''எப்போதுமே கூலாக இருந்தால்தான் பிசினஸை டென்ஷன் இல்லாமல் மேற்கொள்ள முடியும். ஏதாவது ஒரு நேரம் அல்லது சூழலில்தான் டென்ஷன் இருக்கும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவே கூடாது. நான் தொழிலை மிகவும் விரும்பி செய்வதால் டென்ஷன்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன்.
ஓய்வுநேரம் என்று தனியாக ஒதுக்கிக் கொள்வதில்லை. கொஞ்சம் ரிலாக்ஸாக வெளியில் செல்லலாம் என்றால் அங்கும் பிசினஸ்தான் பேச வேண்டியிருக்கும். அதே சமயத்தில், பிசினஸ் நேரத்தையும் ரிலாக்ஸ் நேரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் செய்கிறேன்.
எனக்கு சிறிய ரகப் படகில் கடலுக்குள் செல்வது பிடித்தமான பொழுதுபோக்கு. கடல் நடுவே பயணிக்கும்போது என்னை மறந்த ஆனந்தம் கிடைக்கும். இதை அனுபவித்தால்தான் உணர முடியும். இந்த அனுபவம்தான் எனக்கு அடுத்த வேலைகளுக்கான எனர்ஜியைத் தருகிறது. சில நேரங்களில் அந்தப் படகில் இருந்தபடியே பிசினஸ் வேலைகளைக்கூடச் செய்துவிடுவேன். குடும்பத்தோடு கடலுக்குள் சென்றுவர, பிசினஸ் பேச என எனது அனுபவத்தைக்கொண்டு, அதற்கென்று தனியாக ஒரு நிறுவனத்தையே தொடங்கிவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல எனது ரிலாக்ஸ் எனது பிசினஸ்தான். சில நேரங்களில் எனது பிசினஸ்கூட என்னை ரீசார்ஜ் செய்துவிடுகிறது.''