Published:Updated:

பிஏசிஎல் ஃபாலோ-அப்!

பணத்தைக் கேட்டு அலைமோதும் மக்கள்! நீரை.மகேந்திரன்

பிஏசிஎல் ஃபாலோ-அப்!

பணத்தைக் கேட்டு அலைமோதும் மக்கள்! நீரை.மகேந்திரன்

Published:Updated:

சென்ற வாரம் நாணயம் விகடனில் சிபிஐ பிடியில் பிஏசிஎல் என்கிற கட்டுரையை வெளியிட்டிருந்தோம். பொதுமக்கள் தங்கள் சேமிப்பை பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று எச்சரிக்கவே அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தோம். கவர் ஸ்டோரியாக அந்த கட்டுரை வெளியானதால், இதழ் வெளிவந்த அன்றே பரபரப்பானார்கள் பிஏசிஎல் ஏஜென்டுகள். பல ஊர்களில் உள்ள கடைகளில் இருந்த நாணயம் விகடன் இதழ்களை அப்படியே அள்ளிக்கொண்டு சென்றார்கள். பிஏசிஎல் நிறுவனத்தில் ஏற்கெனவே பணம் போட்டிருந்தவர்களின் கையில் நாணயம் விகடன் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர். ஈரோடு, பவானி, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல், பழனி பகுதிகளில் இந்த அமுக்கல் அதிகமாக நடந்தது. இதனால் இந்த ஊரில் உள்ள நாணயம் விகடன் வாசகர்களுக்கு பிரதி கிடைக்காமல் போனது.

(நாணயம் விகடன் கிடைக்காமல் போனதால், இந்த கட்டுரையைப் படிக்கத் தவறிய வாசகர்கள் படிப்பதற்கு வசதியாக நாணயம் விகடன்.காம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். கட்டுரையைப் படிக்க நினைக்கும் வாசகர்கள் http://nanayam.vikatan.com/index.php?aid=6037 இணையதள முகவரிக்குச் செல்லவும்.)  

பிஏசிஎல் ஃபாலோ-அப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்றாலும் பல ஊர்களில் இருக்கும் நாணயம் வாசகர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே பிரதி வாங்கிவிட்டதால், ஏஜென்டுகளால் உண்மையை மறைக்க முடியவில்லை. கட்டுரையைப் படித்த வாசகர்கள் மறுநாள் காலை முதலே பிஏசிஎல் அலுவலகத்தை முற்றுகையிட ஆரம்பித்துவிட்டனர். ஈரோடு அலுவலகத்தில் வழக்கமான கூட்டத்தைவிடவும் அதிகமான கூட்டம் கூடியது. கட்டிய பணத்தைத் திரும்ப கேட்டு மக்கள் அலைமோதினர். அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ''நானும் இந்த நிறுவனத்தை நம்பி முதலீடுகளைத் திரட்டித் தந்துள்ளேன். பத்திரிகையில் செய்தி வந்தபிறகு

பிஏசிஎல் ஃபாலோ-அப்!

பணத்தைக் கேட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, சமாளிக்க முடியாதபடி ஆகியிருக்கிறது'' என்றார்.

மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் பிஏசிஎல் ஏஜென்டுகளின் அவசரக் கூட்டம் நடப்பதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்றோம். 'நாம் வாங்கித் தந்த பணத்தைத் திரும்ப வாங்கும் வரை, கம்பெனி சொல்றதைக் கேட்டு தலையாட்டுறதைத் தவிர வேற வழியில்லை’ என்று ஏஜென்டுகள் அரங்கத்துக்கு வெளியே புலம்பினர்.  

இந்தக் கூட்டத்தில் மேடையில் பேசிய ஒருவர், ''மீடியாக்களில் வருவதை நம்பாதீர்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம் நிறுவனத்துக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் நெருக்கடிதான் இது. இன்று நம் முதலாளியிடம் எண்பதாயிரம் கோடிக்கு அதிகமாக பணம் இருக்கிறது. நினைத்தால் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு போகலாமே! அவர் செய்யமாட்டார். சில ஏஜென்டுகள் தங்களுடைய  செக் பவுன்ஸ் ஆவதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு தவறில்லை. வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டும் வரும். நான் இன்று இரண்டு ஸ்கூல் நடத்த காரணம், இந்த நிறுவனத்தில் சம்பாதித்த பணம்தான். ஏஜென்டுகள் எதுபற்றியும் கவலைப்படாமல், அதிக கஸ்டமர்களை சென்றடைய வேண்டும். சமீபகாலமாக ஏஜென்டுகள் சரியாக வேலை செய்யவில்லை. அதனால்தான் கம்பெனிக்கு பணநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது'' என்று பேச, என்ன செய்து தப்பிப்பது என்று தெரியாமல் தவித்தனர் ஏஜென்டுகள்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவர் இன்னொரு வேடிக்கையான விளக்கத்தையும் தந்தார்.

பிஏசிஎல் ஃபாலோ-அப்!

''காங்கிரஸ் அரசாங்கத்துக்கு நமது நிறுவனம் தேர்தல் செலவுக்கான பணத்தைத் தரவில்லை. அதனால்தான் இந்த ரெய்டு. பிஜேபி அரசாங்கம் வந்துவிட்டால் நமக்கு எந்த சிக்கலும் இருக்காது'' என்று சொல்ல, நமக்கு சிரிப்புதான் வந்தது.  

செங்கல்பட்டை சேர்ந்த பிஏசிஎல் ஏஜென்ட் பரமசிவம், நாணயம் விகடனைப் படித்துவிட்டு நமக்கு போன் செய்தார். நாம் அவரை சந்தித்தோம்.  ''எனக்குக் கீழே 250 பேர் பணம் போட்டுருக்காங்க.  முதிர்வான பாண்டுகளுக்கு பணம் கொடுக்க பத்து மாசத்துக்கு மேல் ஆகுது. முதிர்வு தொகை வர காலதாமதம் ஆகுறதால  மக்கள் என் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேக்குறாங்க. இதுபத்தி ஆபிஸ்ல கேட்டா சரியான பதில் இல்ல. எல்லாருமே அவங்க வீட்டுல நடக்குற கல்யாணம், படிப்பு போன்ற செலவுக்காகவே பணம் கட்டியிருக்கிறாங்க. அவங்க போட்ட பணத்தைக் கேட்டு வர்றப்ப கிடைக்கலேன்னா கோபப்படறாங்க. இதுக்கு முன்னால, ஒரு வருஷம் பணம்  கட்டி பாதியில் நிறுத்தினா வட்டி உண்டுன்னு சொன்னாங்க. இப்ப அசல் மட்டும்தான் தருவோம் என்கிறாங்க. இதனால் தினமும் பிரச்னைதான். கட்டுன பணத்தை திரும்பத் தரலைன்னா, வழக்கு தொடர்றதுதான் ஒரே வழி'' என்றார்.

கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற சந்தேகம் மக்களுக்கும்,  வாங்கித் தந்த பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏஜென்டுகளுக்கும் வந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் நிறுவனம் என்ன பதில் சொல்லப்போகிறது?

-பா.ஜெயவேல், செ.சல்மான்,
படங்கள்: பா.காளிமுத்து,
பா.ஜெயவேல், ரமேஷ் கந்தசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism