பிரீமியம் ஸ்டோரி

சோயாபீன்! (Soybean)

''வரத்துக் குறைவு, தேவை காரணமாக சோயாபீனின் விலை கடந்த மூன்று வருடங் களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ரூ.4,858 லெவலில் வர்த்தகமாகி வருகிறது. சோயாபீன் முக்கிய உற்பத்தி மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடப்பு ஆண்டில் உற்பத்தி குறையும்.

இதனால் மொத்த உற்பத்தி, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.  

மேலும், தற்போது சந்தை களுக்கு தினசரி வரத்தாக சுமார் 2 லட்சம் பைகள் உள்ளது. சர்வதேச அளவில் சோயாபீன் உற்பத்தி செய்யும் முக்கிய உற்பத்தி நாடான அமெரிக்காவிலும் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோயா மீல், சோயா ஆயில் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் அது சோயாபீன் விலையில் எதிரொலிக்கலாம்.

தவிர, அண்மையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எல்நினோவால் உற்பத்தி பாதிப்படையலாம் என்றும் தெரிகிறது.

அக்ரி கமாடிட்டி!

இதையடுத்து வரும் வாரத்தில் சோயாபீன் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.4,860 - 5,000. சப்போர்ட் லெவல் - ரூ.4,710 - 4,630.''

 ஜீரகம்! (Jeera)

ஜீரகம் உற்பத்தி அதிகரித்த தால், கடந்தவாரத் தொடக்கத்தில் விலை குறைந்தே வர்த்த கமானது. எனினும், சர்வதேச அளவிலும், உள்நாட்டு தேவை யும் அதிகரித்ததன் காரணமாக வார இறுதியில்

அக்ரி கமாடிட்டி!

விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. இந்தியாவின் ஜீரகம் பயிரி டப்படும் பரப்பளவு  அதிகரித் திருந்தாலும், ஜீரகத்தை  ஏற்றுமதி செய்யும்  முக்கிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிய போர் பதற்றத்தால் ஜீரகம் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதனால்  ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவுக்குக் கிடைக்க

வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிகப்படியான உற்பத்தி அதிக விலையேற்றத்தைத் தடுக்கலாம்.

 மிளகு! (Pepper)

மிளகு விலை உற்பத்தி குறைவு காரணமாக கடந்த வாரம் விலை அதிகரித்து வர்த்தகமானது. மேலும் சந்தை அறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டிகளில் இல்லாத அளவு, இந்தப் பருவத்தில் மிளகு உற்பத்தி 40 சதவிகிதம் குறைந்துள்ளது.

சர்வதேச அளவிலும் மிளகு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் வியட்நாமிலும் உற்பத்தி குறைந்துள்ளது. வியட்நாமில் எதிர்பார்த்ததைவிட 25,000 மிளகு உற்பத்தி குறையும் என்று சொல்லப்படுகிறது.  

சர்வதேச சந்தையில் தேவையின் காரணமாக மிளகு விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் மிளகின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி!

 ஏலக்காய்! (Cardamom)

வரத்துக் குறைவு, வானிலை குறித்த கவலைகள் காரண மாகவும் கடந்த வாரம் விலை சற்று அதிகரித்தே வர்த்தக மானது. கடந்த வியாழக்கிழமை, ஏலக்காய் ஏலமிடும் சந்தைக்கு மொத்த வரத்து 70 டன்களாக இருந்தது. ஸ்பாட் சந்தையில் அதிகபட்ச விலையாகக் கிலோவுக்கு ரூ.1,193 வரை வர்த்தகமாகியது. சராசரி விலை யாக கிலோவுக்கு ரூ.876 வரை வர்த்தகமானது. ஏப்ரல் 14-வுடன் முடிவடைந்த காலத்தில், இந்தியாவில் ஏலக்காய் ஏலமிடும் சந்தைகளில் 18,794.07 டன் ஏலமிடப்பட்டுள்ளதாகவும், இதன் சராசரி விலை 620 ரூபாயாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் வாரத்தில் தேவை காரணமாக ஏலக்காய் விலை அதிகரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு