கட்டுரையைப் படிக்கத் தொடங்கும்முன் கீழே கேட்கப்பட்டிருக்கும் இரண்டு கேள்விகளுக்கு என்ன பதில் என்று யோசியுங்கள்.

கேள்வி 1:

ஒரு பெண்மணிக்கு ஏற்கெனவே எட்டுக் குழந்தைகள். அதில் இரண்டு பேருக்கு காது கேட்காது. இரண்டு பேருக்கு கண் தெரியாது. ஒரு குழந்தைக்கு மூளைவளர்ச்சி கிடையாது. அவர் இப்போது மீண்டும் தாயாகப் போகிறார். ''அந்தக் குழந்தை வேண்டாம்! அதுவும் குறைகளோடு பிறந்துவிட்டால் என்ன செய்வாய்?' என்று பலர் தாயிடம் கேட்டார்கள். அந்தத் தாய் என்ன முடிவெடுக்க வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி 2:

உங்கள் தொகுதியில் மூன்று வேட்பாளர்கள் நிற்கிறார்கள். அவர்களின் தகுதிகள்: (இந்த மூவருமே வெளிநாட்டவர்கள்!)

முதலாமவருக்குக் கெட்ட அரசியல்வாதிகளோடு தொடர்புகள் உண்டு. ஜோசியத்தை நம்புவார். இரண்டு மனைவிகள். தொடர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டே இருப்பார். குடிப்பழக்கமும் உண்டு.

உனக்கும் மேலே நீ!

இரண்டாமவர், இளமைக் காலத்தில் வேலையை விட்டுக்கொண்டே இருப்பார். கல்லூரியில் நல்ல பெயர் கிடையாது. அடிக்கடி தூங்கிக் கொண்டே இருப்பார். குடிப்பழக்கம் உண்டு.

மூன்றாமவர், மனைவியை நேசிப்பவர். கெட்ட பழக்கங்கள் கிடையாது. ஒரு போர்வீரன் போல் சித்தரிக்கப்பட்டவர். சைவ உணவுகளையே விரும்புவார்.

கேள்வி, இந்த மூவரில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? இவற்றுக்கான விடைகளைக் கட்டுரையின் கடைசியில் பாருங்கள். இனி கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

வாழ்க்கையில் வெற்றிக்கான முக்கியக் காரணம், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நாம் எடுக்கும் முடிவுகள்தான். ஒருவர் எடுக்கும் நல்ல தீர்க்கமான முடிவுகள், அந்த ஒரு தனிமனிதனை மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் வெற்றிக்கே வழிவகுக்கும். சுய லாபத்துக்காகவும், உணர்வுப்பூர்வமான நிலையிலும், நமது 'ஈகோ’ காரணமாக எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையின் போக்கை மட்டுமின்றி, நம்மை நம்பியிருப்பவர்களையும், நாட்டின் எதிர்காலத்தையுமே திசை மாற்றிவிடும்.

உனக்கும் மேலே நீ!

தனிமனித முடிவுகளாக இருந் தாலும் சரி, ஒருசேர அனைவரும் எடுத்த முடிவாக இருந்தாலும் சரி, உலகுக்கு உங்களின் தனித் தன்மையை அடையாளம் காட்டும். புகைவண்டி யிலிருந்து கீழே தள்ளப்பட்டவுடன், 'எனக்கே இந்தக் கதியென்றால், என் நாட்டு மக்களின் கதி' என்று காந்திஜி எடுத்த முடிவின் விளைவுதான், இந்தியாவின் விடுதலை.

'நாகாஸ்திரத்தை கழுத்துக்குக் கீழே குறி வை' என்று சல்லியன் சொன்னதை, கர்ணன் 'ஈகோ’ காரணமாகக் கழுத்துக்கு மேலே குறி வைத்ததன் விளைவு, அர்ஜுனன் தப்பி, மீண்டும் நாகாஸ்திரத்தை பயன்படுத்த முடியாமல் போனது. விளைவு: கௌரவர்களின் வீழ்ச்சி, பாண்டவர்கள் வெற்றி.

நம் வாழ்விலும் தினம் தினமும் பல ஆயிரம் கேள்விகள் எழவே செய்கின்றன. இந்தக் கேள்விக்கு தனியொரு மனிதன் எடுக்கும் முடிவுகள்தான் அவனது வெற்றிப் பாதையா அல்லது தோல்விப் பாதையா என்று தீர்மானிக்கின்றன.  

உனக்கும் மேலே நீ!

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் யதார்த்தமானவர்கள். இவர்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. தவறுகள் நிகழ்வது சாத்தியமே. ஆனால், முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம், நம்முடைய வெற்றியின் சதவிகிதத்தை நம்மால் உயர்த்திக்கொள்ள முடியும். எந்த விஷயத்திலும் நீங்கள் சரியான முடிவை எடுக்கவேண்டும் எனில்,

என்ன பிரச்னை?  
யாரால், எதனால் பிரச்னை?
பிரச்னைக்கான சூழ்நிலை என்ன?  

பிரச்னை தொடர்பான பலதரப்பட்ட தகவல்கள் என்ன? என்பதையெல்லாம் அலசி ஆராயுங்கள். இதன்பிறகு நீங்கள் எடுக்கும் முடிவு நிச்சயம் சரியாகவே இருக்கும்.  

நீங்கள் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் நாம் எடுத்த முடிவினால் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு நாமே பொறுப்பு என்பதை உணருங்கள்.

எந்த முடிவை எடுப்பதற்குமுன்பும், உங்கள்மேல் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் தோல்வியையே தரும்.

உணர்வுப்பூர்வமான சூழ்நிலை களில் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்காதீர்கள்.

நீங்கள் எடுக்கிற முடிவு சரிதானா என்பதை 'ஈகோ’ பார்க்காமல், இன்னொருவருடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. ஆனாலும் எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்களே எடுப்பதாக இருக்கட்டும்.

இனி நாம் இந்தக் கட்டுரையில் முதலில் கேட்ட இரண்டு கேள்வி களுக்கான முடிவை பார்ப்போம்.

கண் தெரியாத, காது கேட்காத, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பெற்ற தாய், தனது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று முடிவு செய்தால், இசை உலகின் ஜாம்பவானான பீத்தோவனை நீங்கள் கொன்றிருப்பீர்கள்.

மூன்று வேட்பாளர்களில் மூன்றாவது நபர் எல்லா வகையிலும் நல்ல குணங்களைக் கொண்டிருக்கிறார். எனவே, அவருக்கு நமது வாக்கை செலுத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்தால், நீங்கள் அடால்ப் ஹிட்லரைத்தான் தேர்வு செய்திருப்பீர்கள்.

ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எடுக்கும் இன்றைய முடிவு, நாளைய உலகத்தின் விடிவு என்பதை உணருங்கள். எல்லா விஷயத்திலும் நல்ல தீர்க்கமான முடிவெடுங்கள்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism