சோயாபீன்! (Soybean)

சோயாபீன் ஏற்றுமதி 2013-14-ல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது 50 மில்லியன் புஷல்ஸ் (1 புஷல்ஸ் (Bushels) என்பது 27.2155 கிலோ) உயர்ந்து, 1.58 பில்லியன் புஷல்ஸ் அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தபோதிலும் விலையும் அதிகரித்தே காணப்பட்டது. மேலும், அமெரிக்காவின் ஏற்றுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. அமெரிக்காவில் சோயாபீன் இருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 135 மில்லியன் புஷல்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 10 மில்லியன் புஷல்ஸ் குறைவு.

பிரேசிலில் கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது ஒரு மில்லியன் டன் சோயா உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, தெற்கு பகுதிகளில் பிப்ரவரி 15-ம் தேதிக்குப்பின் சூடான வெப்பநிலை மற்றும் குறைவான மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவில் உற்பத்திப் பருவத்தில் அதிக மழைக் காரணமாக சராசரி உற்பத்தி 0.8 மில்லியன் டன்கள் குறைந்து, 11 மில்லியன் டன்னாக உள்ளது. சீனா இறக்குமதியைக்

குறைத்துள்ளதால் இந்தியாவில் 11 மில்லியன் டன் உற்பத்தியில் 5.5 மில்லியன் டன்கள் மட்டுமே நசுக்கப்பட்டுள்ளன. ரூபாய் மதிப்பு நன்கு வலுவடைந்திருப்பதையடுத்து, உள்நாட்டு சந்தை நிலவரத்தைப் பொறுத்து, சோயா விலையில் கரெக்ஷன் வரலாம்.

டெக்னிக்கலாக சோயாபீன் (மே கான்ட்ராக்ட்) சப்போர்ட் லெவல் ரூ.4,330 - 4,280. ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.4,520. இந்த ரெசிஸ்டன்ஸ் அளவைத் தாண்ட முடியாவிட்டால், மேலே தரப்பட்டுள்ள சப்போர்ட் அளவு உடைக்கப்படலாம். எனினும், கடந்த வார வர்த்தக முடிவில் ரூ.4,520 மேலே முடிவடையும்பட்சத்தில் ரூ.4,700 - 4,800 வரை செல்லலாம்.

பரிந்துரை: ரூ.4,430 லெவலில் விற்கலாம். ஸ்டாப்லாஸ்- ரூ.4,520-க்கு மேல். இலக்குவிலை - ரூ. 4,330 - 4,280.Ó

மிளகாய்! (Chilli )

உள்நாட்டிலும் சர்வதேச சந்தை யிலும் தேவை குறைவு, அதிகப்படியான வரத்துக் காரணமாக மிளகாய் விலை குறைந்தே வர்த்தகமானது. சந்தை அறிக்கையின்படி, சில பகுதிகளில் மழைக் காரணமாக ஸ்பாட் சந்தை களில் வர்த்தகம் குறைந்தது. மேலும், அதிகப்படியான, ஈரப்பதம் மிக்க மிளகாய் வரத்து, ஏற்றுமதி தேவையைக் குறைத்துள்ளது. அறுவடை காலம் ஆரம்பித்துள்ளதால் புது வரத்து இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தினவரத்தும் 70,000-1,00,000 பைகளாக இருக்கும் எனத் தெரிகிறது. வரும் வாரத்தில் அதிக வரத்துக் காரணமாக விலை குறையலாம்.

மிளகு! (Pepper)

குறைவான உற்பத்தி மற்றும் அதிக தேவை காரணமாக மிளகு விலை உயர்ந்தது. ஆனால், வியட்நாமில் அறுவடை ஆரம்பித்துள்ளதால் ஏற்றுமதி ஆர்டர்கள் குறையலாம். இதன்காரணமாக அதிகப்படியான விலையேற்றம் தடுக்கப்படலாம். வியட்நாமில் இந்த ஆண்டு உற்பத்தி யானது கடந்த ஆண்டு அளவிலேயே இருக்கும் எனத் தெரிகிறது. சர்வதேச மிளகு கமிட்டி அறிக்கையின்படி, சர்வதேச நுகர்வு 3,87,000 டன்னாகவும், உற்பத்தி 3,33,500 டன்னாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. ஆக, வரும் வாரத்தில் தேவை காரணமாக விலை அதிகரிக்கலாம்.

ஏலக்காய்! (Cardamom)

சர்வதேச அளவில் தேவை அதிகரித் ததால் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஆனால், அதிக வரத்து காரணமாக விலையேற்றம் தடுக்கப்பட்டது. ஊக வணிகர்களின் பிராஃபிட் புக்கிங் காரணமாகவும், இருப்பு மற்றும் தேவை குறைவு காரணமாகவும் வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.