Published:Updated:

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

சே.புகழரசி

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

சே.புகழரசி

Published:Updated:

மீண்டும் தங்கத்தின் மீது கைவைத்திருக்கிறது மத்திய அரசாங்கம். இந்தியாவில் இறக்குமதியாகும்  தங்கத்தின் மீதான வரிக்கு எடுத்துக்கொள்ளப்படும் அடிப்படை விலையை (10 கிராமுக்கு) 2.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் இந்த அடிப்படை விலையால் தங்கம் விலை உயருமா, அடிப்படை விலையை அரசாங்கம் ஏன் அடிக்கடி மாற்றுகிறது? என்கிற கேள்விகளை ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் நிறுவனத்தின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம்.  

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

அடிக்கடி மாற்றம் ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சர்வதேச சந்தையில் ஏற்படும் பல நிகழ்வுகளால் தங்கத்தின் விலையானது அதிகளவு ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் தங்கத்தின் விலையைக் குறைத்துகாட்டி வரி ஏய்ப்புச் செய்கின்றன. இதனைத்  தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது.  

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

தற்போது தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை 433 டாலரிலிருந்து (10 கிராம்) 445 டாலராக (12 டாலர்) உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 699 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 694 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தொடர் முயற்சி!

கடந்த ஆண்டு அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால்,  நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது.  இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.  தங்கத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பது, இறக்குமதி ஆகும்  தங்கத்தில் 20% மீண்டும்  ஏற்றுமதி செய்யவேண்டும் என்று சொன்னதோடு, இறக்குமதி ஆகும்  தங்கத்தின் மீதான அடிப்படை விலையை இரு வாரத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யவேண்டும் என்றும் சொன்னது.  

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

பெருகும் கடத்தல் தங்கம்!

அடிப்படை விலை மாற்றம்: தங்கம் விலை உயருமா?

இப்படி செய்யத் தொடங்கியதால், தங்கம் இறக்குமதி குறைந்தாலும், தங்கத்தை கடத்திக்கொண்டு வருவதும் பெருகி இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.78 கோடி அளவுக்கு (சுமார் 25 டன்) கடத்தல் தங்கம்  பிடிபட்டது. என்றாலும், அரசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, பல 100 டன் தங்கம்  நம் நாட்டுக்குள் நுழைந்துகொண்டுதான் இருக்கிறது.

விலை உயருமா?  

இறக்குமதி தங்கத்தின் அடிப்படை விலை உயர்வால், தங்கம் விலை உயர வாய்ப்புண்டு. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தங்கத்தின் இறக்குமதி குறைந்து, இருப்பும் குறைந்துள்ளது. இந்தச் சமயத்தில் தேவை உயரும்பட்சத்தில், தங்கம் விலை உயரவே செய்யும். தவிர,  கூடிய விரைவில் அட்சய திருதியை பண்டிகை வருவதால், தங்கத்தின் தேவை  அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை உயரலாம்!'' என்றார் அவர்.  

தங்கம் வாங்க நினைக்கிறவர்கள் இதை கவனத்தில்கொள்வது நல்லது!

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism