Published:Updated:

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

ந.ஆஷிகா, தி.ஜெயப்பிரகாஷ்.

கையில் மருதாணி இட்டுக்கொள்வதில் நம் பெண்களுக்குத் தீராத ஆசை. சமீபகாலமாக மருதாணியின் இடத்தை வேகமாகப் பிடித்துவருகிறது மெஹந்தி. மணமகளுக்கு மெஹந்தி போடுவதன் மூலம் கைநிறைய சம்பாதித்துவரும் மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த சில மாணவிகளைப் பற்றி இனி பார்ப்போம்.

மதுரை, பாத்திமா கல்லூரியில் எம்.எஸ்சி கணினி அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் கீதா, மெஹந்தி போடுவதில் செம பாப்புலர். அவரை சந்தித்தோம்.

பலவகை மெஹந்தி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எங்க காலேஜ்ல ஒரு மேடம் கையில அழகா மெஹந்தி போட்டுட்டு வருவாங்க. அதைப்பார்த்துட்டு நானும் அந்தமாதிரி போட்டுக்கணும்னு அவங்ககிட்ட சொல்லி போட்டுப்பேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்து அவங்க எனக்கும் என்னோட படிக்கிற மாணவிகளுக்கும் மெஹந்தி போட கத்துத்தந்தாங்க. தொடர்ந்து 15 நாள் மெஹந்தி போடுற வித்தைகளைக் கத்துக்குடுத்தாங்க.

மெஹந்தியிலேயே நார்மல், அராபிக், கலர்,  கிலிட்டர்,  பிளாக் மற்றும் ரெட், ஜர்தோசி, ஃபுல் ரோலிங், ராஜஸ்தானி பிரைடல், ஃபேஷ் ஆர்ட், நைல் ஆர்ட் எனப் பலவகை இருக்கு. ஆர்வத்தோட மெஹந்தியைக் கத்துகிட்ட நாங்கள், இப்போது ஒண்ணா சேர்ந்து பிசினஸ் செஞ்சுட்டு வர்றோம்.

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

தரம்தான் முக்கியம்!

மெஹந்தியில் மிகவும் கவனிக்க வேண்டியது தரம்தான். நாம் போடுற டிசைன் நன்றாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த மெஹந்தி

கொஞ்சநாளாவது கையில் நீடிக்கிறமாதிரி இருக்கவேண்டும். மெஹந்தி பவுடர், பேஸ்ட் வடிவில் கடையில் கிடைக்கிறது. அதை வாங்கி நாங்க அப்படியே பயன்படுத்தாமல் புளித்தண்ணீர், லெமன் ஜூஸ், யூக்கலிப்டஸ் ஆயில், தண்ணீரில் டீத்தூள் போட்டு கொதிக்கவைத்த டிக்காஷன் என எல்லாத்தையும் கொஞ்சமா கலக்கி பயன்படுத்துவோம். இதுதான் எங்களது சக்சஸ் டெக்னிக். இந்த டெக்னிக்தான் கலர் நல்லா தரும். டிசைனும் அழியாம அப்படியே இருக்கும்.  

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

வேலைக்கேற்ப கட்டணம்!

எங்களுக்கு மெஹந்தி சொல்லிக் கொடுத்த மேடம்தான் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார். கல்யாண வீட்டுக்கு அவர் மெஹந்தி போட போகும்போது எங்களையும் அழைத்துக்கொண்டு போவார். அங்க இருக்குற குழந்தைகள், பெரியவங்க எல்லோருக்கும் அவங்க விரும்புற மாதிரி மெஹந்தி போடுவோம். இதன்மூலம் ஆரம்பத்துல 2,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. அப்புறம் நாங்களே தனியா மெஹந்தி போட ஆரம்பிச்சுட்டோம். உள்ளங்கை மட்டும் போடவேண்டும் எனில் 100 ரூபாயில் ஆரம்பித்து, 150, 250, 500, 750 ரூபாய் என வேலைக்கேற்ப கட்டணம் வசூலிப்போம். கையில் மட்டுமில்லை, காலுக்கும் மெஹந்தி போடுவோம்'' எனத் தொழில்ரீதியான விஷயங்களை வெளிப்படையாக எடுத்துச் சொன்னார் கீதா.

கோவையில் கைவண்ணம்!

மதுரை மாணவி கீதாவைப்போல, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆடை வடிவமைப்புத் துறையில் பயிலும் ஜி.ஸப்னாவும் மெஹந்தி போடுவதன்மூலம் நன்கு சம்பாதித்து வருகிறார்.

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

''என் அக்கா சசி, மெஹந்தி போடுவதில் கில்லாடி. அவர் மெஹந்தி போடுவதை ஆர்வத்தோடு  பார்த்து கத்துகிட்டேன். பள்ளி சென்ற காலத்தில் விடுமுறை நாட்களில் மெஹந்தி கோனும் கையுமாகவே சுற்றித் திரிவேன். வீட்டிலுள்ள நபர்களின் கைகளில் மெஹந்தி போட்டு அழகு பார்ப்பேன். பல்வேறு கல்லூரிகளில் நடக்கும் இன்டர்காலேஜ் மீட் போன்ற விழாக்களில் மெஹந்திப் போட்டிகளும் நடைபெறும். அதிலே தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளை பெறுவேன். என் திறமையைப் பார்த்த பலரும் மெஹந்தி போடுவதைத் தொழிலாக மாற்றி நல்ல வருமானத்தை ஈட்டலாம் என்ற ஐடியா தந்தார்கள்.

பார்த்தவர்கள் கொடுத்த ஐடியா!

இந்தத் தொழிலுக்கு முதலீடு என்பது கிடையாது. நமது கற்பனைத்திறனும், ஓவியம் வரையும் திறனும் இருந்தாலே போதும். கைகளில் மெஹந்தி கோன்களை எடுத்து கலக்க ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விஷேசங்களில் மட்டுமே மெஹந்தி போடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல, இன்று என்னைத் தேடிவந்து மெஹந்தி போட்டுச் செல்கிறவர்கள் நிறையபேர். ஒரு சில மகளிர் அழகு நிலையங்கள் மூலம் வருகிறவர்களுக்கும் மெஹந்தி போடுவேன்.  

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

கமிஷன் தருவேன்!

எனக்கு யாராவது ஆர்டர் வாங்கித் தந்தால், 30% கமிஷன் தருவேன். இதனால் எனக்கு நிறைய ஆர்டர் கிடைக்கிறது. பெரும்பாலும் திருமண ஆர்டர்கள்தான் வரும். அராபிக், பிரைடல், டிரெடிஷனல் ஆகிய ஸ்டைல்களுக்குதான் முக்கியத்துவம் தருவார்கள். எந்த டிசைன் என்று தேர்வு செய்ய முடியாதவர்களுக்கு போட்டோக்களைக் காட்டி, அவர்கள் விரும்பும் டிசைனில் மெஹந்தி போடுவேன்.

கைவண்ணத்தைக் காசாக்கும் கல்லூரி மாணவிகள்!

இரு கைகளிலும் மெஹந்திபோட 1,500 ரூபாயும், கால்களுக்கு 2,000 ரூபாயும் வசூலிக்கிறேன். இதில் தொடர்ச்சியான மாத வருமானம் இல்லையென்றாலும், சீஸன் நேரத்தில் நன்கு சம்பாதிக்கலாம். மெஹந்தி போடுவதை மற்றவர்களுக்குச் சொல்லித்தருகிறமாதிரி பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்குவதே என் ஆசை!'' என்றார் ஸப்னா.

படங்கள்: பா.காளிமுத்து,
அ.ஜெஃப்ரி¢ தேவ்.