Published:Updated:

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

Published:Updated:

கேள்வி - பதில்.

 ?  ஜவுளி ஏற்றுமதி செய்ய ரூ.10 லட்சம் தேவை. வங்கிக் கடன் கிடைக்குமா?

சசிந்திரன், திருச்சி. ஜி.கந்தசுப்ரமணியன்,
உதவி பொது மேலாளர் (தனிநபர் வங்கி சேவை), எஸ்.பி.ஐ.

''ஏற்றுமதி துறைக்கு வங்கிகள் முன்னுரிமைக் கடன் வழங்குகின்றன. இதில் ஏற்றுமதி செய்வதற்கான லைசென்ஸை கடன் வாங்கியிருப்பவர் வைத்திருக்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்யும் பொருட்களை எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்பதற்கான விவரத்தை சொல்ல வேண்டும். ஏனெனில், நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அந்த நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளதா என்பதை வங்கிகள் ஆராயும். ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட நாடாக இருந்தால் வங்கிக் கடன் கிடைக்காது. ஏற்றுமதி ஆர்டர்  பெற்றதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். மேலும், வாடிக்கையாளரின் அனுபவம் மற்றும் அவருடைய நிதிபலம் ஆகியவற்றையும் வங்கிகள் பார்த்துதான் கடன் வழங்கும்.''

?  என்னிடம் இருக்கும் ரூ.60 ஆயிரத்தை அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்ய  நினைக்கிறேன். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து எனக்கு இந்தத் தொகை தேவை. எனக்கேற்ற ஃபண்டுகளை கூறவும்.

வீரமணி, வேளச்சேரி. வி.டி.அரசு, நிதி ஆலோசகர்.

''நீங்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை டெம்பிள்டன் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட், ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட், பிர்லா கேஷ் மேனேஜர் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.''

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

?  கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?

சரவணன், சிவகங்கை. சங்கர், நிதி ஆலோசகர்.

''அரசுக் கடன் பத்திரங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்களை நேரடியாக வாங்கலாம்.  ஆர்.பி.ஐ-யினால் அனுமதிக்கப் பட்ட டீலர், முதன்மை டீலர்களிடம் கடன் பத்திரங்களை வாங்கலாம். இந்த டீலர்களின் பட்டியல் ஆர்.பி.ஐ-ன் இணையதளத்திலே உள்ளது.

இதற்கடுத்து இரண்டாம் நிலை சந்தை யான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தையில் கடன் பத்திரங்கள் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சந்தைகளில்  புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள கடன் பத்திரங்களை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

கடன் பத்திரங்களுக்கு தனியார் ரேட்டிங் நிறுவனங்கள் ரேட்டிங் வழங்குகின்றன. எனவே, கடன் பத்திரங்கள் வாங்குவதற்கு முன் இதைப் பார்ப்பது நல்லது.

கடன் பத்திரங்களில் புதிதாக முதலீடு செய்பவராக இருந்தால், முதலீடு செய் வதற்குமுன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து அனுபவம் பெற்றால் நல்லது.''  

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

?  மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். எனது சொந்த ஊரில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் வாங்கலாம் எனத் திட்ட மிட்டுள்ளேன். இதற்கு எனக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

அசோக் குமார், திருச்சி. எஸ்.சுப்புராமன்,
முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்.

''விவசாய நிலம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால், அது குறு, சிறு மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்பவர்களுக்குதான் வங்கிகள் கடன் வழங்கும்.'

? கடந்த ஒரு வருடத்துக்குமேலாக தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் என்னை திடீரென வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஜெயஸ்ரீ, நாகர்கோவில். முருகபாரதி, வழக்கறிஞர்.

''உங்களின் பிரச்னைக்கு சட்டப்படி வழக்குத் தொடர முடியும். அதற்குமுன் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2(கி) கீழ் நீங்கள் முறையீடு செய்யலாம்.   தொழிலாளர் ஆணையர் நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவைக்க முயற்சி செய்வார். இந்த முயற்சி தோல்வியடைந்தால் பிறகு தொழில் தகராறு சட்டம் பிரிவு 2(கி-2) கீழ் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.''  

ஜவுளி ஏற்றுமதிக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

? நான் மாதம் ரூ.25 ஆயிரம் சுயதொழில் மூலமாக சம்பாதிக்கிறேன். இன்னும் 3 வருடத்தில் 10 லட்சம் மதிப்புக்கு வீடு கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதற்காக மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்னால் சேமிக்க முடியும். நான் எந்தவகையான முதலீடுகளை செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தவும்.

ராமராஜ், கோவை. முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''மூன்று வருடத்தில் குறிக்கோள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால் நீங்கள் பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்வதன்மூலமாக இது கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகையில் 65 சதவிகிதம் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும், 35 சதவிகிதம் கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். வரக்கூடிய மூன்று வருடங்களில் கடன் மற்றும் ஈக்விட்டி சார்ந்த சந்தை நல்லவிதமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 14% வரை ஆண்டு வருமானம் கிடைக்கலாம்.  

நீங்கள் முதலீடு செய்யவுள்ள 20 ஆயிரம் ரூபாயை, மூன்றாகப் பிரித்து முதலீடு செய்யலாம். அதாவது, ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட்,  ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.7 ஆயிரம், பிர்லா சன்லைஃப் 95 ஃபண்டில் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்யலாம். அடுத்த மூன்று வருடத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதலீட்டுக்கு 14% ஆண்டு கூட்டு வட்டி வருமானம் கிடைத்தால்கூட சுமார் ரூ.9 லட்சம் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.''

படம்: எம்.உசேன்