கோடைகாலம் தொடங்கிவிட்டாலே மின்தட்டுப்பாடு வந்துவிடுகிறது. கிராமங்களில் எட்டு மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருக்கிறது. வரும் மாதங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இன்வெர்ட்டர் கொண்டு சமாளிக்கலாம் என்றால் அதற்கும் மின்சாரம் தேவை. மின் தட்டுப்பாடு காலங்களில் சோலார் பவர் மூலம் மின் உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், சோலார் பவர் சிஸ்டத்துக்கு இப்போது நிறைய வரவேற்பு.

வீட்டு பயன்பாட்டுக்கான சோலார் பவர் சிஸ்டத்தைத் தயாரிப்பதற்கு அதிக முதலீடு தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷிங், அயர்ன் பாக்ஸ் என அதிக மின் ஆற்றல் தேவைப்படும் சாதனங்களை இயக்குவது என்றால் தான் அதிக முதலீடு தேவை. ஆனால், ஒரு டேபிள் ஃபேன், ஒரு மின்விளக்கு, செல்போன் சார்ஜர் என அடிப்படைத் தேவைகளை சமாளிக்கத் தேவைப்படும் சோலார் சிஸ்டத்தைத் தயாரிக்க சில லட்சம் ரூபாய் முதலீடு இருந்தாலே போதும்.

இந்த சோலார் சிஸ்டத்தின் விலை 10,000 - 30,000 ரூபாய்க்குள் இருப்பதால், உற்பத்தியாகும் பொருட்கள் எளிதாக விற்பனை ஆகும். தவிர, டெக்னிக்கல் தெரிந்தவர்கள் மட்டும்தான் தொழிலை செய்ய முடியும் என்பதில்லை. பயிற்சி யும் அனுபவமும் இருந்தால், இந்தத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யலாம்.

சோலார் பவர் சிஸ்டத்தைத் தயாரிக்க மத்திய மாற்று எரிசக்தி துறையால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் களிடமிருந்து தேவைப்படும் சாதனங் கள் கிடைத்துவிடும். எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் ஒரே தயாரிப்பை மட்டும் நம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதே யூனிட்டைவைத்து பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் செய்ய முடியும்.

இயந்திர வகைகள்!

எல்லாமே அசெம்பிளிங் வேலைகள்தான் என்பதால் இயந்திர வகைகளுக்கு அதிக முதலீடு தேவை யில்லை. பணியாளர்களுக்கு இருக்கை, பணியிட மேசைகள், விளக்குகள் என உள்கட்டமைப்பு வேலைகளை செய்துகொள்ள வேண்டும். எலெக்ட்ரானிக் மீட்டர்கள், பத்த வைப்புக் கருவி (soldering iron) மற்றும் பேக்கிங் கருவிகள் இருந்தால் போதும். இதற்கான முதலீடு அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்குள் முடித்துக்கொள்ளலாம்.

மூலப்பொருட்கள்!

இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனம்தான் முக்கியம். விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, நடைமுறை மூலதனத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். சர்க்யூட்கள், சோலார் பேனல்கள், சார்ஜ் கன்ட்ரோலர், வொயரிங், இன்வெர்ட்டர் பேட்டரி மற்றும் எல்இடி பல்புகள், ஃபேன் அனைத்து உதிரிபாகப் பொருட்களும் தனித்தனியாகக் கிடைக்கும். இவற்றை வாங்கி அசெம்பிளிங் செய்ய வேண்டும்.

ஒரு சோலார் பவர் சிஸ்டம் செய்வதற்கான மொத்த மூலப்பொருட் களையும் வாங்க 8,000 ரூபாய் வரை செலவாகும். முதற்கட்டமாக நாமே மேற்கொள்வதும், அதற்கடுத்து பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தும் இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.

திட்ட அறிக்கை!

இடம் : வாடகை
மின்சாரம்: 5hp
உள்கட்டமைப்பு வேலை : ரூ.2 லட்சம்

இந்தத் தொழில், நேரடி உற்பத்தி சார்ந்த தொழில் இல்லை என்பதால் மானியம் கிடைக்காது. திட்ட அறிக்கை அடிப்படையில் வங்கிக் கடன் பெறலாம். ஆனால், நடைமுறை மூலதனத்துக்கு வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தி மத்திய மாற்று எரிசத்தி துறையின் அங்கீகாரம் கிடைக்கிறபட்சத்தில் மானியம் பெறமுடியும்.

முதலீடு: 2 லட்சம்.

நடைமுறை மூலதனம் : 6 லட்சம் (இதற்கு வங்கிக் கடன் கிடைக்கும்)

திட்ட அனுமானங்கள்!

தினசரி 3 சோலார் பவர் சிஸ்டம் செய்ய முடியும். நாமே மொத்த வேலைகளையும் செய்வதைவிட, இரண்டு பணியாளர்களை வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒரு வேலையில் ஸ்பெஷலிஸ்ட் என்கிற அடிப்படையில் வேலைகளைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். டேமேஜ் மற்றும் கழிவுகளுக்கு வாய்ப்புகள் கிடையாது.

நாமே நேரடியாக ஈடுபடுவதால் தரம் குறித்த கண்காணிப்பு மற்றும் மார்க்கெட்டிங் மேற்பார்வைக்கு ஆட்கள் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், மார்க்கெட்டிங் செய்யத் திறமையான பணியாளர்கள் தேவை. நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களை இதற்கான சந்தையாக வைத்துக்கொள்ளலாம்.

ஒரு சிறிய யூனிட் என்பது சோலார் பவரில் இயங்கும் ஒரு டேபிள் ஃபேன், இரண்டு எல்இடி விளக்குகள், பண்பலை மற்றும் பென் டிரைவ் மூலம் பாடல் கேட்கும், செல்போன் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதி இருக்கும். சிறிய வீடுகள், சிறு கடைகளை நேரடியாக அணுகுவது போன்ற மார்க்கெட்டிங் நடைமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும்.

பணியாளர்கள்!

விற்பனையாளர்கள்: 2X12,000= 24,000
பணியாளர்கள் : 2X10,000 = 20,000
உதவியாளர்கள் : 2X6,000 = 12,000
மொத்தம் : 56,000

மொத்த விற்பனை!

20 வாட் பவர் கொண்ட பேனலை அடிப்படையாக வைத்து தினசரி மூன்று சோலார் பவர் சிஸ்டம் உற்பத்தி செய்யலாம். இதை அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

100 வாட் திறன் வரையிலான பேனல்களைப் பயன்படுத்தி இப்படியான போர்ட்டபிள் சோலார் சிஸ்டங்கள் தயாரிக்கலாம். அதிக பவர் கொண்ட சிஸ்டம் எனில் அதற்கேற்ப மின்சாதனங்களில் பயன்பாட்டையும் அதிகரித்துக்கொள்ளலாம்.

இதனடிப்படையில் ஒருநாள் வரவு ரூ.30,000 (3X10,000 = 30,000) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என வைத்துக்கொண்டால் மாத வருமானம்: ரூ.7,50,000

செலவுகள்!

ஒரு சோலார் பவர் சிஸ்டத்துக்கான உதிரிபாகங்கள் ரூ.8000-க்குள் வாங்கலாம். (பேனலுக்கேற்ப அதிக பவர் சிஸ்டம் தயாரிக்கும்போது விலை அதிகரிக்கும்!) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து உதிரிபாகங்களை வாங்கவேண்டும்.

ஒருவரிடமே அனைத்துப் பொருட் களும் கிடைக்காது. ஒவ்வொரு விற்பனையாளரும் ஒவ்வொரு பொருளை விற்பனை செய்வார். ஆனால், உதிரிபாகங்கள் தாராளமாகக் கிடைக்கிறது. தினசரி 3 சிஸ்டம் தயாரிக்க உதிரிபாகங்கள் ரூ.24,000.

மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால், உதிரிபாகங் களுக்கான மொத்த செலவு ரூ.6,00,000 (25X24,000=6,00,000).

போக்குவரத்துச் செலவு!

பேனல் மற்றும் யூனிட்டை அனுப்ப போக்குவரத்து செலவுக்குத் திட்டமிட வேண்டும். இது ஆர்டர்களுக்கு ஏற்பவும் தூரத்தைப் பொறுத்தும் வேறுபடும். என்றாலும், இதற்கென்று தனியாக ஒரு தொகையை ஒதுக்கிக்கொள்வது நல்லது.

மொத்த செலவுகள்! (ரூ)

மூலப்பொருட்கள் : 6,00,000
போக்குவரத்து : 10,000
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 56,000
விற்பனை செலவு : 5,000
மேலாண்மை செலவு : 5,000
பராமரிப்பு : 5,000

நடைமுறை மூலதன

வட்டி (12.5%) : 6,250
கடன் தவணை (60 மாதம்): 10,000
மொத்த செலவு : 7,07,250
மொத்த விற்பனை வரவு : 7,50,000
மொத்த செலவு : 7,07,250
லாபம் : 42,750

மழைக்காலத்தில் விற்பனை குறையலாம் என்றாலும், கோடைகாலம் மற்றும் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும்போது மார்க்கெட்டிங் செய்வதில் கவனம் செலுத்தினால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

படங்கள்: ப.சரவணக்குமார்.
(திட்ட அறிக்கை உதவி : குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம், சென்னை.)