையைக் கொண்டு வந்தேன். இது என் வேலையை எளிதாக்கியது. இதன் மூலம் ஒரே ஒரு போன், ஒரு வேலையாளை மட்டும் வைத்துக்கொண்டு மாதம் ரூ.20,000 - ரூ.25,000 வரை லாபம் சம்பாதித்தேன். எம்.பி.ஏ முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்வதைவிட நாலு பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு தொழிலை செய்வதைப் பெருமையாக நினைக்கிறேன்'' என்று சொல்லும் தௌபிக் தனது பிசினஸ் ரகசியங்களைப் பற்றி சொன்னார்.

பிசினஸ் ரகசியம்!

''பொதுவாக, தொழிலை ஆரம்பிக்கும் போதே வாடிக்கையாளர்கள் யார் என்பதை முதலில் உணரவேண்டும். என்னைப் பொறுத்தவரை, நான்-பிராண்டட் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துதான் கடையை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.

அடுத்ததாக, காஸ்மெட்டிக் போன்ற பொருட்களில் அப்டேட் அவசியம். அதனால் எப்போதுமே என் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப என்ன பர்ச்சேஸ் செய்யவேண்டும் என முடிவு எடுத்து, பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற இடங்களில் ஷாப்பிங் செய்து தரமான பொருட்களை இறக்குவேன்.

பிசினஸ் என்றாலே விளம்பரம் அவசியம்தான். அதேசமயம் விளம்பரத்துக்கு அதிகம் செலவு செய்து நஷ்டமடையக் கூடாது. என்னைப் பொறுத்தவரை, லோக்கல் டிவியில் விளம்பரம் செய்து நிறைய வாடிக்கையாளர்களை கவர முடிந்தது.

லாபத்தைச் சேமிக்கிறேன்!

என் கடைக்கு ரூ.30,000 வாடகை, விளம்பரம், பணியாளர் சம்பளம், மின்சாரம் மற்ற சில்லறை செலவுகள், வரி எல்லாம் போகக் கையில் லாபமாக ரூ.25,000 கிடைக்கிறது. இதில் ஒரு பைசாகூட எடுக்காமல் அப்படியே வங்கியில் போட்டுவிடுவேன். எப்போதும் பிசினஸ் மட்டுமே கதி என்று இருக்கமாட்டேன். படிப்பில் 70% தேர்ச்சி வைத்திருக்கிறேன். அரியர் எதுவும் கிடையாது.

என் பிசினஸில் பெரிய டார்கெட் எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அதை அனுபவித்து செய்ய முடிகிறது. படிக்கும் வயதில் வெறும் அரட்டை, ஆன்லைன் எனச் சுற்றாமல் உருப்படியாக ஒரு வேலையில் இறங்கியதால் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்று சொன்ன தௌபிக், ''முதலீடு செய்யும் பணம் எவ்வளவு என்பதைவிட லாப சதவிகிதம்தான் முக்கியம். அதனால் பத்தாயிரம் இருந்தால்கூட நல்ல பிசினஸ்மேனாக மாறலாம். முறையான திட்டமிடலும் அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் போதும்'' என்று முடித்தார்.

விளையும் பயிர் என முளையிலேயே தெரிகிறார் தௌபிக்!

படங்கள்: தே.தீட்ஷித்