''எத்தனை நாள் மக்களையும், காவல்துறையையும் ஏமாற்ற முடியும்? ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் மாட்டித்தானே ஆக வேண்டும்?'' என்றபடி, நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''விளக்கமாகச் சொல்லுங்களேன்'' என்று கோரிக்கை வைத்தோம்.

''ரியல் எஸ்டேட் முதலீடு என்று சொல்லி அப்பாவி மக்கள் 5 கோடி பேரிடமிருந்து 45,000 கோடி ரூபாய் வசூல் செய்து, பொன்ஸி திட்டம் நடத்தியதாக பிஏசிஎல் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதோடு நிற்காமல், இந்த நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ரெய்டு நடத்தி, முக்கியமான பல ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறதாம் சிபிஐ. இதில் பினாமி பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இந்த நிறுவனம் வாங்கிக்குவித்திருப்பது தெரியவந்திருக்கிறதாம். மேலும், முதலீட்டாளர்களுக்கு விவசாய நிலம் தருகிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் திரட்டிய பணத்தைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றில் முதலீடு செய்திருப்பதாகவும் சிபிஐ விசாரணை யில் வெட்டவெளிச்சமாகி உள்ளதாம். விரைவில் இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப் படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறதாம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த அமைப்பு நிறையவே பணம் வசூலித்து இருக்கிறதாம். இந்தப் பணம் ஈமு கோழியில் போட்ட பணம்போல ஆகிவிடுமோ என்று பதைபதைத்துப் போயிருக்கிறார்களாம் மக்கள், பாவம்'' என்று உச்சுகொட்டியவருக்குச் சுடச்சுட டீ தந்தோம். அதை விருட்டென்று குடித்தவர், அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''ரூ.25,000 கோடி டெபாசிட் மோசடி வழக்கில் சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராயை ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஏதேதோ சாக்குபோக்கு சொல்லித் தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தார் சுப்ரதோ ராய். 'நத்திங் டூயிங். அவரைக் கைது செய்தே ஆகவேண்டும்’ என்று கறாராக உத்தரவு பிறப்பித்துவிட்டது சுப்ரீம் கோர்ட். கடைசியில் வேறு வழியில்லாமல் லக்னோ போலீஸிடம் இன்று காலை சரண் அடைந்தார். அவரை வருகிற செவ்வாய்க்கிழமைவரை காவல் துறைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'' என்றவரிடம், இன்றைக்கு வந்த ஜிடிபி ரிப்போர்ட் பற்றி கேட்டோம்.

''2013-14-ன் மூன்றாம் காலாண்டில் நம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த கடந்த காலாண்டைவிட 0.1% குறைவு. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் நம் ஜிடிபி வளர்ச்சி 4.4%தான். அதிலிருந்து ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்றாலும், 5 சதவிகிதத்துக்குமேல் நம் வளர்ச்சி சென்றால்தான் நம் நாட்டின் மீது எல்லோருக்கும் நம்பிக்கை வரும்'' என்றார்.

''பங்குகளை அடமானம் வைக்கும் புரமோட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே?'' என்றோம்.

''முடிந்த காலாண்டில் நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு 14% அதிகரித்து, ரூ.1.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்தம் 763 நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை அடமானம் வைத்துள்ளன. சென்செக்ஸ்-ல் இடம் பெற்றுள்ள 7 நிறுவனங்கள் மட்டும் 200 கோடி டாலர் மதிப்புக்கு பங்குகளை அடமானம் வைத்துள்ளன. 273 நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு மூலதனத்தில் 50 சதவிகிதத்துக்குமேல் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது''

என்று சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஷேர்லக்.

''அண்மையில் போலாரிஸ் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''சென்னையைச் சேர்ந்த போலாரிஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிசர்வ் நிறுவனம் வாங்கப்போவதாக வந்த தகவலையடுத்து பங்கின் விலை ஒரேநாளில் 14.05% அதிகரித்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை போலாரிஸ் மறுத்துள்ளது'' என்றார்.

''டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ்-ல் பங்கு மூலதனத்தை ஐசிஐசிஐ பேங்க் அதிகரித்துள்ளதே?'' என்று வியந்தோம்.

''டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ்-ல் பங்கு மூலதனத்தில் 1.2 சதவிகிதத்தை ஐசிஐசிஐ பேங்க் ஏற்கெனவே வாங்கி இருந்தது. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியில், 1.8 கோடி பங்குகளை டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தது. கடனை சரிவரக் கட்டாததால் ஐசிஐசிஐ வங்கி, அடமானம் வைத்திருந்த பங்குகளை வாங்கியுள்ளது. இதனால் இதன் பங்கு மூலதனம் 9.81 சதவிகிதமாக அதிகரித் துள்ளது'' என்று விளக்கம் தந்தார்.

''யுனிடெக் நிறுவனத்தில் என்ன பிரச்னை?'' என்று விசாரித்தோம்.

''எல்ஐசி நிறுவனத்திடம் வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை வேண்டும் என்றே யுனிடெக் நிறுவனம் கட்டாமல் இருக்கிறது என்று ஆர்பிஐ-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று புறப்படத் தயாரானவரிடம், ''வாகனத்துறை பங்குகளின் விலை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி யிருக்கிறதே, என்ன சமாசாரம்?'' என்றோம்.

''அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதாரம் மற்றும் தொழில்வளர்ச்சி மேம்பட்டிருப்பதால் அங்கு வாகனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டுவரும் இந்திய நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மதர்சன் சுமி, பாலகிருஷ்ணன் இண்டஸ்ட்ரீஸ், பாரத் ஃபோர்ஜ் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பங்குகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றவர், ''அடுத்த வாரம் ஷேர் டிப்ஸுடன் உம்மை சந்திக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.