Published:Updated:

நிறுவனத்தைக் காணவில்லையாம்!

செ.கார்த்திகேயன்

நிறுவனத்தைக் காணவில்லையாம்!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

யானையின் காதில் நுழைந்த சிற்றெறும்பு போல, சாம்சங் நிறுவனத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறார் டெல்லியை சேர்ந்த மைதீன் என்கிற மனிதர். இவர் நடத்திவரும் ஜேசிஇ கன்சல்டன்சி என்கிற நிறுவனம், சாம்சங்கைப்  பாடாய்ப்படுத்தி வருகிறது.  

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் 72 வயதாகும் லீ குன் கீ. இவரின் துபாய் சாம்சங் நிறுவனம் 8.4 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஜேசிஇ கன்சல்டன்சி வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில், கொரியாவில் இருக்கும் லீ குன் கீ -ஐ கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதனை

நிறுவனத்தைக் காணவில்லையாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்த்து லீ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக, லீ இன்னும் 6 வாரங்களுக்குள் காசியாபாத் கோர்டில் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.  

இந்த நிலையில், இந்த வழக்கு கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலீட்டு சூழ்நிலையை மிகவும் பாதிக்கும் என வருத்தப்பட்டு கருத்து சொல்லி இருக்கிறார், மத்திய தொழிற்துறை மந்திரி ஆனந்த் சர்மா.

சாம்சங் நிறுவனத்தை ஆட்டிப்படைக்கும் ஜேசிஇ கன்சல்டன்சி நிறுவனம் எங்கே இருக்கிறது, இதனை நடத்திவரும் மைதீன் என்பவர் யார் என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை. டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள சர்க்கார்பூரில் ஜேசிஇ கன்சல்டன்சி நிறுவனம் இருப்பதாக வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

அந்த முகவரியைத் தேடிப் போனபோது, அந்த இடத்தில் எந்த நிறுவனமும் செயல்பட்டதற்கான அறிகுறியே தென்படவில்லையாம். தவிர, மைதீன் என்பவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கிறார்கள் ஜேசிஇ நிறுவனத்தின் முகவரிக்கு பக்கத்தில் அலுவலகம் வைத்திருப்பவர்கள். பல வருஷமாக அந்த அலுவலகம் பூட்டியே கிடப்பதாகவும் சொல்லியிருக்கிறார் இன்னொருவர்.  

சாம்சங் என்ன செய்து இந்த வழக்கை சமாளிக்கப்போகிறதோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism