Published:Updated:

ஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்!

ஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்!

ஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்!

ஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்!

Published:Updated:

''வெயில் அதிகமாக இருப்பதால், பகலில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எனவே, இரவு எட்டு மணிக்கு உம்மை வந்து சந்திக்கிறேன்'' என்று முன்கூட்டியே அப்பாய்ன்மென்ட் வாங்கிவிட்டார் ஷேர்லக். அவர் வரவுக்காகக் காத்திருந்தோம். சொன்ன நேரத்தில் வந்தவரிடம் சந்தை பற்றிய நம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

''இந்த வாரம் முழுக்கவே ஒரே ஏற்றமும் இறக்கமுமாக சந்தை இருந்ததே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''ஒருபக்கம் புதிய ஆட்சி பற்றிய எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. நம்மவர்களைவிட எஃப்ஐஐகளிடம் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் வருவதும் போவதுமாக இருப்பதால்தான் இந்த ஏற்ற இறக்கம். தேர்தல் வரை சந்தை நாலு படி ஏறி, இரண்டு படி சறுக்கி, மீண்டும் ஏறி, இறங்குவதுமாகவே இருக்கும். ஷார்ட் டைம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்வெஸ்டர்கள் ரிஸ்க் எடுத்து, ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேடிங் செய்யலாம். மற்றவர்கள் நீண்ட கால நோக்கில் நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம்'' என்றவருக்கு, ரோஸ்மில்க் தந்தோம். வெப்பத்தில்  களைத்துப்போனவர் அதை ரசித்துக் குடித்தார்.

''இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐ களின் முதலீடு எப்படி இருக்கிறது?'' என்று மீண்டும் ஆரம்பித்தோம்.

''ஜனவரி, பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் எஃப்ஐஐ-களின் முதலீடு ஏறக்குறைய  இருமடங்காகி இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் எஃப்ஐஐகள் இந்தியச் சந்தையில் 31,323 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இதில் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு மட்டும் ரூ.20,077 கோடி.

ஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்!

ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அதிகமாக விற்றுத்தள்ளியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் ரூ.1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள யூனிட்களை முதலீட்டாளர்கள் விற்றிருக்கிறார்கள். இதில் லிக்விட் மற்றும் நிதிச் சந்தை ஃபண்டுகளிலிருந்துதான் அதிக தொகை வெளியேறியிருக்கிறது. நமக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்'' என்றார் சிரித்தபடி.

''எஸ்கார்ட்ஸ் பங்கின் விலை திடீரென அதிகரித்துள்ளதே? முக்கியமான புள்ளி யாராவது அதை வாங்கித்தள்ளுகிறாரா?'' என்று வினவினோம்.

''அந்த முக்கிய புள்ளி, கோடீஸ்வர முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாதான். இவர் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள தன் பங்கு முதலீட்டை 4.89 சதவிகிதத்திலிருந்து 5.47 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார். அதாவது, புதிதாக 7 லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறார்'' என்று விளக்கம் தந்தார்.

''ஜெட்வேய்ஸ், எத்திஹாட் ஏர்வேய்ஸ் ரூ.2060 கோடி டீல் எந்த அளவில் இருக்கிறது?'' என்று விசாரித்தோம்.

''அண்மையில் இந்த இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் செபி அமைப்பின் அதிகாரிகளைச் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த டீலுக்கு விரைவாக அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல். இதையடுத்து இந்தப் பங்கின் விலை ஒரேநாளில் சுமார் 4.5% அதிகரித்துள்ளது. சின்னச் சின்ன செய்திகளுக்கெல்லாம் சந்தை இப்போது உடனுக்குடன் ரியாக்ட் செய்வது வழக்கமான விஷயமாகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் இதற்கு காரணம்'' என்றவர், ஏசியை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கும்படி ஜாடை காட்டினார்.

''கோடையில் அருகலாக வரும் மழை மாதிரி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐபிஓ ஒன்று வருகிறது போலிருக்கிறதே?'' என்றோம்.

''ஒன்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் 190 கோடி திரட்ட இருக்கிறது. இந்தப் பங்கு வெளியீடு ஏப்ரல் 21-ல் தொடங்கி 23-ல் முடிவடை கிறது. பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.115-125-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.45 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த நிறுவனம் 2013-14-ம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் 121.52 கோடி விற்பனையில் ரூ.33.5 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது'' என்று சில முக்கிய புள்ளிவிவரங்களைத் தந்தார்.

''அதானி குழும நிறுவனப் பங்கின் விலை கண்டபடி அதிகரித்து வருகிறதே, என்னதான் நடக்கிறது அந்த நிறுவனத்தில்?'' என்று ஆச்சர்யப்பட்டு  கேட்டோம்.

''2013 செப்டம்பரிலிருந்து இந்தக் குழுமத்தைச் சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 230%, அதானி பவர் 56%, அதானி போர்ட் 42% அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் அதானியும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் மிகவும் நெருக்கம். மோடி பிரதமரானால் அதானி குழும நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பில் பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதில் முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பிரதமர் என்பவர் எந்தவொரு தனிப்பட்ட கம்பெனிக்கும் எந்த அளவுக்கு ஆதரவாக இருப்பார் என்று சொல்ல முடியாது. அந்தவகையில் அதானி பங்குகளை முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன்தான் கையாள வேண்டும்'' என்று உஷார்படுத்தினார்.  

''எம்சிஎக்ஸ் - எஸ்.எக்ஸ் புதிய இண்டெக்ஸை அறிமுகப்படுத்தி இருக்கிறதே?'' என்றோம்.

''மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்போது வங்கித் துறையும் வேகமான வளர்ச்சிகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்துக்கொள்ளும்விதமாக எஸ்எக்ஸ் பேங்க் (SxBank) என்னும் புதிய இண்டெக்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நேரத்தில் வங்கித் துறை பற்றிய இன்னொரு எச்சரிக்கை. எதிர்பாராதவகையில் இழப்பு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் அளவுக்கு இந்திய வங்கிகள் தங்களை தகுதி உள்ளதாக ஆக்கிக்கொள்ளவில்லை என  ஐஎம்எஃப் சொல்லியிருக்கிறது. வாராக்கடன் பிரச்னை எந்தநேரத்திலும் வெடிக்கலாம் என்கிற நிலையில் ஐஎம்எஃப் சொன்னதை நாம் மறக்கக் கூடாது'' என்றார்.

''பங்கு பரிந்துரை தருவதாகச் சொன்னீர்களே?'' என்றோம்.

''ஐசிஐசிஐ பேங்க், சிட்டி யூனியன் பேங்க், டிசிபி பேங்க், ஹேவல்ஸ் இந்தியா, வோல்டாஸ், கேஇசி இன்டர்நேஷனல், கல்பதரு பவர், கிராம்ப்டன் கிரீவ்ஸ், தெர்மேக்ஸ் - இவை எல்லாம் நீண்ட கால முதலீட்டுக்கான பங்குகள்!'' என்று சொல்லிவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism