Published:Updated:

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

Published:Updated:

கேள்வி-பதில்

 ?வேப்பங்கொட்டை மற்றும் முருங்கைக் கீரையை ஏற்றுமதி செய்ய நினைக்கிறேன். இந்தப் பொருட்களை எந்த நாடுகள் இறக்குமதி செய்கின்றன?

விஜி, பெங்களூரு. கே.உன்னிகிருஷ்ணன், இணை துணை பொது இயக்குநர் (தென் மண்டலம்), இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முருங்கைக் கீரை, வேப்பங்கொட்டை ஆகியவற்றுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, சீனா, கொரியா, கனடா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகிக்கிறது.''

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

?நான் பயன்படுத்திவந்த கிரெடிட் கார்டினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சரண்டர் செய்துவிட்டேன். தற்போது மீண்டும் கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்தால், 'நீங்கள் ஏற்கெனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறீர்கள். அதனால் புது கார்டு வழங்க முடியாது’ என்று சொல்கிறது கிரெடிட் கார்டு நிறுவனம்.  ஆனால், தற்போது நான் எந்த கார்டையும் பயன்படுத்தவில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முத்துக்குமார், சென்னை. கோபாலகிருஷ்ணன், முதன்மை ஆலோசகர், திஷா அமைப்பு.

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

''நீங்கள் கிரெடிட் கார்டை சரண்டர் செய்யும்போது அந்த வங்கியின் விதி முறைகளின்படி செய்துள்ளீர்களா என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, சரண்டர் கட்டணம் அல்லது வேறு ஏதாவது கட்டணம் இருந்தால், அந்தத் தொகை முழுவதையும் நீங்கள் செலுத்தியிருக்க வேண்டும். இந்தக் கட்டணம் முழுவதையும் முழுமையாகச் செலுத்தியிருந்தால் உங்களுக்கு கார்டு வழங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. எனவே, கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் உங்கள் கார்டு எண்ணுக்குரிய ஸ்டேட்மென்டை வாங்கிப் பார்ப்பது நல்லது. இதில் ஏதாவது கட்டணம் நிலுவையில் இருந்தால் அதைச் செலுத்தியபிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பித்தால் கார்டு கிடைக்கும்.''

?தொழில் செய்ய வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினேன்.  இந்தக் கடனை பிரீகுளோஸர் செய்து வேறு ஒரு நிறுவனத்துக்குக் கடனை மாற்றும்போது ப்ரீகுளோஸர் கட்டணம் கேட்கிறார்கள். இதற்கு பிரீகுளோஸர் கட்டணம் கட்டித்தான் ஆகவேண்டுமா?

கதிர், திருச்சி. ரமேஷ், வழக்கறிஞர்.

''வீட்டுக் கடனுக்கு மட்டும்தான் பிரீகுளோஸர் கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. பிற கடன்களுக்கு இப்படி எந்த விதிமுறையும் கிடையாது. நீங்கள் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியிருக்கிறீர்கள். இது வர்த்தகக் கடன் பிரிவில் வரும். இந்தக் கடன் வாங்கும்போதே பிரீகுளோஸர் கட்டணம் குறித்த விவரங்களைச் சொல்லியிருப்பார்கள். இதற்கு ஒப்புக்கொண்டு நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அந்தக் கட்டணத் தொகையைச் செலுத்திதான் ஆகவேண்டும். பிரீகுளோஸர் கட்டணம் குறித்து எதுவும் கூறாமல் திடீரெனக் கடனை அடைக்கும்போது கேட்டால், அது சட்டப்படி தவறு. அந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய முடியும்.''

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

?நீண்ட காலத் தேவைகளுக்காக கடந்த 15 மாதங்களாக ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் மூன்று ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

@பாலா, உடுப்பி. ஏ.பி.வாசுதேவன், இயக்குநர், ஆப்டிமா ஃபைனான்ஷியல் சொல்யூஷன்ஸ்.

''நீண்ட காலத் தேவைகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். எனவே, இப்போது இந்தப் பணம் உங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் நல்ல நிலையில் செயல்பட்டுவரும் மல்டிக் கேப் ஃபண்ட். எனவே, இந்த ஃபண்டில் முதலீடு செய்வதை அப்படியே தொடரலாம்.''

?எனது ஆண்டு வருமானம் 5.6 லட்சம் ரூபாய். இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் விலக்கு இருக்கிறது. மீதமுள்ள 4.6 லட்சம் ரூபாய்க்கு வரிச் செலுத்தும்போது, சிறப்பு வரி தள்ளுபடி 2,000 ரூபாய் எனக்குக் கிடைக்குமா?

பாலாஜி, திருச்சி. மனோஜ் குமார், ஆடிட்டர்.

''வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் செய்யப்படும் முதலீடு போக மீதமுள்ள தொகைதான் உங்களின் மொத்த வரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானமாக எடுத்துக்கொள்ளப்படும். இப்போது உங்களின் மொத்த வரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் 4.60 லட்சம் ரூபாய். இது 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளதால், உங்களுக்கு பட்ஜெட் அறிவிப்பின்படி 2,000 ரூபாய் வரித் தள்ளுபடி கிடைக்கும்.''

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?

?எனக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கிறேன். வேலை காரணமாக திருச்சியில் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறேன். நான் செலுத்தும் வாடகை தொகைக்கு வீட்டு வாடகைப்படி கிளைம் செய்ய முடியுமா?

சங்கரன், திருச்சி. எம்.எல்.சீனிவாசன், ஆடிட்டர்.

''சென்னையில் உள்ள வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வாடகையை வீட்டிலிருந்து கிடைக்கும் வருமானமாகக் காண்பித்து வருமான வரிச் சட்டம் 1961 கீழ் பிரிவு 22, 23-படி வரி செலுத்த வேண்டும். இந்த வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தில் மாநகராட்சி வரி, நிரந்தரக் கழிவு, வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்குச் செலுத்தும் வட்டி ஆகியவற்றைக் கழித்தபிறகு மீதமுள்ள தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

உங்கள் சம்பளத்தில் வீட்டு வாடகைப்படி (HRA) இருந்தால் திருச்சியில் நீங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு செலுத்தும் வாடகைக்கு,  நிறுவனம் கொடுக்கும் வாடகைப்படிக்கு ஏற்ப வருமான வரிப் பிரிவு 10 (13ஆ) கீழ் விலக்கு பெறலாம்.''

?சென்னையில் ஒரு பில்டரிடம் மூன்று வருடத்துக்கு முன்பு ஒரு ஃப்ளாட் வாங்க புக்கிங் செய்திருந்தேன். ஆனால், இதுவரைக்கும் ஃப்ளாட்டைத் தந்தபாடில்லை. இந்த நிலையில் அந்த நிறுவனம் தங்களுடைய கடனை அடைப்பதிலே அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. ஒரு நிறுவனத்தின் கடனை எப்படி தெரிந்துகொள்வது?

கந்தசாமி, மேட்டூர். எஸ்.சி.ரகுராம், வழக்கறிஞர், ரேங்க் அசோசியேட்

''நீங்கள் வீடு வாங்கும்போது அந்த பில்டர், நிலத்தின் ஒரிஜினல் பத்திரத்தை வேறு ஏதாவது நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளாரா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், நீங்கள் வீடு வாங்கும் நிறுவனம், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் கடன் விவரத்தை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில், விண்ணப்பித்து தெரிந்துகொள்ளலாம். இதில் அந்த நிறுவனம், எந்தெந்த வங்கி மற்றும் வங்கியில்லாத நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளது என்பது தெரியவரும். இதைத் தவிர்த்து தனிநபர்களிடம் ஏதாவது கடன் வாங்கியிருந்தால், அந்த விவரம் நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். பதிவு பெறாத நிறுவனங்களின் கடன் மதிப்பை தெரிந்துக்கொள்வது கடினம்''

படம்: ஜெ.வேங்கடராஜ்

வேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism