வரவர நியூஸ் படிக்கவே பயமா இருக்கு! அரசியல் செய்திகள்தான் மோசமா இருக்கேன்னு பொருளாதாரம் பத்தின செய்திகளைப் படிக்க ஆரம்பிச்சா, அது அதைவிட மோசம்! 'அப்படி என்னத்த படிச்சுட்டு இப்படிப் புலம்புறே ஏகாம்பரம்’ன்னுதானே கேக்குறீங்க, சொல்றேன், கேளுங்க.

எல்லாம் நம்ம நாட்டோட கடன் அளவைப் பத்திதாங்க. நான் சின்னப்புள்ளையா இருக்கறப்ப இருந்து இந்தியாவுக்குக் கடன் இருக்குது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதைப் பிரிச்சா தலைக்கு இவ்வளவு கடன் இருக்குதுன்னு சொல்லிச் சொல்லியே கடன்ங்கிறது நமக்கு ரொம்பவுமே பழகிப்போன ஒரு விஷயமா மாறிடுச்சுங்க. அதனாலேதானோ என்னவோ, எப்பவுமே நாம நம்ம நாட்டோட கடனைப் பத்தி பெரிசா எதுவும் கண்டுக்கிறதில்லை.

சாதாரணமா ஒரு தனிமனிதனா நாம கடன் வாங்குனா என்ன செய்வோம்? வருமானத்துல மிச்சம் புடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா அதை அடைச்சுடுவோம். வருமானம் பத்தலேன்னா, வருமானத்தை உயர்த்திக்க முயற்சி பண்ணுவோம். இந்த ரெண்டுமே செய்யலேன்னா, ஏற்கெனவே வாங்குன கடனை அடைக்க, இன்னொரு கடனை வாங்குவோம், இல்லீங்களா?

நானும் நீங்களும் சாமான்யமான ஆளுங்க. இந்த ரொட்டேஷனைப் பண்ணி கொஞ்சநாள் தப்பிச்சுட்டு உருட்டிப்புரட்டி கடனை செட்டில் பண்ணி வெளியே வந்துடுவோம். ஏன்னா தனிநபரா நம்ம கடன் தொகை ரொம்பவுமே சின்னது.

ஆனா, நம்ம அரசாங்கமும் எக்கச்சக்கமா கடனை வாங்கி வச்சுக்கிட்டு இருக்குது. படிப்படியா கடன் அதிகமாகிப்போய் இப்ப என்ன நடக்குதுன்னு தெரியுமா? ஏற்கெனவே வாங்குன கடனை ஒவ்வொரு வருஷமும் வட்டியோடு திருப்பித்தர்றதுக்கே கடன் போத மாட்டேங்குதாம். அரசாங்கம் புதுசா வாங்கின கடன், ஏற்கெனவே வாங்குன கடன்களை அடைக்கவும், நிலுவையில இருக்கும் கடன்களுக்கு உண்டான வட்டியை கட்டவுமே சரியா இருக்குதாம்.

'இது என்ன அநியாயமா இருக்கே’ங் கிறீங்களா? மேற்கொண்டு விஷயத்தைக் கேளுங்க.

2010-11-ல நம்ம நாட்டோட பணத் தேவை கொஞ்சம் அதிகமாகவும், 2014-15-ல இந்தத் தேவையோட நிலைமை வரலாற்றிலேயே உச்சத்திலேயும் போயிடுச்சு. புதுசா கடன் வாங்குறோம். அதுல பாதிப் பணத்தைப் பழைய கடனைத் திருப்பித்தரவும், வட்டியைக் கட்டவும் போயிகிட்டு இருக்கு. இப்படியே போய்க்கிட்டு இருந்தா, பிறகு புதுசா எப்படித் திட்டங்களைப் போட முடியுமா? நலிஞ்சுகிடக்கிற மக்களுக்கு ஏதாவது உபயோகமா செய்ய முடியுமா?

'இந்த நிலைமைக்கு நாம் எப்படி வந்தோம்’னு ஆச்சர்யப்படறீங்களா? கடந்த காலத்துல அரசாங்கம் வரவுக்கு மீறின செலவை தொடர்ந்து பண்ணிக்கிட்டு வந்துருக்கு. செலவு அதிகரிச்ச அளவுக்கு வருமானத்தை அதிகரிக்க முடியாம தொடர்ந்து இருந்து வந்திருக்கு.

'இதுதான் உன்னைய மாதிரி சாதாரண மனுசனுக்கே தெளிவாத் தெரியுதே ஏகாம்பரம், அரசாங்கத்துக்கு இதுகூடத் தெரியாதா’ன்னு கேட்பீங்க! தெரிஞ்ச மாதிரி எனக்குத் தெரியலீங்களே! செலவைக் கடுமையா குறைக்கிறதுக்கு வழியும், வரவைக் கணிசமா கூட்டுறதுக்கு வழியும் அரசாங்கம் கண்டுபிடிச்சே ஆகணுமுங்க. ஆனா, இதையெல்லாம் பண்ண அரசாங்கத்துக்கு நேரமில்லையா அல்லது எண்ண மில்லையாங்கிற சிந்தனையெல்லாம் என் மனசுல ஓடுதுங்க. சாமான்யன் கூட இந்தக் கணக்கு வழக்கை தெரிஞ்சுவச்சுக்கிட்டுதானே வாழறான். அரசாங்கத்துக்கு இந்தக் கணக்கு புரியாதா? எதனாலே இப்படி ஒரு நிலைமையில நாம இருக்கிறோமுன்னெல்லாம் நிறையக் கேள்விகள் என் மண்டைக்குள்ளாற குடையுதுங்க.

நாட்டோட வரவு செலவுக் கணக்கைப் பார்த்தா பயமா இருக்குதுன்னு பலபேர் சொன்னாலும், அரசாங்கமோ நாங்க சொல்றது சரிதான்னு அடிச்சு சொல்லிக்கிட்டே வருது. எல்லாம் சரியாயிடுமுன்னும் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க. கூட்டிக்கழிச்சு கணக்குப் பார்த்தா, ஏகப்பட்ட மானியங்கள், செலவுகளுன்னு பணம் பறந்துகிட்டு இருக்கிறது மட்டும் கண்கூடாத் தெரியுதுங்க!

மானியம் இல்லேன்னா சாமான்யன் பிழைக்க முடியுமான்னு கேப்பீங்க. வாஸ்தவம்தான். சாமான்யனுக்கு இது ரொம்பவுமே உதவுது. ஆனா, சில இடத்துலே சாமான்யனுக்குக் கொடுக்கப்படற மானியங்கள் வேறமாதிரியாவும் ஆயிடுதே. உதாரணத்துக்கு, டீசல் விலையில இருக்கிற மானியம். டீசல் விலை உசந்தா, விலைவாசி உயருமே. அதனால மக்கள் பாதிக்கப்படக் கூடாதேங்கறதுக்காகத்தான் மானியம் இருக்குது. அதேசமயம் டீசலைக் குடிக்கிற சொகுசுக் காருக்கு வரியைக் குறைச்சா என்னவாகும்? சொகுசுக் காருமுல்ல மானியத்தைச் சேர்த்து குடிக்கும். இதுமாதிரி எத்தனை இருக்குதோ? மொத்தத்துல நெல்லுக்குப் பாயுறது கொஞ்சம் புல்லுக்கும் பாயத்தானே செய்யும் அப்படீம்பாங்க. ஆனா, நெல்லைவிடப் புல்லு செழிப்பா வளர வழி செஞ்சா முதலுக்கே மோசமாயிடாதுங்களா?

என் அனுபவத்தில செலவைக் குறைக்க அறவே முயற்சி செய்யாமலும், வரவை அதிகம் பண்ண அதைவிட முயற்சி செய்யாமலும் இருக்கிற ஆளுங்கதான் ஒரு கடனை அடைக்க மறுகடனை வாங்குற நிலைமைக்குப் போயிருக்கிறாங்க. அப்படிப்பட்ட கடன் பிரச்னைக்குள்ளார போறவுங்க கடனில இருந்து வெளியவந்ததா சரித்திரம் பூகோளம் எதுவும் இல்லீங்க.

தனிமனிதன் இப்படிச் சிக்கிக்கிட்டா, அவனுக்கு விவரமில்லைன்னு சொல்லி விட்டுடலாம். நீ ஏற்படுத்திக்கிட்ட சிக்கலைவிட்டு நீயேதான் வெளியே வந்துக்கணுமுன்னு சொல்லிடலாம். ஆனா, நாம பேசிக்கிட்டிருக்கிறது நாட்டோட பிரச்னையாச்சே! பிரச்னை பெரிசாச்சுன்னா, மக்கள் அத்தனை பேருமுல்ல கஷ்டப்படுவாங்க. இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். இல்லே இனிமேலாவது யோசிச்சு செயல்பட்டு புத்திசாலித்தனமா இதிலேயிருந்து வெளியிலவர முயற்சிக்கலாம்.

அய்யாமாருங்களே, எதையுமே செய்யாம தேமேன்னு இருந்துடாதீங்க. என்னைய மாதிரி சாமான்யனுங்க பலபேரு வாழ்க்கை இதுல இருக்குது. கரெக்ட்டுங்களா?!