Published:Updated:

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

Published:Updated:

பங்குச் சந்தை முதலீடா, அதிக ஏற்ற இறக்கமாக இருக்கிறதே என்று ஒதுங்கிநிற்க நினைக்கிற முதலீட்டாளர்களுக்கு இன்று இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று, பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இ.டி.எஃப்-கள். இரண்டாவது, ஆக்டிவாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள். இவை தவிர, இண்டெக்ஸ் ஃபண்டுகளும் உள்ளன. இவை மூன்றுமே மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களால்தான் நடத்தப்படுகின்றன. இந்த மூன்று வகை ஃபண்டுகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

இ.டி.எஃப்!

இ.டி.எஃப் என்பது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும் ஒரு ஃபண்டு ஆகும். பொதுவாக, இவை ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை. எந்தக் குறியீட்டில், எந்தப் பங்குகள், எந்த அளவில் உள்ளனவோ, அதே பங்குகளை அதே அளவில் இ.டி.எஃப்-லும் இருக்கும். அந்தக் குறியீட்டின் ஏற்றம் அல்லது இறக்கத்துக்கேற்ப, இ.டி.எஃப்-ன் ஏற்ற  இறக்கம் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இ.டி.எஃப்-ல் ஃபண்டு மேனேஜருக்கு பெரிய அளவில் வேலை இல்லை. குறியீட்டின் மாற்றத்துக்கேற்ப மெக்கானிக்கலாக இ.டி.எஃப்-ல் உள்ள அங்கங்களின் சதவிகிதத்தை மாற்றிக்கொள்வதே ஃபண்டு மேனேஜரின் வேலை. ஆகையால், இ.டி.எஃப்-ன் செலவினங்களும் குறைவாக இருக்கும்.

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

இ.டி.எஃப் மூலம் கிடைக்கும் வருமானமும் சந்தைக் குறியீட்டை ஒட்டியே இருக்கும். உதாரணமாக,  நிஃப்டி 50 குறியீடு ஒரு வருடத்தில் 12% வருமானம் தந்திருந்தால், அதை அடிப்படையாகக்கொண்ட இ.டி.எஃப் அதே வருமானத்தைத் தந்திருக்கும்.  

ஆக்டிவ் ஃபண்ட்ஸ்!

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

ஆக்டிவாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள், ஒரு குறியீட்டை பெஞ்ச்மார்க்காகக் கொண்டு செயல்படுகின்றன. அந்தக் குறியீட்டைவிட அதிக வருமானத்தை ஈட்டித் தருவதே இந்த ஃபண்டுகளின் நோக்கம். ஆகவே, பலசமயங்களில், இந்த ஃபண்டுகள் ஓரளவுக்கு ரிஸ்க் (நீணீறீநீuறீணீtமீபீ தீமீt) எடுக்கின்றன. ஃபண்டு நிர்வாகம், ஆராய்ச்சிப் பிரிவு எனப் பல செலவுகள் இருப்பதால், இந்தவித ஃபண்டுகளின் செலவுகள் அதிகம்.

இண்டெக்ஸ் ஃபண்டுகள்!

இ.டி.எஃப்-போலச் செயல்படும் இண்டெக்ஸ் ஃபண்டுகளும் உள்ளன. இவை பங்குச் சந்தையில் வர்த்தகமா வதில்லை. ஆக்டிவாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டுகளைப்போல, இந்த ஃபண்டுகளை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மூலமே வாங்க/விற்க முடியும். இந்த ஃபண்டுகளும் ஒரு குறியீட்டை அடிப்படையாகக்கொண்டு, அந்தக் குறியீட்டைப்போல, தனது முதலீட்டை வைத்துக்கொள்கிறது. இந்த ஃபண்டுகளிலும் ஆக்டிவ் மேனேஜ்மென்ட் இல்லாததால், செலவுகள் குறைவு.

எது பெஸ்ட்?

ஒவ்வொருவரின் தேவையும், ரிஸ்க் எடுக்கும் திறனும் வேறுபடும் என்பதால், அனைவருக்கும் ஒரே பதில் பொருந்தாது. மேலும், இந்தியாவில் ஆக்டிவாகச் செயல்படும் ஃபண்டுகளின் எண்ணிக்கை மற்றும் நிர்வகிக்கும் சொத்துக்கள்தான் அதிகம். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் மொத்த சொத்தில், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் எல்லாம் சேர்ந்து நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1,500 கோடிக்கும் குறைவே.

ஆனால், ஆக்டிவாகச் செயல்படும் ஒரேயரு திட்டம் நிர்வகிக்கும் தொகை மட்டுமே ரூ.10,000 கோடிக்கு மேல். மேலும், கடந்த பல வருடங்களாக ஆக்டிவாகச் செயல்படும் திட்டங்கள், செலவினங்களுக்குப் பிறகு, இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிடத் தொடர்ச்சியாக நல்ல வருமானத்தைத் தந்துள்ளன.

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

காரணம், இந்தியா வளர்ச்சியின் முதல்படியில் உள்ளது. தவிர,  நமது சந்தை இன்னும் பக்குவம் அடையவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே வாரன் பஃபெட் போன்றோர் தொடர்ந்து சந்தையைவிட அதிக வருமானம் தரும்போது, ஆழமில்லாத நமது சந்தையில் ஆக்டிவாகச் செயல்படும் ஃபண்டுகள், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிட அதிக வருமானம் தர நிச்சயம்  வாய்ப்புண்டு.

ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு!  

எனக்கு வருமானம்தான் முக்கியம் என்பவர்களுக்கு,  மேலே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால், தெளிவாகப் புரியும்.

இவர்களுக்கான சாய்ஸ் உறுதியாக ஆக்டிவாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டுகளாகவே இருக்கவேண்டும். இந்தவிதமான ஃபண்டுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

ஆக்டிவாகச் செயல்படும் ஃபண்டுகள் இதுவரை நல்ல வருமானம் தந்துள்ளன. இனிவரும் காலத்திலும் நல்ல வருமானம் தர வல்லது.

இ.டி.எஃப் VS ஆக்டிவ் ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

  ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு..!

சந்தை ரிஸ்க்கைவிடக் கூடவோ குறையவோ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிறவர்களுக்கு இ.டி.எஃப் ஒரு நல்ல உபகரணம் ஆகும். வர்த்தகம் செய்ய விரும்புகிறவர் களுக்கும் இது உகந்தது.  

சந்தை தரும் லாபமே போதும்!

சந்தை ரிஸ்க்குக்குமேல் நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை; ஆனால், என்னிடம் டீமேட் கணக்கு இல்லை. மேலும், எஸ்.ஐ.பி முறையில் சிறிய தொகைகளில் முதலீடு செய்ய   நினைப்பவர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுகள் சிறந்தவை ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism