Published:Updated:

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

Published:Updated:

''தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. பிசினஸ் செய்திகளுக்கு இப்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. ஆனால், ஷேர் மார்க்கெட் பற்றி நிறையவே தகவல் உள்ளது!'' - வந்தவுடனே பீடிகையைப் போட்டார் ஷேர்லக். ''கைவசமிருக்கும் செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்!'' என்று நாம் குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்.

அஸ்ட்ராஜெனிகாவின் ஏற்றம்!

அஸ்ட்ராஜெனிகா பங்கு விலை இந்த மாதத்தில் மட்டும் 30% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் பங்குகளை, பங்குச் சந்தை பட்டியலில் இருந்து விலக்கிக்கொள்ள (டீலிஸ்ட்) கடந்த 4-ம் தேதி முடிவு எடுத்தது. அன்று மட்டும் பங்கின் விலை 4% அதிகரித்து, அதன் 52 வார உச்சவிலையான 1,286 ரூபாயைத் தொட்டது. டீலிஸ்ட் முடிவுக்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளிக்கவே, செவ்வாய்கிழமை மட்டும் அந்தப் பங்கின் விலை 7.6% அதிகரித்தது. எப்படியும் சந்தை விலையைவிட அதிக விலையில்தான் நிறுவனம் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கும் என்கிற எண்ணத்தில் பங்குகள் கணிசமாக கைமாறி வருவதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இந்தப் பங்கை இந்த மாதத்தின் ஆரம்பித்தில் வாங்கியவர்கள் புத்திசாலிகள். இனிமேல் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.சி.எஸ்.-ன் இறக்கம்!

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதை யடுத்து ஐ.டி துறை பங்குகளின் விலை சரிந்தநிலையில் காணப்படுகிறது. இந்தச் சமயத்தில் நான்காவது காலாண்டில் வருமானம் 1.5 - 2.5%தான் அதிகரிக்கும் என அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், வரும் 2014-15-ல் வருமானம் 16-17% அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 2014-15-ல் ஐடி கம்பெனிகளின் வருமானம் 13-15% அதிகரிக்கும் என நாஸ்காம் தகவல் சொல்லி இருக்கிறது. அந்த வகையில் குறுகியகாலத்தில் டிசிஎஸ் நிறுவன பங்கின் விலை குறைந்தாலும், நீண்ட காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

வேகமெடுத்த மாருதி!

மாருதி சுஸ¨கி இந்தியாவின் பங்கு அண்மையில் ஒரே நாளில் 10% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலை மேம்பாட்டுக்கு, அதன் தாய் நிறுவனம் நிதி உதவி அளிக்க சம்மதம் அளித்ததையடுத்து பங்கு விலை உயர்ந்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ந்து போயிருக்கிறார்கள்.  

தள்ளிப்போகும் வங்கி அனுமதி!

புதிய வங்கிகளுக்கு அனுமதி தரும் முடிவு தள்ளிக்கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தேர்தல் கமிஷனின் கருத்தைக் கேட்டுவிட்டே, புதிய வங்கி அனுமதி குறித்த முடிவை அறிவிக்க முடிவு செய்துள்ளது ஆர்.பி.ஐ. தேர்தல் கமிஷனின் பதிலை அடுத்த வாரம் ஆர்.பி.ஐ. எதிர்பார்க்கிறது. ஒருவேளை தேர்தல் முடிந்தபிறகே இந்த அறிவிப்பை வெளியிட தேர்தல் கமிஷன் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

ஷேர்லக் - 12 மாதத்துக்குள் நிஃப்டி 7600

என்றாலும், இந்திய அஞ்சல் துறைக்கு புதிய வங்கிக்கான அனுமதி கிடைக்காமல் போகலாம் என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!  

மீண்டும் என்எஸ்இஎல்!

என்எஸ்இஎல் பிரச்னை மீண்டும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிறுவனத்தை பொருளாதாரக் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் இதன் தாய் நிறுவனமான  ஃபைனான்ஸியல் டெக்னாலஜீஸ்-க்கு செபி பெரிய ஆப்பு வைத்திருக்கிறது. அதாவது, இந்த நிறுவனத்துக்கு, எந்த ஒரு பங்குச் சந்தையும் நிர்வகிக்கும் தகுதி இல்லை. அந்தவகையில் எந்த ஒரு பங்குச் சந்தையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு மூலதனத்தை ஃபைனான்ஸியல் டெக்னாலஜீஸ் கொண்டிருக்கக்கூடாது என்றும் செபி உத்தரவு போட்டிருக்கிறது. இந்த நிறுவனம், என்.எஸ்.இ., டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், வதோதரா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், எம்சிஎக்ஸ் - எஸ்எக்ஸ் உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.  

உயரும் ரூபாய் மதிப்பு!

மோடி ஆட்சிக்கு வந்தால் அந்நிய நிதி முதலீடுகள் இந்தியாவுக்குள் பாயும். அப்போது டாலருக்கு இணையான ரூபாய் 57-க்கு குறையும் என கருத்துக் கணிப்பு ஒன்றில் சொல்லப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (ஃபாரெக்ஸ்) அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்தோடு ரூபாய் மதிப்பு 60-க்கு அதிகரித்தால் மத்திய ரிசர்வ் வங்கி கணிசமான அளவுக்கு டாலரை சந்தையிலிருந்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி 7600 புள்ளிகள்!

மோடி பிரதமராவார் என்கிற எதிர்பார்ப்பில் இந்திய சந்தை ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அண்மையில் மகாராஷ்டிராவைத் தாக்கிய புயலால் பயிர்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்தச் சேதம் ரூ.12,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விலைவாசி அதிகரிக்கும் என பேங்க் ஆஃப் மெரில் லின்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறி விலை 10% அதிகரித்தால், நுகர்வோர் பணவீக்க விகிதம் 0.54% அதிகரிக்கும். இதனால் சந்தை பின்னடைவை சந்திக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பங்குத் தரகு நிறுவனங்களான கோல்டுமேன் சாக்ஸ், மெக்கொயர் இந்திய பங்குச் சந்தை குறித்து பாசிட்டிவ்வான கருத்தை வெளி யிட்டுள்ளன. அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 17% அதிகரித்து, 7600 புள்ளிகளாக உயரும் என கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துவருவது, டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு நிலையாக இருப்பது, எஃப்ஐஐகள் முதலீடு தொடர்வது போன்றவற்றை கருத்தில்கொண்டு இந்தக் கணிப்பை கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்செக்ஸ் இன்னும் 15 - 20% அதிகரிக்கும் என மெக்கொயர் கணித்திருக்கிறது. ராய்ட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 2014-ம் ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 24500 புள்ளிகளைத் தொடும் என்கிற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் துறைக்கு ஆதரவாக இருக்கும் பாரதிய ஜனதா ஜெயித்தால் இந்த அளவுக்கு சென்செக்ஸ் அதிகரிக்கும் என்றும் கருத்துச் சொல்லி இருக்கிறது. ஜூன் மாதத்துக்குள் சென்செக்ஸ் 23000 புள்ளிகளுக்கு உயரும். அதன்பிறகு படிப்படியாக ஏறி, ஆண்டு இறுதிக்குள் 24500-க்கு அதிகரிக்கும் என பரவலாக கருத்துத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  

ஷேர்டிப்ஸ்...

நீண்டகாலத்துக்கான பங்குகள் இவை. விலை குறையும்போது சிறுகச் சிறுக வாங்கவும். கோல் இந்தியா, சன் பார்மா, ஐடியா செல்லூலர், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், எல்ஐசி ஹெச்.எஃப்.எல், மாருதி, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ்.

சந்தை பற்றிய செய்திகளை எல்லாம் சொல்லிவிட்டு, கொஞ்சம் நேரம் அரசியலையும் பேசிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism