?நான் ஓர் அரசு ஊழியர். பங்குச் சந்தையில் என்னால் முதலீடு செய்ய முடியுமா? இதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளதா?

கே.வெங்கடேசன், திருவாரூர். ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

''தற்போதுள்ள விதிமுறைகளின்படி, அரசு ஊழியர்கள் தினசரி ஊக வர்த்தகம் செய்யக்கூடாது. அதாவது, அடிக்கடி பங்குகளை வாங்கி விற்பது கூடாது. ஆனால், நீண்டகால முதலீட்டு நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை''.

?தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற எப்படி விண்ணப்பம் செய்வது?

செல்லகிருஷ்ணன், கரூர். தகவல் ஆணையக அதிகாரிகள்.

''உங்களுக்கு எந்தத் துறையில் தகவல்கள் தேவைப்படுகிறதோ, அந்தத் துறைக்கு விரிவாகக் கடிதம் எழுதிதான் தகவல்கள் பெறமுடியும். அதாவது, நீங்கள் போக்குவரத்துத்துறை சம்பந்தமாகத் தகவல் தேவையெனில், அந்தத் துறை தகவல் ஆணையருக்கு தேவையான விவரங்களைக் கேட்டுக் கடிதம் எழுத வேண்டும். கடிதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தேவை எனக் கடிதத்தில் குறிப்பிடுவது அவசியம். இந்தக் கடிதத்தில் 10 ரூபாய் நீதிமன்ற ஸ்டாம்ப் ஓட்ட வேண்டும். நீங்கள் கேட்கும் விவரங்கள் 30 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்படவில்லையெனில், மாவட்ட தகவல் ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரிடமிருந்தும் அடுத்த 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வில்லையெனில் இருவருக்கும் எழுதிய கடிதத்தின் நகலை இணைத்து சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம்.''

?என்னுடைய கணவர் ஒரு விவசாயி. வருடத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில் 30 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கேட்டு தனியார் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், வருமான வரித் தாக்கல் செய்த விவரம் இல்லை என்று டேர்ம் இன்ஷூரன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இது சரியா?

சரஸ்வதி, கோவை. ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ்இந்தியா டாட்காம்.

''சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குகின்றன. ஆனால், வருமானத்துக்குக் கட்டாயம் ஆதாரம் தேவை. விவசாய நிலம் உங்கள் பெயரில் இருப்பதற்கான ஆதாரம் அல்லது விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானத்துக்கான வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம். அதாவது, வங்கிக் கணக்கு விவரம், ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருந்தால் அதைக் கொடுக்கலாம். இதன் மூலம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.''

?வெளிநாட்டில் வாழும் இந்தியன் நான். இந்தியாவில் எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டை தற்போது விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பணத்தை டாலராக மாற்றி வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முடியுமா? இதற்கு தனியாக ஏதாவது வரிச் செலுத்த வேண்டுமா?

@ கண்ணன், ஸ்ரீகாந்த், ஆடிட்டர்.

''உங்கள் சொத்தை விற்பனை செய்வதன் மூலமாகக் கிடைக்கும் தொகைக்கு நீண்டகால மூலதன ஆதாய வரிச் செலுத்தவேண்டி இருக்கும். அதாவது, சொத்தை வாங்கிய விலைக்குப் பணவீக்க விகித சரிக்கட்டல் மேற்கொண்ட பிறகு, அந்த மதிப்பை விற்பனை விலை யிலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபத்துக்கு 20% வரிச் செலுத்த வேண்டியிருக்கும். வரி கட்டியதுபோக மீதியுள்ள தொகையை ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கியின் மூலமாக டாலராக மாற்றி வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.''

?இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யலாமா அல்லது மொத்தமாக ஓரே முறையாக முதலீடு செய்யலாமா, வரிச் சேமிப்புக்கு எது சிறந்ததாக இருக்கும்?

கந்தன், திருச்சி. எல்.சார்லஸ், ஆடிட்டர்.

''இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறமுடியும். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு மூன்று வருடம் லாக் இன் பீரியடு இருக்கும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் தொகை அந்த மாதத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு லாக்-இன் காலமாக இருக்கும். ஒருமுறை மொத்தமாக முதலீடு செய்தாலும், முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்றாண்டுக்கு இந்த லாக்-இன் இருக்கும். வரிச் சலுகையில் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது. ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும்போது சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், சந்தை மிகவும் இறங்கி இருக்கும் நேரத்தில் செய்யப்படும் மொத்த முதலீடு லாபகரமாக இருக்கும். மேலும், உங்களால் மொத்தமாக முதலீட்டை திரட்ட முடியுமா என்பதைப் பொறுத்தும் உங்கள் முதலீட்டு முடிவை எடுக்கவும்.''

?நானும், என் மனைவியும் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்கள். ஃபிக்ஸட் டெபாசிட் மூலமாக வருடத்துக்கு ரூ.2.50 லட்சமும் பென்ஷன் மூலமாக ரூ.2 லட்சமும் வருமானம் கிடைக்கிறது. இதை அதிகம் ரிஸ்க் இல்லாத எந்த முதலீட்டில் முதலீடு செய்யலாம்?

வாசுதேவன், சென்னை. தேசிகன் ரங்கராஜன், நிதி ஆலோசகர்.

''அதிகம் ரிஸ்க் இல்லாத முதலீடு எனில் நீங்கள் வங்கி அல்லது அஞ்சலக ஆர்.டி திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு வங்கியில் 7.50%, அஞ்சலகத்தில் 8.30% வருமானம் கிடைக்கும். பேலன்ஸ்டு அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.'

படம்: ஜெ.வேங்கடராஜ்