கல்லூரியில் படிக்கும்போதே மற்றவர்களுக்கு நடனம் கற்றுத்தருவதன் மூலம் மாதம் 20,000-த்துக்கும் அதிகமாகச் சம்பாதிக் கிறார்கள் மதுரையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள். காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷினி, சேது இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆனந்த், கோவை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேணு ஆகிய மூவர்தான் அந்த மாணவர்கள். அவர்களை நாம் சந்தித்தோம்.

''ஆரம்பத்தில் நாங்கள் கல்லூரி களுக்கு இடையில் நடக்கும் போட்டி களில் பங்கேற்க / பயிற்சி மேற்கொள்ளத் தனிஇடம் வேண்டுமென்றுதான் இந்த இடத்தை வாடகைக்கு எடுத்தோம். நாங்கள் எல்லாரும் இங்கேதான் பயிற்சி எடுத்துக்கொண்டோம். இதுவரை 200-க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆடியுள்ளோம். தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் எங்கள் ஜூனியர்கள் தங்களுக்கும் நடனத்தைக் கற்றுத் தரும்படி கேட்டார்கள். இடமும் இருக்கிறது என்பதால் பிரச்னை எதுவும் இல்லாமல் கற்றுத்தந்து வருகிறோம்'' எனத் தங்களைப்பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டனர்.

நடனத்தின் மீது காதல்!

Òஹிப் ஹாப், ஃபோக், சால்சா போன்ற பலவகையான நடனங்களை நாங்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுத்தருகிறோம். நடனப் போட்டி களில் பங்கேற்று வெற்றிபெற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான் இடத்துக்கான வாடகை, பெரிய பெரிய கண்ணாடிகள், மியூசிக் சிஸ்டம், அனைவருக்கும் சீருடை, போட்டி நடக்கும் ஊர்களுக்குச் செல்லும் செலவு என்று அனைத்தையும் செய் வோம். வெவ்வேறு படிப்புகளைப் படித்துவரும் அதேநேரத்தில், நிறையக் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர் களுக்குப் பயிற்சியளித்தும் வருகிறோம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுபாஷினி பயிற்சி அளிப்பார். மாணவர்களுக்கு நானும் வேணுவும் பயிற்சி அளிப்போம். இதற்குத் தக்கபடி கட்டணத்தை வசூலித்து வருகிறோம்'' என்றார் ஆனந்த்.

மன அழுத்தத்தைப் போக்க..!

அடுத்து சுபாஷினி பேச ஆரம்பித்தார். ''கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக, இந்த நடனத்தை இல்லத்தரசிகள் மத்தியில் கொண்டு செல்ல நினைத்தோம். வீட்டிலிருக்கும் பெண்கள் எடை அதிகரிப்பால் சிரமப்படுகின்றனர். எடை குறைப்புக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்று தெரிந்து, அவர்களுக்கு நடனத்தின் மூலம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தோம். நடனத்தின் மூலம் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும் ஏரோபிக்ஸ் நடனத்தை அறிமுகம் செய்தோம்.

பொதுவாக, பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அவர்கள் ரிலாக்ஸாகவும், உடலை ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள இந்த வகை நடனம் உதவியாக இருக்கும். இந்த நடனத்தை மேற்கொள்ளும்போது டயட்டில் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. பெண்கள் எங்களிடம் வந்ததும் அவர்களது உயரம் மற்றும் எடையைக் கணக்கிட்டு அவர்களுக்கு எத்தனை மாதங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவோம். குறைந்தது 1 - 3 மாதம் வரை ஏரோபிக்ஸ் நடனப் பயிற்சி தருவோம்'' என்றார் சுபாஷினி.

நடனமே எங்கள் எதிர்காலம்!

அவரைத் தொடர்ந்து பேசினார் வேணு. ''இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதால் எடை குறைவதுடன் உடல்நலத்துக்கும் உதவும். அனைத்து வயதினரும் இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த நடனத்தைக் கற்றுத்தர அவர்கள் பயிற்சிபெறும் நேரத்தைப் பொறுத்து 1,000 ரூபாய் முதல் கட்டணம் வசூலிப்போம். இதுவரை 250 பேருக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளித்துள்ளோம்'' என்றார்.

''இந்த நடனப் பள்ளியின் மூலம் மாதம் 20,000 ரூபாய்க்குமேல் வருமானம் வருகிறது. இதை நடனப் பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம். தேவை என்கிறபோது பிரித்து எடுத்துக்கொள்வோம். நடனம்தான் எங்கள் எதிர்காலம். நாங்கள் தொடங்கிய இந்த நடனப் பள்ளியை இன்னும் பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆசை!'' என்றனர், இந்த மூவரும்.

படம்: பா.காளிமுத்து.