Published:Updated:

ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிப்பு!

நீரை.மகேந்திரன்

ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிப்பு!

நீரை.மகேந்திரன்

Published:Updated:

வீட்டு உபயோகப் பொருட்களில் ஸ்டீல் ஃபர்னிச்சர்களுக்கு தனி இடமுண்டு. மர ஃபர்னிச்சர்களைவிட நீண்ட காலம் உழைப்பவை; விலை குறைவானவை. என்பதால் ஸ்டீல் ஃபர்னிச்சர்கள்தான் மக்களின் தேர்வாக உள்ளது.

ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிப்பு!

வழக்கமான சந்தை உத்திகள் தவிர, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற சந்தைகளையும் விற்பனை இலக்கு களாக வைத்தால் இந்தத் தொழிலில்  தொடர்ந்து தாக்குபிடிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டீல் ஃபர்னிச்சர்கள், கோல்டு ரோல்டு ஷீட் (Cold rolled sheet) என்னும் சி.ஆர். இரும்பு ஷீட்களில் அவை தயாராவதுதான். இந்த இரும்பு ஷீட்கள் 18 - 24 கேஜி வரை என பல வகையில் கிடைக்கும். கேஜி இந்த ஷீட்களின் தடிமனை குறிப்பது. குறைந்த கேஜி ஷீட்கள் தடிமன் மற்றும் எடை குறைவாக இருக்கும். கேஜி அதிகரிக்க அதிகரிக்கத் தடிமனும், எடையும், விலையும் அதிகரிக்கும். விலைக்குத் தகுந்தாற்போல நமது தயாரிப்பை வைத்துக்கொள்ளலாம்.

ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிப்பு!

இயந்திரங்கள் மற்றும் மூலதனம்!

தகடு வெட்டும் (Shearing) இயந்திரம், மடக்கும் இயந்திரம், பவர் பிரஸ், வெல்டிங் இயந்திரம், கம்பிகளை வளைக்கும் இயந்திரம், ஹேண்ட் கிரைண்டிங் இயந்திரம், ஹேண்ட் வெல்டிங் இயந்திரம், பெயின்டிங் மற்றும் பவுடர் கோட்டிங் அமைப்பு, இதனோடு சில சில்லறை உபகரணங்கள் தேவை. இந்த இயந்திரங்களுடன் மின் இணைப்பும் அமைத்துக்கொள்ள ரூ.16 லட்சம் ஆகும்.

சி.ஆர் ஷீட்கள் தேவையான தடிமனில் தேர்ந்தெ டுத்து நமது வடிவமைப்புக்கேற்ப, வெட்டும் இயந்திரத்தில் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அவற்றை வளைக்கும் இயந்திரத்தில் தந்து தேவைக்கேற்ப வளைத்துக்கொள்ள வேண் டும். இந்த அமைப்புகளோடு கீல், தாழ்ப்பாள், பூட்டு, கைப்பிடி, மூடும் ராடு எனத் தேவையான அனைத்தையும் அத்துடன் இணைத்து பற்ற வைக்க வேண்டும். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்தபிறகு பெயின்ட் செய்வதற்கேற்ப பிரைமர் பெயின்ட் அடித்து, அதற்குப் பிறகு கலர் பெயின்ட் ஸ்ப்ரே செய்யவேண்டும். பல வடிவங் களில் பல சைஸ்களில் இந்தவகை ஸ்டீல் ஃபர்னிச்சர் செய்யலாம். சேர்கள் தவிர, பீரோ, கட்டில், நாற்காலிகள் எனப் பலவற்றையும் இந்த யூனிட்டிலேயே தயார் செய்யலாம்.

திட்ட அறிக்கை!

நிலம், கட்டடம் :      வாடகை

இயந்திரங்கள் :  ரூ.16 லட்சம்

நடைமுறை மூலதனம் :   ரூ.8 லட்சம்

மின் இணைப்பு மற்றும் இதர செலவுகள் :   ரூ.1 லட்சம்

மொத்தம் :  ரூ.25 லட்சம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலமும் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலமும் இந்தத் தொழிலை தொடங்க முடியும்.

நமது மூலதனம் (5%)     :         ரூ.1.25 லட்சம்

மானியம் 25%                      :           ரூ.6.25 லட்சம்

வங்கிக் கடன்                     :       ரூ.17.50 லட்சம்

இந்த யூனிட்டை வைத்து பீரோ தயாரிப்பதை மட்டும் கணக்குக்கு எடுத்துக்கொள்வோம்.  ஒரு நாளில் சராசரியாக 10 பீரோ வரை தயாரிக்க முடி யும். ஒரு பீரோ செய்ய 80 கிலோ சி.ஆர் ஷீட்கள் தேவை. ஒரு கிலோ ஷீட் ரூ.60 வரை ஆகும். இதற்குத் தேவையான ராடு, கைப்பிடி, கீல்கள், இதர இணைப்புப் பொருட்கள் மற்றும் பெயின்ட் செய்துமுடிக்க ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை ஆகும். நாம் ரூ.2,000 என வைத்துக்கொள்வோம்.

சி.ஆர் ஷீட்கள் 60 X 80    =        4,800

ஃபிட்டிங்குகள்    =     ரூ. 2,000

மொத்தம்                    :     ரூ.6,800

சராசரியாக ஒரு பீரோ செய்துமுடிக்க

ரூ.6,800 வரை செலவாகும்.

செலவுகள்

மின்சாரம் :  ரூ.10 ஆயிரம்

வேலையாட்கள்:

மேலாளர்    :     ரூ.15,000

பணியாளர்கள்   : 8 X 12,000 = ரூ.96,000

விற்பனையாளர்கள் : 2 X 8,000 = ரூ.16,000

உதவியாளர்கள் :   2 X 6,000 = ரூ.12,000

மொத்தம் :                    ரூ.1,39,000

ஒருநாள் உற்பத்தி 10 பீரோக்கள் எனில், மாதம் 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் 250 பீரோக்கள் வரை செய்யலாம். நாம் மாதம் சராசரியாக 200 என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இதற்கு மூலப்பொருள் செலவு 13.6 லட்சம் ரூபாய் ஆகும். (200X6,800)

ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிப்பு!

விற்பனை வரவு:

மேற்கண்ட வகையில் ஒரு பீரோ தயார் செய்கிறபோது அதை ரூ.8,500 வரை விற்பனை விலையாக நிர்ணயிக்கலாம். இது ஷோரூம்களில் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்வார்கள். நமது விற்பனை வரவு: ரூ.17,00,000 (200 X8,500 = 17,00,000)

மொத்த செலவு (ரூ)

வாடகை :       20,000

மூலப்பொருட்கள் :    13,60,000

மின்சாரம் :       10,000

வேலையாட்கள் :     1,39,000

கடன் வட்டி (12.5%) :       18,230

தவணை (60 மாதங்கள்) :       29,170

இயந்திர பராமரிப்பு :       10,000

மேலாண்மை செலவுகள் :       10,000

தேய்மானம் :       20,000

விற்பனை செலவு :       10,000

மொத்த செலவுகள் :    16,26,400

மொத்தவரவு :    17,00,000

லாபம் :       73,600

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சி.ஆர். பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism