''இதோ, இதோ வந்துடப்போகுது'' என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''என்ன வரப்போகுது?'' என்றோம்.

''தேர்தல் தேதி அறிவிப்புதான். அநேகமாக அடுத்தவாரக் கடைசியில் அல்லது ஒன்றிரண்டு நாட்கள் தள்ளி தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல் சந்தை கொஞ்சம் மேலேயோ அல்லது கீழேயோ ஏறியிறங்க வாய்ப்புகள் அதிகம். எனவே, டிரேடர்கள் மட்டுமே தின வியாபாரத்தில் ஈடுபடலாம்'' என்று பேசிக்கொண்டே போனார்.

அவரை இடைநிறுத்தி, ''ஹெச்சிஎல் நிறுவனம் குறித்து இப்படி ஒரு திடுக்கிடும் செய்தி வந்திருக்கிறதே?'' என்று ஆச்சர்யம் காட்டினோம்.

''ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் அதன் மெஜாரிட்டி பங்குகளை விற்கப்போவதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் வந்த செய்தியைப் பற்றித்தானே சொல்கிறீர். எனக்கும் ஆச்சர்யம்தான். சிவ் நாடாருக்கு ஒரே மகள் ரோஷிணி. இவருக்குத் தகவல் தொழில்நுட்ப வணிகத்தில் தொடர்ந்து ஈடுபட பெரிய அளவில் விருப்பம் இல்லையாம். இதனால் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள (சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல்) பங்குகளை விற்க, சரியான நிறுவனத்தை சிவ் நாடார் தேடி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச்சிஎல், இது வெறும் வதந்தி என்று சொல்லி மறுத்துள்ளது.

ஹெச்சிஎல், 2012-13-ம் ஆண்டில் 4,044 கோடி லாபம் ஈட்டிள்ளது. விற்பனை 25,581 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நவம்பரில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சிவ் நாடார், 'இன்னும் 10 வருடங்களுக்கு நிறுவனத்தை விற்கும் எண்ணமே இல்லை’ என்று சொல்லியிருந்தார். நெருப்பில்லாமல் புகையாது. இன்னும் கொஞ்சகாலம் பொறுத்தால் உண்மை தெரிந்துவிடும்''

என்றவருக்கு மெது பக்கோடாவும் ஏலக்காய் டீயும் தந்தோம்.

''ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனம், அதன் கணிசமான பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதே?'' என்று கேட்டோம்.

''ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனம், சிங்கப்பூரைச் சார்ந்த வேளாண் வணிகக் குழுமமான வில்மர் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு முன்னுரிமைப் பங்குகளை ஒதுக்கித்தரவிருக்கிறது. இப்படி 27.5 சதவிகித பங்குகளை ரூ.517 கோடிக்கு ஒதுக்கித் தரவுள்ளது. ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.7,500 கோடியாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.193 கோடி. கடனைக் குறைக்கவே இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்திருப்பதாகத் தகவல்'' என்றார் மெதுபக்கோடாவை சாப்பிட்டபடி.

''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வட்டியை உயர்த்த வேண்டும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) சொல்லி இருக்கிறதே?'' என்றோம்.

''இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.9 சதவிகிதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. ஆனால், இதற்கு மாறாக இந்த வளர்ச்சி 4.6 சதவிகிதமாக இருக்கும் என ஐஎம்எஃப் மதிப்பீடு செய்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைக்கான காரணங்களில் 65% உள்நாட்டிலேயே இருக்கின்றன. அதாவது, நிலையற்ற கொள்கைகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மற்றும் அமல்படுத்துவதில் காலதாமதம் எனப் பல காரணங்களை ஐஎம்எஃப் அடுக்கியுள்ளது. கட்டுக்கடங்காமல் இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஆர்பிஐ தொடர்ந்து வட்டியை உயர்த்த வேண்டும் எனவும் அது கருத்து தெரிவித்துள்ளது'' என்று விளக்கினார்.

''பலே, நல்ல யோசனைதான். டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாபம் கணிசமாக அதிகரித்துள்ளதே?'' என்று கேட்டோம்.

''டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாபம் சராசரியாக 13% அதிகரித்துள்ளது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் மிக அதிகமாகும். குறிப்பாக, ஆட்டோ (50%), ஹெல்த்கேர் (41%), ஐ.டி (37%) மெட்டல்ஸ் (30%), தனியார் வங்கிகள் (17%) நிகர லாபம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், பொதுத்துறை வங்கிகள் 37% லாப இழப்பு கண்டுள்ளது. கேப்பிட்டல் கூட்ஸ் துறையும் 10% லாப இழப்பைக் கண்டுள்ளது'' என்றார்.

''ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பல பங்கு தரகு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறதே, என்ன விஷயம்?'' என்று வினவினோம்.

''ஆம் ஆத்மி கட்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீது ஊழல் புகார் கூறியுள்ளதால், அந்த நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்தல் முடிவு வரும் வரை இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதிலிருந்து முதலீட்டாளர்கள் விலகியிருக்கும்படி பல பங்கு தரகு நிறுவனங்கள், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றன'' என்று சொன்னார்.

''எம்சிஎக்ஸ்-லிருந்து முக்கிய அதிகாரிகள் பதவி விலகி கொண்டிருக் கிறார்களே?'' என்றோம்.

''எம்சிஎக்ஸ்-ன் முதன்மை நிதி அதிகாரி ஹேமந்த் வாஸ்தனி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் தனது ராஜினாமாவுக்கு எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்குமுன் இந்த நிறுவனத்தின் நிர்வாகம் சாராத துணைத் தலைவராக இருந்த ஜிக்னேஷ் ஷா ராஜினாமா செய்தார். இவருக்கு முன்பு நிறுவனத்தின் எம்டி ஸ்ரீகாந்த் ஜவால்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்படியே எம்சிஎக்ஸ் நிறுவனத்திலிருந்து ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். எம்சிஎக்ஸ்-ன் குழும நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் ரூ.5,600 கோடி மோசடியில் எங்கே தங்களையும் சேர்த்துவிடுவார்களோ என்கிற பயத்தில் இப்படி ராஜினாமா செய்கிறார்களோ என்னமோ?'' என்றவர் கிளம்பத் தயாரானார்.

''இந்த வாரம் நான் ஷேர் டிப்ஸ் தருகிறேன். இவை நீண்டகாலத்துக்கானவை. விலை குறையும்போது கொஞ்சமாக வாங்கவும்.

டிடிகே பிரெஸ்டீஜ், ஜென்ஸர் டெக்னாலஜீஸ், சத்பவ் இன்ஜினீயரிங், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்.''