ஜீரகம்! (Jeera)

''ஜீரகம் ஒரு ராபி பருவத்துப் பயிராகும். இந்தியாவில் முக்கியமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அண்மைக் காலத்தில் இந்திய ஜீரகத்துக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஸ்பைஸஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல்-நவம்பர் 2013-ல் மட்டும் ஏற்றுமதி முந்தைய வருடத்தைவிட 95% அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் நல்ல பருவநிலை காரணமாக, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யும் பரப்பு மொத்தமாக 4.54 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக, குஜராத் மாநிலம் மொத்த விதைப்புப் பரப்பளவில் 1.04 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

மேலும், ஜீரகம் அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவந்த பிரச்னை காரணமாக ஜீரகம் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இது இந்திய ஜீரக ஏற்றுமதிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியாவில் மொத்த உற்பத்தி 3,75,000 மெட்ரிக் டன்னாக எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது 36% அதிகம். தற்போது ஜீரகத்தின் விலை ரூ.11,600 லெவலில் வர்த்தகமாகி வருகிறது.

வரும் வாரத்தில் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தெளிவான வானிலை காரணமாக ஜீரகத்தின் வரத்து அதிகரிக்கும் என்றும், இதனால் விலை குறையலாம் என்றும், அதேசமயம் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரை: ரூ.11,480 லெவலில் வாங்கலாம். கட்டாய ஸ்டாப் லாஸ்- ரூ.11,250. இலக்கு விலை - ரூ.11,720 - 11,950.'

மஞ்சள்! (Turmeric)

கடந்த வாரம் மஞ்சள் வரத்து முக்கிய ஸ்பாட் சந்தைகளில் புதிய சாகுபடி மூலம் அதிகரித்துள்ளது. மேலும், மஞ்சள் கையிருப்பும் அதிகமாக உள்ளதன் காரணமாக விலை குறைந்தே வர்த்தகமானது. வரும் வாரத்தில் புதிய சாகுபடி அறுவடை ஆரம்பித்துள்ளதால், நிஜாமாபாத் மற்றும் ஈரோடு ஸ்பாட் சந்தைகளுக்கு வரும் நாட்களில் மஞ்சள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவின் உள்நாட்டுத் தேவை அதிகரிக்கும் என்றும், உலக அளவில் உற்பத்தி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடுமையான விலை வீழ்ச்சியைத் தடுக்கலாம். தரமான மஞ்சள் உற்பத்தி குறையும் என்கிற எதிர்பார்ப்பினாலும் விலை வீழ்ச்சி தடுக்கப்படலாம்.

சந்தை அறிக்கையின்படி, 2013-14-ல் ஆந்திரப்பிரதேசத்தில் மஞ்சள் உற்பத்தி 4,24,000 டன்னாகக் குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 4,39,000 டன்னாக இருந்தது. ஆக, வரும் வாரத்தில் மஞ்சள் வரத்து அதிகமாக இருப்பின் விலை குறையவே வாய்ப்புண்டு.

ஏலக்காய்! (Cardamom )

கடந்த வாரம் முக்கிய ஸ்பாட் சந்தைகளில் தேவை காரணமாக விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. எனினும், அதிகப்படியான வரத்துக் காரணமாக அதிக விலையேற்றம் தடுக்கப்பட்டது. தற்போது கவுதமாலாவிலிருந்து வரத்து குறைந்துள்ளதும், அதேசமயம், ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளதும் விலையில் எதிரொலிக்கலாம்.

கடந்த வியாழக்கிழமையன்று ஏலக்காய் ஏலமிடும் சந்தைகளுக்கு வரத்து சுமார் 112 டன்னாக இருந்தது. சராசரி விலை ரூ.702-ஆக இருந்தது. அதிகபட்சமாக ரூ.966 வரை வர்த்தக மாகியது. வரும் வாரத்தில் வரத்துக் குறைவு மற்றும் தேவை காரணமாக விலை அதிகரிக்கலாம்.

மிளகாய்! (Chilli)

ஸ்பாட் சந்தைகளில் புதிய மிளகாய் வரத்து, அதேசமயம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தேவை குறைந்ததன் காரணமாகக் கடந்த வாரம் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், சந்தை அறிக்கையின்படி, பங்களாதேஷ், மலேசியா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. ஸ்பாட் சந்தைகளுக்கு மாத இறுதியிலிருந்து வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் மிளகாய் விதைப்பு 39,976 ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதேகாலத்தில் 42,313 ஹெக்டேராக இருந்தது. வரும் வாரத்தில் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறையலாம்.