Published:Updated:

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

Published:Updated:

வந்ததும் வராததுமாக ஷேர்லக்கிடம் நாம் கேட்டது இதுதான். ''பாரம்பரியம் மிக்க மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு கூடியவிரைவில் மூடுவிழா நடத்தப் போவதாக தகவல் வருகிறதே, அந்த அளவுக்கு என்னதான் நடந்தது?''

''தென்னிந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (எம்எஸ்இ)-ன் செயல்பாடுகள் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் நிலை ஏற்பட்டி ருக்கிறது. கடந்த 2012 ஆண்டுதான் இந்தப் பங்குச் சந்தை தனது வெள்ளிவிழாவை கொண்டாடியது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் எம்எஸ்இ-ன் பங்குகள் என்எஸ்இ பிளாட்பாரத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தப் பங்குச் சந்தையில் ஏறக்குறைய 60 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. இந்த நிறுவனங்களின் டேர்னோவர் 2012-13-ம் ஆண்டில் சுமார் 5,000 கோடி ரூபாய்.

செபியின் விதிமுறைபடி, ஒரு பங்குச் சந்தை தொடர்ந்து இயங்க, அதில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஆண்டு டிரேடிங் டேர்னோவர் குறைந்தது 1,000 கோடி ரூபாயாகவும், பங்குச் சந்தையின் நிகர சொத்து மதிப்பு 100 கோடி ரூபாயாகவும் இருக்க வேண்டும். டிரேடிங் டேர்னோவரில் முன்னணியில் இருக்கும் எம்எஸ்இ நிகர சொத்து மதிப்பில் கீழே இருக்கிறது. 2011-12-ல் ரூ.35.21 கோடி லாபம் சம்பாதித்த எம்எஸ்இ, 2012-13-ல் ரூ.4.33 கோடிதான் லாபம் ஈட்டி இருக்கிறது.

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

இந்த நிலையில் நிகர சொத்து மதிப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், என்எஸ்இ-ன் துணை நிறுவனமான என்எஸ்சிசிஎல் (National Securities Clearing Corporation Limited) உடன் கூட்டுசேரத் திட்டமிட்டது. ஆனால், அது நிறைவேறுகிற மாதிரி இல்லை. அதனால் எம்எஸ்இ-க்கு இப்போது புதுச் சிக்கல் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்க எம்எஸ்இ இயக்குநர் குழு கூட்டம் அடுத்த வாரத்தில் நடக்க இருப்பதாகத் தகவல். தற்போது இந்தப் பங்குச் சந்தையில் சுமார் 200 டிரேடிங் மெம்பர்கள் இருக்கிறார்கள். இந்த எக்ஸ்சேஞ்ச் மூடும் நிலைக்குசெல்லக் காரணம் செபியா அல்லது என்.எஸ்.இ-யா என்று சென்னை புரோக்கர்களுக்கிடையே பெரிய விவாதம் நடக்கிறது'' என்று நீண்ட விளக்கம் தந்தவருக்கு, ஒரு கிண்ணத்தில் திராட்சைப்பழம் போட்ட ஐஸ்க்ரீமை தந்தோம்.

''தனியார் வங்கிப் பங்குகளில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் நோக்கத்துடன் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது. முன்னணி தனியார் வங்கிப் பங்குகளில் எஃப்ஐஐ-களின் முதலீட்டு வரம்பு ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. உதாரணத்துக்கு, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகளில் எஃப்ஐஐகள் முதலீட்டு வரம்பு முடிந்து விட்டது. இதை மனத்தில் கொண்டு தனியார் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது அவசியம்'' என்றார்.

''ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க்  ரிசல்ட் எப்படி?'' என்று கேட்டோம்.

ஷேர்லக் - எம்எஸ்இ மூடுவிழா என்எஸ்இ காரணமா?

''கடந்த மார்ச் காலாண்டில் ஐசிஐசிஐ பேங்க்-ன் நிகர லாபம் 15% அதிகரித்து ரூ.2,652 கோடியாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவு. இதர வருமானம், செயல்பாட்டு லாபம் அதிகரித்ததால் நிகர லாபம் ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. லாபம் குறைந்ததற்கு வாராக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித் திருப்பது ஒரு காரணம்.

ஆக்ஸிஸ் பேங்க் நிகர லாபம் 19% அதிகரித்து, ரூ.1,842 கோடியாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்க்கப் பட்டதைவிட அதிகம். இதற்கு காரணம், மற்ற வருமானம் மற்றும் வட்டி வருமானம் அதிகரித்ததே.  நிகர வட்டி வருமானம் 18.8% உயர்ந்து ரூ.3,165 கோடியாக உள்ளது. வட்டிசாரா வருமானம் 10.3% உயர்ந்து ரூ.2,213 கோடியாக உள்ளது'' என விலாவாரியாக எடுத்துச் சொன்னார்.

''ரயில்வே சார்ந்த பங்குகள் வேகமாக விலையேறி வருகின்றனவே?'' என்றோம்.

''பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ரயில்வே துறையில் அதிக மேம்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 100 சதவிகித அயல்நாட்டு நேரடி முதலீடும் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. அந்தவகை யில் டிடாகார்க் வேகன்ஸ், ஸ்டோன் இந்தியா, கெர்னெ’ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ், கலந்தி நிர்மான் போன்ற பங்குகளின் விலை கணிசமாக விலை உயர ஆரம்பித்துள்ளன. ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்!'' என்றார்.

''அண்மையில் ஐபிஓ வந்த ஒன்டர்லா ஹாலிடேஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே?'' என்றோம்.

''இந்த நிதி ஆண்டின் முதல் ஐபிஓ என்கிற பெருமையை பெற்றிருக்கும் ஒன்டர்லா ஹாலிடேஸ்-க்கு 38 மடங்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம் 1.23 கோடி பங்குகள் விற்பனைக்கு உள்ள நிலையில் 46.79 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பம் வந்துள்ளன. தகுதி வாய்ந்த நிறுவனங்களின் ஆதரவு 16.71 மடங்கு அதிகமாக உள்ளது'' என்று சொன்னார்.

மிச்சமிருந்த ஐஸ்கிரீமையும் சாப்பிட்டு முடித்தவர், ''சந்தை வேகமாக ஏறும் நிலையில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ''எளிதில் பணமாக்க முடியாத இல்லிக்விட் ஸ்டாக்ஸ் சந்தையின் ஏற்றத்தில் கண்டபடி விலை உயர்ந்து வருகிறது. இதுபோன்ற பங்குகளை அதிக வருமானம் தருகிறது என்று வாங்கினால், பின்னர் விற்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது என அனலிஸ்ட்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். உதாரணத்துக்கு, ஹிமால்யா இன்டர்நேஷனல் (இரு வாரத்தில் 65% உயர்வு), இன்டெக்ரா இன்ஜினீயரிங் இந்தியா (47%), பிகார் ஸ்பான்ச் (38% உயர்வு) போன்ற பங்குகளில் உஷாராக இருப்பது நல்லது'' என்று புறப்பட்டவரிடம், ''ஷேர் டிப்ஸ் உண்டா?'' என இழுத்தோம்.

''சந்தையின் ஏற்றத்தில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்து வருகின்றன. அடிப்படையில் வலுவான மிட் கேப் பங்குகளில் அடுத்த ஓராண்டில் சுமார் 25 - 35% வருமானம் கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், எல்நினோ காரணமாக பருவமழை குறைந்து விலைவாசி

ஏற்றத்தால் பணவீக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும். இதோ சில பங்குகள்:

ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், சுப்ரீம் இண்டஸ்ரீஸ், யெஸ் பேங்க், இந்தியன் ஹோட்டல்ஸ், கெய்ர்ன் இந்தியா.''