Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

ஜீரகம்! (Jeera)

''கடந்த சில வாரங்களாகவே ஜீரகத்தின் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் விலை குறைந்தது. புதிய அறுவடை காரணமாக வரத்து அதிகரித்ததால் விலை மேலும் இறங்காமல் தடுக்கப்பட்டது. குஜராத்தில் ஜீரகம் பயிரிடப்பட்ட பரப்பளவு 4,55,000 ஹெக்டேராக இருந்தது. (இது கடந்த ஆண்டில் 3,35,200 ஹெக்டேராக இருந்தது.)  ராஜஸ்தானில் 3,90,000 ஹெக்டேர் அளவு பயிரிடப்பட்டதாகவும் தெரிகிறது.

ஜீரகம் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் இரண்டு முக்கிய நாடுகளான சிரியா மற்றும் துருக்கியில் நிலவிவரும் அரசியல் பிரச்னை காரணமாக சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரும் வாரத்தில் ஜீரகத்தின் அதிகளவு உற்பத்தி காரணமாக விலையிறங்கலாம். தவிர, சர்வதேச அளவில் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி சப்போர்ட் லெவல் - ரூ.9,956 - 9,800. முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.10,316 - 10,550.

பரிந்துரை: ரூ.10,150 - 10,250 லெவலில் விற்கலாம். இலக்கு விலை- ரூ.9,800. ஸ்டாப்லாஸ் - ரூ.10,550-க்கு மேல்.

அக்ரி கமாடிட்டி!

கொத்துமல்லி! Coariander)

கொத்துமல்லி உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பகுதிகளில் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், தேவையும் கட்டுக்குள் இருக்கும் என்று தெரிகிறது.

மழை காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தரமான பயிர்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தரமான கொத்துமல்லியின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

ராஜஸ்தான் ஸ்பாட் சந்தைக்கு வரத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 36,000 பைகளாக இருந்தது. (1 பை என்பது 40 கிலோ). மேலும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எனினும், வரும் வாரத்தில் விலை அதிகரிக்கும்போது விற்கலாம். டெக்னிக்கல்படி, சப்போர்ட் லெவல் - ரூ.9,219 - 9,000. ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ. 9,690 - 9,843.

பரிந்துரை: ரூ.9,540 - 9,600 லெவலில் விற்கலாம். இலக்கு விலை- ரூ.9,000. ஸ்டாப்லாஸ்- ரூ.9,843.''

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள்! (Turmeric)

கடந்த வாரம் அதிகப்படியான இருப்பு மற்றும் ஈரப்பதமுள்ள தரமற்ற மஞ்சள், அதேசமயம் தேவைக் குறைவு காரணமாக வாரத் தொடக்கத்தில் விலை குறைந்தே வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி!

வார இறுதியில் தேவை சற்று அதிகரித்ததால்,  விலையிறக்கம் தடுக்கப்பட்டது. ஈரோடு மஞ்சள் சந்தை ஏப்ரல் 6-14 வரை நிதியாண்டு முடிவு காரணமாக மூடப்படுகிறது.  

கடந்த வியாழக்கிழமை நிஜாமாபாத் சந்தைக்கு வரத்து 30,000 பைகளாக இருந்தது. 2013-14-ல் உற்பத்தி 40 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது, 10-15 சதவிகிதம் குறைவு.

வரும் வாரத்தில் அதிகப்படியான தேவை, அதேசமயம் தரமான மஞ்சள் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலை அதிகரிக் கலாம். அதேசமயம், அதிகப்படியான இருப்பு அதிக விலையேற்றத்தைத் தடுக்கலாம்.

கொண்டைக்கடலை!(Chana)

கடந்த வார தொடக்கத்தில் ஏற்றத்தைக்கண்ட கொண்டைக்கடலை விலை, வார இறுதியில் அதிகப்படியான இருப்பு மற்றும் குறைவான தேவை காரணமாக விலை குறைந்தது. மத்தியப்பிரதேசத்தில் அறுவடை பாதிப்பால் உற்பத்தி குறைந்துள்ளது. இது அதிகளவு விலையிறக்கத்தைத் தடுத்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஜனவரி 31-வுடன் முடிவடைந்த காலத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில்முறையே 3.48 மில்லியன் ஹெக்டேர், 1.75 மில்லியன் ஹெக்டேர், 1.79 மில்லியன் ஹெக்டேராகவும் விதைப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், கர்நாடகாவில் 1.01 மில்லியன் ஹெக்டேராகவும் குறைந்துள்ளது.

வரும் வாரத்தில் அதிகளவு வரத்து, இருப்பு மற்றும் தேவை குறைவின் காரணமாக விலை குறையலாம். அதேசமயம், அதிகப்படியான பயிர்ச்சேதம் மற்றும் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டால் அதிகளவு விலையிறக்கம் தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

சோயாபீன்! (Soyabean)

உள்நாட்டுச் சந்தைகளில் சப்ளை குறைவு காரணமாகக் கடந்த வாரம் சோயாபீன் விலை அதிகரித்தே வர்த்தகமானது. கடந்த இரண்டு மாதங்களாகவே குறைந்த இருப்பு மற்றும் உற்பத்திக் காரணமாக விலை அதிகரித்தே வர்த்தகமானது.

வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யிலிருந்து, 2013-14ல் சோயாபீன் உற்பத்தி 12.45 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும், இதுவே 2012-13-ல் 14.67 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் தெரிகிறது.

தென் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரியிலிருந்து சர்வதேச சந்தையிலும் விலை அதிகரித்தே காணப்படுகிறது. வரும் வாரத்தில் சர்வதேச அளவில் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் வரத்துக் குறைவின் காரணமாக விலை அதிகரிக்கலாம்.

கடுகு! (Muster seed)

கடந்த வார தொடக்கத்தில் ஏற்றத்தைக்கண்ட கடுகின் விலை, வார இறுதியில் புதிய விளைச்சல் காரணமாக வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தே வர்த்தகமானது. கடுகு விதைப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 7.13 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 6.73 மில்லியன் ஹெக்டேராக இருந்தது என வேளாண்துறை முன்பு கூறியிருந்தது.

வேளாண்துறை அறிக்கையின்படி, 2013-14-ல் கடுகு உற்பத்தி 8.25 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2.76 சதவிகிதம் அதிகமாகும் என்றும் தெரிகிறது. வரும் வாரத்தில் அதிகப்படியான வரத்து எதிர்பார்ப்பால் விலையேற்றம் தடுக்கப்படலாம்.