மியூச்சுவல் ஃபண்டுகளில் இருவகை உள்ளன. ஒன்று, கடன் சார்ந்தவை; மற்றொன்று, பங்கு சார்ந்தவை. இந்த இரு வகை மியூச்சுவல் ஃபண்டுகளும் டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. ஆனால், இந்த இரு வகையான ஃபண்டுகள் தரும் டிவிடெண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கடன் சார்ந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டை வழங்குவதற்குமுன், டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். ஆனால், பங்கு சார்ந்த ஃபண்டுகள் அந்த வரியைச் செலுத்த தேவையில்லை. ஆகவே, கையில் கிடைக்கும் தொகை கணிசமாகக் கிடைக்கும்.

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் டிவிடெண்ட் தருவோம் என்று எந்த கேரன்டியும் தரக்கூடாது. ஆனால், கடந்தகாலச் செயல்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, எந்தத் திட்டங்கள் நல்ல டிவிடெண்டைத் தரவல்லது என்பது நமக்குப் புரியும். அவ்வாறு நல்ல டிவிடெண்டைத் தந்துவருகிற திட்டங்களை இப்போது அலசிக் கண்டுபிடிப்போம்!

அதிக வருமான வரம்பில் இருப்பவர்களுக்கு, பங்கு சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் ஆப்ஷன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானம், வரிச் சலுகை, தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல் உள்ள பணத்தை முதலீடு செய்வது, ரெகுலர் கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்கள் எனப் பல காரணங்களுக்கு யார் வேண்டுமா னாலும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

டிவிடெண்ட் ஃபண்டு தேர்வு!

முதல்கட்டமாக, அனைத்து லார்ஜ் கேப், மிட் மற்றும் ஸ்மால் கேப், லார்ஜ் மற்றும் மிட் கேப் மற்றும் பேலன்ஸ்டு திட்டங்கள் அனைத்தையும் பரிசீலனைக்காக எடுத்துக்கொண்டோம். அந்தத் திட்டங்களில் கீழ்க்கண்ட வடிகட்டிகளை (ஃபில்ட்டர்) போட்டு வடிகட்டினோம்.

1. குறைந்தது 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் ஃபண்டுகள்!

2. திட்டம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைந்தது ரூ.1,000 கோடியாக இருக்கும் ஃபண்டுகள்!

3. கடந்த 5 ஆண்டுகளில் திட்டம் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமாக வருமானத்தை தந்திருக்கும் ஃபண்டுகள்!

மேற்கண்ட ஃபில்ட்டர்களில் நமக்குக் கிடைத்த 28 ஃபண்டுகளையும் கடந்த 5 வருடங்களில் தொடர்ச்சியாக டிவிடெண்ட் தந்துள்ளனவா என்று அலசினோம். ஏனென்றால், கடந்த 5 ஆண்டுகள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மிகவும் கஷ்டமான காலக்கட்டம் என்றே கூற வேண்டும். இந்த 5

ஆண்டுகளில் தொடர்ச்சியாக டிவிடெண்ட் தந்த ஃபண்டுகள், வரும் காலங்களிலும் நன்றாக டிவிடெண்டை தரும் என்று கருதலாம்.

மேலும், இந்த ஃபண்டுகளின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தோம். அதற்கும்மேல் கடந்த 5 ஆண்டுகளில் குறைவான வங்கி வட்டியான 8% அளவையட்டி சராசரியாக டிவிடெண்ட் யீல்டு மக்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

இந்த வடிகட்டியையெல்லாம் தாண்டி நமக்குக் கடைசியாகக் கிடைத்த ஃபண்டுகள் 8 மட்டுமே. இந்த 8 ஃபண்டுகளில், இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டு வகையைச் சார்ந்தவையாகும். 2 ஃபண்டுகள் லார்ஜ் கேப் வகையையும், தலா 2 ஃபண்டுகள் லார்ஜ் மற்றும் மிட் கேப் மற்றும் மிட் அண்டு ஸ்மால் கேப் வகையையும் சார்ந்தவையாகும்.

8 ஃபண்டுகளைப் பற்றிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபண்டுகள் அனைத்தும் மூன்று ஃபண்டு நிறுவனங்களில் இருந்தே வந்துள்ளன (ஹெ.டி.எஃப்.சி, ஃபிராங்க்ளின் மற்றும் ஐ.டி.எஃப்.சி).

இந்த நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்குவதை எவ்வளவு முக்கியமாக எடுத்துக்கொண்டுள்ளன என்பதையே இது காட்டுகிறது.

மேலே கண்ட நல்ல டிவிடெண்ட் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சில டிப்ஸ்...

* மேற்கண்ட திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தை குறைவாக இருக்கும்போது முதலீடு செய்வதன் மூலமே நல்ல லாபம் பார்க்க முடியும்.

* ஓய்வுக்காலத்தை நெருங்குபவர்கள், குரோத் ஆப்ஷனுக்குப் பதிலாக டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

* டிவிடெண்ட் ஆப்ஷனில் எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீடு செய்யலாம் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

* ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்யலாம்.

* டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்பவர்கள், குறுகிய காலகட்ட முதலீட்டுக்கு வரவேண்டாம்.

* நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்குத்தான் டிவிடெண்ட் ஆப்ஷனில் நல்ல பலன் கிடைக்கும் என்பதை வாசகர்கள் மறக்கவே கூடாது!