Published:Updated:

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

சிறுமுதலீட்டாளர்கள் உஷார்... சி.சரவணன்

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

சிறுமுதலீட்டாளர்கள் உஷார்... சி.சரவணன்

Published:Updated:

நம் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டு, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. பல பங்குகள் புதிய ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்திருக்கிறது. கூடவே, அடிப்படையில் வலுவில்லாத பல பங்குகளின் விலையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்தப் பங்குகளில் பல, பைசா பங்குகளாக இருக்கின்றன. அதாவது, பல பங்குகளின் விலை 10 ரூபாய்க்குள் இருக்கிறது. சில பங்குகளின் விலை சில நூறு ரூபாய்களுக்குள் இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் அடிப்படையை ஆராய்ந்தால், பெரிய பூஜ்ஜியம் மட்டுமே மிஞ்சுகிறது. விலை மலிவாக இருக்கிறது; வேகமாகவும் விலை உயருகிறது என்று நினைத்து, இந்தப் பங்குகளில் பல சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவிடுகிறார்கள்.

இந்த பைசா (பெறாத) பங்குகளின் விலை எப்படி ஏறுகிறது என்பதை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் மும்பையைச் சேர்ந்த பங்குத் தரகர் ஒருவர்.

''பைசா பங்குகள் எப்போதும் ஆபத்தானவை. அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரைக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு எப்போதும் இந்தப் பங்குகள் மீது இனம்புரியாத ஆர்வம் என்பதைப் புரிந்துகொண்ட ஒரு கோஷ்டி, இப்படி அடிப்படையே இல்லாத பங்குகளின் விலையைக் கண்டபடி விலை ஏற்றி லாபம் பார்க்கிறது. இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் நிறுவனம் சார்ந்தவர்களாகவோ அல்லது சாராதவர்களாகவோ இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

உண்மையைச் சொல்லப்போனால், இதுபோன்ற சில நிறுவனங்களின் புரமோட்டர்களேகூட பங்குகளின் விலையைக் கண்டபடி ஏற்றி லாபம் பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தின் புரமோட்டர்கள், விரிவாக்கத்துக்கு என வங்கிக் கடன் வாங்கி, அந்தத் தொகையைக் கொண்டு தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்கி, விற்றுச் செயற்கையான டிமாண்டை உருவாக்கி, பங்கின் விலையை உயர்த்தி லாபம் பார்த்திருக்கிறார்கள்.   ஆனால், விலை இன்னும் ஏறும் என முதலீடு செய்த சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் கதி அதோ கதிதான்' என்றவர், பைசா பங்குகளின்  விலை எப்படி ஏற்றப்படுகிறது, இதனால் எப்படிச் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் விளக்கிச் சொன்னார்.

''பொதுவாக, இதுபோன்ற பங்கின் விலை 10 ரூபாய்க்குள் இருக்கும். இதனை திடீரென 20 ரூபாய்க்கு ஏற்றுவார்கள். இப்படியே 40 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என ஏற்றிக்கொண்டே போவார்கள். 100 ரூபாய்க்குப் போனபின் திடீரென பங்கை விற்றுவிட்டு போய்விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது இந்தப் பங்கின் விலை ஏற்றத்தைப் பார்த்து முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள்தான். விலை இறங்க ஆரம்பிக்கத் தொடங்கியதும் உஷாராக இல்லை என்றால் பயங்கர இழப்பு ஏற்படும்.

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

இப்படிச் செயற்கையாக விலை ஏற்றப்பட்ட பங்குகளை, அதனை விலை ஏற்றியவர்கள் விற்கத் தொடங்கியதும் தடாரென்று சரியத் தொடங்கும். அப்போது சந்தையில் இந்த விலை இறக்கத்தைத் தாங்கி நிற்க (சப்போர்ட்) யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் விலை எந்த அளவுக்கு ஏறியதோ, அதேவேகத்தில் இறங்கும். அதாவது, 100 ரூபாயிலிருந்து பழையபடி 10 ரூபாய்க்குகூட இறங்கிவிடும். கடைசியாக, 100 ரூபாய்க்கு வாங்கிய முதலீட்டாளர்கள் 90 சதவிகித இழப்பைகூடச் சந்திக்கக்கூடும்' என்றவர், இதுபோன்ற நிறுவனப் பங்குகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஓர் உதாரணம் மூலம் விளக்கிச் சொன்னார்.

''உதாரணத்துக்கு, டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்குத் தனியாகத் தொழிற்சாலைகூடக் கிடையாது. இதன் டேர்னோவர் ஆண்டுக்கு ரூ.10 கோடிதான். நிறுவனத்தின் சொத்து என்று பார்த்தால், ரூ.10 லட்சத்துக்குக் கீழ். ஓராண்டில் ஒரு பங்கு ஈட்டி கொடுத்த வருமானம் (இபிஎஸ்) 1 ரூபாய்க்கும் கீழ். ஆனால், பி.இ விகிதம் ஏறக்குறைய 2600. ஆனால், மார்க்கெட் கேபிட்டலைசேஷன் மட்டும் 3,400 கோடி ரூபாய்க்குமேல். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? எல்லாம் பங்கின் விலை செயற்கையாக ஏற்றப்பட்டதால் வந்த விளைவு.

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

3,400 கோடி ரூபாய் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட இந்த நிறுவனத்தின் ஓராண்டு நிகர லாபம் வெறும் 1.5 கோடி ரூபாய்தான். அதாவது, யாராவது அந்த நிறுவனத்தின் மொத்தப்

வேகமாக விலையேறும் பைசா (பெறாத) பங்குகள்!

பங்குகளையும் விலை கொடுத்து வாங்கினால், அவர்களுக்குக் கம்பெனியின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 1.5 கோடி ரூபாயாகவே இருக்கும். அதற்குப் பதில், 3,400 கோடி ரூபாயை வங்கியில் போட்டால்கூட ஆண்டுக்கு ரூ.340 கோடி கிடைக்கும். இதுபோன்ற நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு மூலதனம் என்பது பெரும்பாலும் 10-15 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும்' என்றார்.

முதலீட்டாளர்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுரண்டிச் செல்கிற மாதிரியான பைசா பங்குகள் என்னென்ன என மும்பையைச் சேர்ந்த ஒரு அனலிஸ்ட்டிடம் கேட்டோம். அவர் ஒரு நீண்ட பட்டியலையே தந்தார்.

''முதலீட்டாளர்களின் பணத்துக்கு வேட்டு வைக்கும் பைசா பங்குகள் சந்தையில் பல இருக்கின்றன. குறிப்பாக, ஜாக்ரன் புரடக்ஷன், பிரீத்தி மெர்கன்டைல், ரான்டர் கார்ப், பிஎஃப்எல் இன்ஃபோடெக் உள்ளிட்ட பங்குகளைக் குறிப்பிடலாம். பொதுவாக, முகமதிப்புக்கு குறைவான பங்கு விலை கொண்ட பங்குகள், 20 சதவிகிதத்துக்குக் கீழ் நிறுவனர்களின் பங்கு மூலதனத்தைக் கொண்ட பங்குகள், சொந்தமாகத் தொழிற்சாலை அல்லது அலுவலகம் இல்லாத பங்குகள், மார்க்கெட் கேப்பிடலைசேஷனுக்கும் டேர்னோவர் மற்றும் நிகர லாபத்துக்கும் சற்றும் தொடர்பு இல்லாத நிலைகொண்ட பங்குகள், இ.பி.எஸ் பைசாவிலும் பிஇ விகிதம் 1000-க்கும் மேல் இருக்கும் பங்குகளைச் சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது மிக மிக நல்லது' என்றார்.

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அநியாயமாக மூலதனத்தை இழக்காமல் இருப்பது முதலீட்டாளர்களின் கையில்தான் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism