இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்! 

 தலைவா! - ஒருவரையொருவர் சாதாரணமாகக் கூப்பிடு வதற்குக்கூட இந்த வார்த்தையைத்தான் தற்போது பயன்படுத்துகிறோம். தலைவா என்பதன் மூலம் நமக்கும் மேலே ஒருவன் என்று அறியாமலே நாம் மற்றவருக்குத் தொண்டனாகி விடுகிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது! கடவுள் ஒவ்வொருவரையும் ஒரேமாதிரிதான் படைக்கிறான். ஆனால், எது ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடானுகோடி மக்கள் இவ்வுலகில் இருந்தும் ஒரு தனித்தன்மை கொண்ட மனிதனை, அவன் கடந்த காலத்தில் வாழ்ந்தவராகட்டும், நிகழ்காலத்தில் வாழ்பவராகட்டும் உலகம் போற்றிக் கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன?

நாம் சாதிக்க நினைத்ததை, மற்றவர்கள் துணையோடு சாதித்து வெற்றி காண்பவன் தலைவனாகிறான்.

தலைவன் என்றால் அரசியல் என்று பலர் நினைக்கிறார்கள். தவறு. குடும்பம், அரசியல், அலுவலகம் பொதுவாழ்வு என எல்லா நிலை களிலும் தலைவர்கள் இருக்கமுடியும்.

ஒரு குடும்பம் நன்றாக இருந்து விட்டால் நாடு நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். தந்தை ஒரு குடும்பத்தில் சரியாக நடந்துகொண்டு, அவன் மனைவியும், மக்களும் அவனை வழிகாட்டியாக நினைத்துவிட்டால், அந்தக் குடும்பத்துக்கு அவன் தலைவன். வீட்டிலே மதிக்கப்படாத ஒருவர் இந்தச் சமூகத்தினால் மதிக்கப்படும் நபராக இருக்க முடியாது.

உனக்கும் மேலே நீ!

கல்லூரியை எடுத்துக்கொண்டால் அங்கேயும் தலைவர்கள் உண்டு. ஒரு மாணவன் செய்யவேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்கிற அதேநேரத்தில், அவனிடமிருந்து எதிர்பாராத இன்னொரு நல்ல விஷயத்தைச் செய்கிறபோது அவன் தலைவனாக மாறுகிறான்.

அரசியலில்..? சாதாரண மனிதனின் அபிலாஷைகளை எவர் நிறைவேற்றத் தயாராகிறாரோ, அவரே அரசியலில் தலைவராகிறார்.

ஆகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் எனில், தலைவர்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். தலைவன் என்பது பட்டமோ, பதவியோ அல்ல.

அது மற்றவர்கள் வழங்குகிற ஓர் அங்கீகாரம். உங்கள்மேல் இருக்கும் நம்பிக்கையின் அடையாளம். யாரும் ஒரு செயலை செய்யத் துணியாதபோது, நான் முன்வருகிறேன் என்று ஒருவருக்கு இருக்கும் துணிச்சல்தான் ஒருவரை உலகுக்கு தலைவராக அடையாளம் காட்டுகிறது.

உலகில் மூன்று விதமான மனிதர்கள் உண்டு. ஒருசிலரை பார்த்தீர்கள் எனில், 'நமக்கெதுக்கு வம்பு?’ என்று விலகிச் செல்வார்கள். இவர்கள்  தொண்டராக இருப்பதற்கே தகுதியானவர்கள்.

உனக்கும் மேலே நீ!

ஆனால் ஒருசிலர், நாம் பொறந்துட்டோம்; இந்தச் சமூகத்துக்கு எதையாவது செய்யணும்; அதுக்கு ஒரு மரத்தையாவது நட்டுட்டு போவோம் என்று கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, அதற்காக சில முயற்சிகளை செய்கிற மனிதர்களைத்தான் இந்த உலகம் தலைவராக அடையாளம் கண்டுகொள்கிறது.

'ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்ன’ என்று காந்தியடிகள் நினைத்திருந்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது!

எவன் படிச்சா என்ன, படிக்காம போனா என்ன என்று காமராஜரும் நினைத்திருந்தால், இன்றைக்கு தமிழகத்தில் இத்தனை கோடி பேர் படித்திருக்கவே மாட்டார்கள்.

மார்ட்டின் லூதர் கிங் என்ற தனிமனிதனின் போராட்டம்தான் கறுப்பர்களுக்கு விடிவெள்ளியாக அமைந்தது.

மண்டேலாவின் தியாகம்தான் தென்ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.

இவர்கள் மாதிரி நீங்களும் ஒரு தலைவராக அடையாளம் காணப்பட வேண்டும் என்றால், தலைவராவதற்குமுன் உங்களிடம் இடம்பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் இவைதான்...

1. எதைச் சாதிக்கப்போகிறோம் என்பதில் தீர்க்கமான முடிவெடுங்கள். அதை நோக்கியே பயணம் செய்யுங்கள்.

2. உங்களுடைய பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் நேர்மையானதாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. 'நம்புங்கள், உங்களுக்கு நான் வழிகாட்டுகிறேன்’ என்ற நம்பிக்கையை மற்றவர்களிடம் உருவாக்குங்கள்.

4. நான் எடுக்கிற முடிவு எனக்கானதல்ல. விளைவுகள் எதுவா யினும் அதை முடித்துக்காட்டுவேன் என்கிற மனதிடத்துடன் போராடும் குணத்தைப் பெறுங்கள்.

5. நல்ல பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

6. மூளை, இதயம், உடல் ஆகிய மூன்றும் ஒரேகருத்துடன் செயல்படட்டும்

7 தட்டிக்கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்தான் தலைவனுக்கு அழகு என்று உணருங்கள்.

8. தகுந்த நேரங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

உனக்கும் மேலே நீ!

ஒரு தலைவனின் பயணம் ஒவ்வொரு தனிமனிதனையும் நம்பியே தொடர்கிறது. நம்மோடு வழி நடப்பவர்கள், நம் கண்முன்னே இருக்கலாம்; தொலை தூரத்திலும் இருக்கலாம். ஆனால், நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது என்பதை உணருங்கள்.

உங்களை ஒருவர் தலைவனாக ஏற்றுக்கொள்ளும்போது உடனிருப் பவர்கள் உங்களை மதிக்க வேண்டுமானால்,

மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளையும் அறிந்துவைத்து, அதற்குத் தீர்வும் வழங்க வேண்டும்.

ஒவ்வொருவருடைய திறமை யையும் அறிந்துகொண்டு ஊக்குவிக்க வேண்டும்.

மற்றவர்களைப் பாராட்டி, அவர்களைப்போல் மற்றவர்களும் உருவாக வேண்டும் என்கிற மரியாதையை வழங்க வேண்டும்.

யாரையும் ஒதுக்கிவிடாமல், எந்த வேலையை யாரால் சரியாக செய்ய முடியுமோ, அந்த வேலையை அவர்களிடம் தந்து செயல்படவைக்க வேண்டும்.

தலைவன் என்ற அங்கீகாரம், நாமாகத் தேடிக்கொள்வதல்ல; மற்றவர்கள் வழங்குவது. இந்த உலகம் எப்போதும் ஒரு தலைவனை எதிர்நோக்கி காத்துக்கிடக்கிறது. அந்தத் தலைவன் நீங்களாகக்கூட இருக்கலாம்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism