Published:Updated:

பணம் கொட்டும் தொழில்கள்

இரட்டைநூல் முறுக்குதல்!நீரை.மகேந்திரன்

பஞ்சை வாங்கி நூற்பாலையில் பல்வேறு ரக நூல்கண்டுகளாகத் தயாரிப்பார்கள். குறிப்பாக, 20 முதல் 100 கவுன்ட் நூல்களாக இது தயாராகும். இவற்றில் 20 கவுன்ட் நூல்களில் இருந்து பெட்சீட், திரைச்சீலைகள், தலையணை உறைகள், டேபிள் விரிப்புகள் போன்ற தடிமனான துணிகள் உற்பத்தி செய்வார்கள்.

சன்னமான 80 முதல் 100 கவுன்ட் நூல்கள் உறுதியாகவும், ஆடைகள் தயாரிக்க நேரடியாகவும் பயன்படும். நூல்களின் கவுன்டினை கொண்டே துணிகளின் தரம் நிர்ணயம் செய்யப்படும்.

நாம் இப்போது 20 கவுன்ட் நூல்களைப் பயன்படுத்தித் தயாரிப்பது குறித்து பார்ப்போம். இவை முறுக்கி இருந்தாலும் எளிதில் அறுந்துவிடும். காரணம், இதன் இழைகள் சிறியவை. 20 கவுன்டில் நல்ல உறுதியான நூலைப் பெற இதை இரண்டாகச் சேர்த்து அதை மீண்டும் முறுக்குவார்கள். இதுவே, இரட்டை முறுக்கு நூலாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பணம் கொட்டும் தொழில்கள்

முன்பு இவற்றை 'ரிங் டபுள்’ என்கிற தொழில்நுட்பம் என்கிற முறையில் செய்துவந்தனர். இப்போது 'டு பார் ஒன்’, 'டி எஃப் ஓ’ என்கிற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

20 கவுன்ட் நூலை நன்றாக இணைத்து ஒரு ரீலாகச் சுற்றுவார்கள். இதை முறுக்கும் இயந்திரம் 'டு யார்ன்’. இந்த இயந்திரத்திலிருந்து வரும் நூல் ரீல் எனப்படும். இந்த ரீல்களை ஸ்பிண்டிங் இயந்திரத்தில் பொருத்தி இயக்கினால் ஒரேநூலாகக் கிடைக்கும். ஸ்பிண்டிங் இயந்திரத்திலிருந்துவரும் நூலை, பிளாஸ்டிக் அல்லது அட்டை கோன்களில் சேகரித்து பண்டல்களாக மாற்றிவிடவேண்டியதுதான்.

திட்ட அறிக்கையினைப் பார்ப்போம்.

நூலை இரட்டையாகச் சுற்றும்  ஒரு செட் ஸ்பிண்டிங் இயந்திரம் (இதில் 120 ஸ்பிண்டிங்குகள் இருக்கும்), ஒரு பண்டலிங் இயந்திரம்.

நிலம், கட்டடம் :சொந்தமாக அல்லது வாடகை

இயந்திரங்கள் : ரூ.11.10 லட்சம்
மின்சார இணைப்பு
மற்றும் பொருட்கள்      : ரூ.40 ஆயிரம்
நிறுவுதல் மற்றும்
டிரான்ஸ்போர்ட்   : ரூ.50 ஆயிரம்
நடைமுறை மூலதனம்   : ரூ.8 லட்சம்
மொத்தம்   : ரூ.20 லட்சம்

இந்தத் திட்டத்துக்குப் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்டம் ஏதாவது ஒன்றின் மூலம் கடன் மற்றும் மானியம் பெற முடியும்.

பணம் கொட்டும் தொழில்கள்

நமது மூலதனம் (5%)     : ரூ.1 லட்சம்
மானியம் (25%) : ரூ.5 லட்சம்
வங்கிக் கடன்         : ரூ.14 லட்சம்

திட்ட அனுமானங்கள்!

5 கிலோ நூல் = 1 பண்டல்.

1 கிலோ 20 கவுன்ட் நூல் ரூ.150 - 160 வரை ஆகும். நாம் ரூ.160 என வைத்துக்கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், ஒரு பண்டல் விலை: ரூ.800. நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பிண்டில் 2 கிலோ வரை உற்பத்தி

பணம் கொட்டும் தொழில்கள்

செய்யும். 120 ஸ்பிண்டில் 240 கிலோ வரை உற்பத்தி செய்து தரும். நாம் 200 கிலோ உற்பத்தி என வைத்துக்கொள்வோம். இது 40 பண்டல்கள் ஆகும்.

இதன் அடிப்படையில் ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என்று கணக்கிட்டால், தேவைப்படும் நடைமுறை மூலதனம் ரூ.8 லட்சம். (25ஙீ40ஙீ800 = 8,00,000)

வேலையாட்கள்    : (ரூ)
மேற்பார்வையாளர் 1 : 10,000
பணியாளர்கள் 10 X 5,000: 50,000
இதர பணியாளர்கள் 2 X 5,000: 10,000
மொத்தம் : 70,000
மின்சாரம் 10 ஹெச்பி : ரூ. 4,000

விற்பனை வரவு

இது சந்தையைப் பொறுத்து மாறுபடும். மூலப்பொருள் குறையும் போது, இதன் விலையும் குறையும். ஆனால் இன்றைய நிலவரப்படி, ரூ.990 - 995-க்கு விற்பனை ஆகிறது. நாம் ரூ.990 என்று எடுத்துக்கொள்வோம்.

பணம் கொட்டும் தொழில்கள்

விற்பனை வரவு ரூ.9,90,000 (40X990X25        =  9,90,000)
மொத்த செலவுகள் :      (ரூ)
வாடகை :    10,000
மூலப்பொருட்கள் :   8,00,000
மின்சாரம் :     4,000
பணியாளர்கள் :    70,000
கடன் வட்டி (12.5%) :    14,600
தவணை (60 மாதம்) :    23,400
இயந்திர பராமரிப்பு :     5,000
மேலாண்மைச் செலவுகள் :     5,000
தேய்மானம் :    13,000
விற்பனைச் செலவுகள் :     5,000
______
மொத்த செலவுகள் :   9,50,000
______
மொத்த வரவு :   9,90,000
______

நிகர லாபம் :    40,000

இந்தத் தொழிலை கரூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், சேலம், ராஜபாளையம் போன்ற நகரங்களை மையமாகவைத்து தொடங்க முடியும்.

பணம் கொட்டும் தொழில்கள்

இந்த நூல்களைக்கொண்டு நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோல பெட்சீட், திரைச்சீலைகள், தலையணை உறைகள், டேபிள் விரிப்புகள், ஏப்ரான் போன்றவற்றைத் தயாரிக்க முடியும்.

படங்கள்: வீ.சிவக்குமார்.

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்டமேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி)