நவீன வாழ்க்கை முறையில் மக்களின் உணவுப் பழக்கங்கள் தினந்தோறும் மாறி வருகிறது. பரபரப்பான இந்த வாழ்க்கை முறையில் தயார் நிலையான உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கவே செய்கிறது. இதுமாதிரியான தொழில்களை அடையாளம் கண்டு, அதை வெற்றிகரமாகச் செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு தொழில்தான் பழக்கூழ், சாஸ், மற்றும் எசென்ஸ் தயாரிப்புத் தொழில்கள். ஹோட்டல்கள், மொத்த மற்றும் சில்லறை பலசரக்குக் கடைகள் மற்றும் ஏற்றுமதி என இதற்கான சந்தை வாய்ப்பு பெரிய அளவிலானது. தவிர, போட்டியாளர்களும் குறைவு என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கி, நல்ல லாபம் பார்க்கலாம்.

திட்ட அறிக்கை!

எல்லா வகையான பழங்களில் இருந்தும் பழக்கூழ் தயாரிக்கலாம். ஒரே யூனிட்டை வைத்து சீஸனுக்கு ஏற்ப உற்பத்தியை மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். நாம் இங்கு தக்காளி சாஸ் உற்பத்தி செய்வது குறித்த திட்ட அறிக்கையைப் பார்க்கலாம்.

நன்கு பழுத்த தக்காளிகளை வாங்கிவந்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து இதற்கெனப் பிரத்யேகமாக உள்ள இயந்திரம் மூலம் ஜூஸ் ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுடன், சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் இதர பொருட்களைச் சேர்த்து இந்தக் கலவையை 190 டிகிரி வெப்பநிலையில் மீண்டும் கொதிக்க வைத்து பிராசஸ் செய்யவேண்டும்.

இந்தக் கலவையைக் குளிர்வித்துத் தேவையான அளவுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். அனைத்து பிராசஸிங் வேலைகளுக்கும் இயந்திரம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் என்பதால் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலும், கலக்கப்படும் துணைப் பொருட்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

இயந்திரம்!

பழங்களைக் கழுவும் இயந்திரம், வேகவைக்கும் இயந்திரம், ஜூஸ் பிழியும் இயந்திரம், பாட்டிலில் அடைக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை ரூ.5 லட்சத்துக்குள் வாங்கி விடலாம். தவிர, சொந்த வாகனம், விளம்பரம் என அனைத்து தேவைகளுக்குமான மொத்த முதலீடு ரூ.28 லட்சம் ஆகும்.

மொத்த முதலீடு : ரூ.28 லட்சம்
நமது பங்கு 5% : ரூ.1,40,000
மானியம் 25% : ரூ.7,00,000
வங்கிக் கடன் 70% : ரூ.19,60,000

மூலப்பொருள்!

500 கிலோ உற்பத்திக்கு 4 ஆயிரம் கிலோ தக்காளி தேவைப்படும். கிலோ ரூ.10 என்கிற விலையில் வாங்கும்போது ரூ.40,000 ஆகும். மாதம் 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால், மாதத்துக்கு ரூ.10 லட்சம் ஆகும். இதுதவிர, சர்க்கரை 600 கிலோ, உப்பு, வினிகர், கலர் போன்ற இதர மூலப் பொருட்களுக்கான செலவு ரூ. 1 லட்சம்.

உற்பத்திக்குபின் அரை கிலோ வீதம் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறோம் என்றால், மாதத்துக்கு 25 ஆயிரம் பாட்டில்கள் தேவை. ஒரு பாட்டில் விலை ரூ.8. இதற்கு மாதம் ரூ.2 லட்சம் செலவாகும் இந்த பாட்டில்களை அட்டைப் பெட்டிகளில் அடைத்து பேக்கிங் செய்து அனுப்ப, ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆக, மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் செலவு ரூ.13.50 லட்சம்.

பணியாளர்கள் செலவு (ரூ)

மேலாளர் : 25,000
மேற்பார்வையாளர் : 20,000
திறன் பணியாளர் : 10,000
பணியாளர்கள் : 3X8,000 = 24,000

பேக்கிங் பணியாளர்கள் : 2X6 = 12,000
ஓட்டுநர் : = 15,000
உதவியாளர் : = 8,000
நிர்வாகப் பணியாளர்கள் : 2X10,000 = 20,000
மொத்தம் : ரூ.1,34,000

எரிபொருள் செலவு (ரூ)

மின்சாரம் : 6,000
தண்ணீர் : 5,000
பாய்லர் எரிபொருள் : 25,000
மொத்தம் : 36,000

நிர்வாகச் செலவுகள் (ரூ)

வாடகை : 20,000
அலுவலக நிர்வாகம் : 10,000
இயந்திர பராமரிப்பு : 10,000
ஏற்று, இறக்கு கூலி,
போக்குவரத்து : 25,000
விளம்பரம் : 1,00,000
இதர செலவுகள் : 20,000
வர்த்தகச் சலுகைகள் : 50,000
வரிகள் : 50,000
விற்பனை செலவு : 20,000
காப்பீடு : 20,000
மொத்தம் : 3.25 லட்சம்

நடைமுறை மூலதன செலவுகள் (ரூ)

சம்பளம் : 1.34 லட்சம்
மூலப்பொருள் மற்றும்
பேக்கிங் : 13.50 லட்சம்
எரிபொருள் : 36,000
நிர்வாகச் செலவுகள் : 3.25 லட்சம்

மொத்தம் : 18.45 லட்சம் (இதற்கு தனியாக வங்கியில் நடைமுறை மூலதனக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.)

கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)

நடைமுறை மூலதனம் குறுகிய காலம் (13.5%): 21,000
மூலதன கடனுக்கான வட்டி நீண்ட காலம் (13.5%): 22,050
மூலதன திருப்பம்
(60 மாதங்கள்) : 33,000
மொத்தம் : 76,050

விற்பனை வரவு!

உற்பத்திக்குப்பின் ஒரு கிலோ 170 என்கிற வகையில் இந்தத் தக்காளி சாஸை விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். அந்தவகையில் தினசரி 500 கிலோ உற்பத்தி என்கிற வகையில் விற்பனை வரவு ரூ.85 ஆயிரம். மாதம் 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால் மாத விற்பனை வரவு ரூ.21,25,000.

மொத்த வரவு : 21,25,000
மொத்த செலவு : 18,45,000
கடன் மற்றும் வட்டி
திருப்பம் : 76,050
லாபம் : 2,03,950

படங்கள்: வி.ராஜேஷ்
(திட்ட விவரங்கள் உதவி: டான்ஸ்டியா
எஃப்என்எஃப் சர்வீஸ் சென்டர், சென்னை.)