தங்கம்!

தங்கத்தை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடான சீனாவிலிருந்து தேவை குறைந்ததன் காரணமாகத் தங்கத்தின் விலை கடந்த வாரம் சற்று குறைந்தே வர்த்தகமானது.

சீனாவில் கடந்த வியாழக்கிழமை வெளியான ஹெச்எஸ்பிசி-யின் பிஎம்ஐ குறியீட்டின்படி, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தியானது கடந்த பிப்ரவரி மாதத்தில் 48.3-ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 49.5-ஆக இருந்தது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக 50-க்கும் கீழே இருந்து வருகிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் வளர்ச்சி குறைவாக இருப்பதால், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி மாதம் வெளியான ஃபெடரல் ரிசர்வ் அறிக்கையின்படி, அமெரிக்கா தனது பாண்டு வெளியிடும் திட்டத்தைக் குறைக்கும் எனத் தெரிந்ததால் டாலரின் பலம் கடந்த வியாழனன்று கூடியது. மேலும், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் உற்பத்திக் குறியீடு பிப்ரவரி மாதத்தில் மைனஸ் 6.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதுவே, ஜனவரி மாதத்தில் 9.4 புள்ளிகளாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவோ 8.0 புள்ளிகளாகும். இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நிலை யின்மையையே காட்டுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி யடையும்பட்சத்தில் மானிட்டரி கொள்கையில் மாற்றம் இருக்கும் என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

வரும் வாரத்தில் தங்கத்தின் விலை ஏற்றஇறக்கத்துடனே காணப்படும். 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை அதிகரிக்கும்பட்சத்தில் ரூ.30,500 வரையில் செல்ல வாய்ப்புள்ளது. விலை குறையும்பட்சத்தில் ரூ.29,350 வரை குறைய வாய்ப்புள்ளது.

வெள்ளி!

சீனாவின் பிஎம்ஐ குறியீடு குறைந்ததால், உற்பத்தித் துறையில் வெள்ளியின் பயன்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வரும் வாரத்தில் வெள்ளியின் விலை ஏற்றஇறக்கத்துடனே காணப்படும். வெள்ளியின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ரூ.50,391 வரை செல்லலாம். விலை குறையும்பட்சத்தில் ரூ.45,999 வரை குறைய வாய்ப்புள்ளது.Ó

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய நாடான சீனாவில் உற்பத்தி குறைந்துள்ளதால், காப்பர் விலை சற்று குறைந்தது. உலகில் சீனா, காப்பரை அதிகளவு உபயோகப்படுத்தும் நாடாகும். கடந்தாண்டு மொத்த நுகர்வோரில் 40 சதவிகிதம் சீனாவின் பங்களிப்பாகும். சீனாவின் உற்பத்தி குறைவால் வரும் வாரத்தில் சீனாவில் காப்பரின் தேவை குறையலாம். இதனால் வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புண்டு என்கின்றனர் அனலிஸ்ட்கள்!

லெட்: கடந்த வாரத்தில் அடிப்படை உலோகங்களில் லெட் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த 20 டிரேடிங் சீஸன்களிலும் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் லெட் இருப்பு குறைவாகவே இருந்து வருகிறது. இது விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம். எனினும், ஸ்பாட் சந்தைகளில் தேவை குறைந்திருப்பதால் விலையேற்றம் தடுக்கப்படலாம். மேலும் ஐரோப்பா, இந்தியா ஆகிய இடங்களில் ஆட்டோமொபைல் துறை இறக்கத்தில் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜிங்க்: கடந்த இரண்டு மூன்று வாரங்களாக மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஜிங்க் இருப்பு குறைவாகவே இருந்து வருகிறது. சராசரியாக தினசரி வீழ்ச்சி 4,000 மெட்ரிக் டன்னாக உள்ளது. மேலும், புதிய சுரங்கங்களிலிருந்து வரும் சப்ளை குறைந்துள்ளது. பல பழைய சுரங்கங்கள் மூடப்பட்டும் வருகின்றன. இதனால் நடுத்தர காலத்தில் விலையேற்றம் இருக்கும். ஆக, வரும் வாரத்தில் ஜிங்க் விலை அதிகரிக்கலாம்.

நிக்கல்: இந்தோனேஷியாவில் தாது ஏற்றுமதியைத் தடை செய்திருந்தாலும் நிக்கல் இருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில் நிக்கல் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

கச்சா எண்ணெய்!

தேவை குறைவு, அதேசமயம் அதிகப்படியான சப்ளை காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் இறுதியில் விலை சற்றுக் குறைந்தது. சுத்திகரிப்பு ஆலைகள் பராமரிப்புக் காரணமாக மூடப்பட்டதால், சப்ளை அதிகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் இருப்பு 9,73,000 பேரல்கள் அதிகரித்து, 362.30 மில்லியன் பேரல்களாக இருந்தது.அமெரிக்காவில் தற்போது மோசமான குளிர் நிலவி வருவதால் எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் நிலவிவரும் கடுமையான குளிரைப் போக்க வீடுகளில் எரிபொருளாக இயற்கை எரிவாயு பயன்படுகிறது. இதையடுத்து, இயற்கை எரிவாயு இருப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் குறைந்தே காணப்படுகிறது. வரும் வாரத்தில் தேவை காரணமாக இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.