ஒருமுறை பயன்படுத்திய காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்து காகித அட்டையாக மாற்றும் ஒரு தொழிலைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம். போட்டிகள் அதிகம் இல்லாத இந்தத் தொழிலை மேற்கொள்வதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும். தவிர, இந்தவகை பேப்பர்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது.

இப்படி தயாரிக்கப்படும் மறுசுழற்சி பேப்பர் மற்றும் பேப்பர் அட்டைகள் (ஹேண்ட் மேட் பேப்பர்) முன்பு டிப்பிங் பாயின்ட் என்கிற முறையிலும், பிறகு ஆட்டோ வாட் முறையிலும் தயாரிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோமேட்டிக் என்கிற வகையிலும், தற்போது சிலிண்டர் மோல்டு முறையிலும் தயாரிக்கப்படுகிறது.

டிப்பிங் முறையில் 80ஜிஎஸ்எம் காகிதங்களைத் தயாரிக்கலாம். இது மிக மெலிதாக இருக்கும் என்பதால் உற்பத்தி குறைவாக இருக்கும். ஆட்டோ வாட் முறையில் 150 ஜிஎஸ்எம் வரை தயாரிக்கலாம். இது மீடியம் உற்பத்தியை தரும். சிலிண்டர் முறையில் 200ஜிஎஸ்எம் வரை தயாரிக்கலாம்.

இந்தக் காகிதங்களில் இருந்து காகிதப் பை, காகித கோப்பு, விசிட்டிங் கார்டு, காகித பெட்டி, வாழ்த்து அட்டை எனப் பலவகைப் பொருட்களைத் தயாரிக்க முடியும். ஹேண்ட் மேட் பேப்பர் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி ஆகிறது.

தேவையான மூலப்பொருட்கள்!

பழைய வெள்ளைத்தாள்கள், நோட்டுப் புத்தகங்கள், பயன்படுத்த முடியாத சிறு துண்டுகளான பஞ்சு துணி வகைகள். இவை அனைத்தையும் மீண்டும் உபயோகிக்கும் காகிதமாக செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் சார்ந்த தொழிலாகவும் இருக்கும்.

தயாரிப்பு முறை!

மூலப்பொருட்களைத் திரவக்கூழ் இயந்திரத்தில் செலுத்தி நீர் சேர்த்து கூழாக்க வேண்டும். இந்தக் கூழை சுத்தம் செய்து சிலிண்டர் மோல்டு இயந்திரத்தில் கொட்டி சரியான அளவில் பரப்ப வேண்டும். இந்த இயந்திரத்திலிருந்து காகித அட்டை தயாராகி கன்வேயர் வழியாக வெளிவந்துவிடும். இதை எடுத்து காயவைக்க வேண்டும். தேவையான நிறங்களில் தேவையான தடிமனில் உற்பத்தி செய்துகொள்ள முடியும். காயவைத்த இந்த அட்டைகளை அப்படியே விற்கலாம் அல்லது பலவகையான பொருட்களாகத் தயாரித்தும் விற்பனை செய்யலாம்.

தேவையான இடம் மற்றும் கட்டடம்!

தேவையான இயந்திரங்கள்: (ரூ)

திரவக் கூழ் தயாரிக்கும் இயந்திரம், டிஸ்க் ரீஃபைனர், சிலிண்டர் மோல்டு வெட் இண்ட் பேப்பர் மெஷின், செஸ்ட் அசிஸ்டேட்டர், 3 பல்ப் பம்புகள், காலண்டரின் இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம் இவை அனைத்தும் ரூ.13 லட்சம் ஆகும்.

இயந்திரங்கள் : 13 லட்சம்
மோட்டார் 49ஹெச்.பி : 1.60 லட்சம்
மின் வேலைகள் : 1.40 லட்சம்
இதர வேலைகள் : 2 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்

மொத்தம் : 24 லட்சம்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கிராமப்புறமாக இருந்தால் நல்லது. தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் மானியம் பெற முடியும்.

நமது பங்கு 5% (ரூ) : 1.20 லட்சம்
மானியம் 25 % (ரூ) : 6 லட்சம்காலக் கடன் (ரூ) : 16.80 லட்சம்

ஒரு நாளைக்கு ஒரு ஷிப்டில் 2 டன் பேப்பர் உற்பத்தி செய்ய முடியும். ஒரு டன் காகிதம் தயாரிக்க 1.10 டன் காகித கழிவு தேவை. ஒரு டன் காகித கழிவு, பனியன் கழிவு மற்றும் இதர வேதியியல் பொருட்களின் விலை 8 முதல் 10 ஆயிரம் ஆகும். ஒருநாள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள்: ரூ.22,000. (2.2 டன்ஙீ10,000=22,000). ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனில், ரூ. 5,50,000

(22,000X25 = 5,50,000)

உற்பத்தி! (ரூ)

ஒருநாளைக்கு ஒரு ஷிப்டில் 2 டன் உற்பத்தி செய்ய முடியும். ஒரு டன் விற்பனை விலை ரூ 17,500. இதன்படி கணக்கிட்டால் ஒருமாத விற்பனை வரவு ரூ 8,75,000. (2ஙீ17,500ஙீ25=8,75,000)

செலவுகள் (ரூ)

வேலையாட்கள்:

மேற்பார்வையாளர் : 10,000

வேலையாட்கள் : 5X8000 = 40,000

பெண் பணியாளர்கள்

: 8 X 5,000 = 40,000

வாட்ச்மேன் : 2X5000 = 10,000

மொத்தம் : 1,00,000

மின்சாரம்:

50ஹெச்பி : 32,000

மொத்த செலவு :

மூலப்பொருட்கள் : 5,50,000
மின்சாரம் : 32,000
உபபொருட்கள் : 20,000
வேலையாட்கள் : 1,00,000
கடன் வட்டி 12.5% : 17,500
கடன் தவணை (60 மாதங்கள்): 28,000
இயந்திர பராமரிப்பு : 10,000
மேலாண்மை செலவுகள் : 5,000
விற்பனை செலவு : 10,000
தேய்மானம் : 22,500
மொத்தம் : 7,95,000

வரவு : 8,75,000
செலவு : 7,95,000

லாபம் : 80,000

படங்கள்: எம்.திலீபன்

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்டமேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)